Skip to main content

Group 2 Previous Year Questions Topic Syllabus Wise - 2013

தமிழ் (Tamil)

Question 1

உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் இத்தொடரைக் கூறியவர்

Choices:

  • a) இளங்கோவடிகள்
  • b) சீத்தலை சாத்தனார்
  • c) கம்பர்
  • d) வால்மீகி
Show Answer / விடை

Answer: கம்பர்

Exam: Group 2 2013

Question 2

'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

Choices:

  • a) ஒட்டக்கூத்தர்
  • b) புகழேந்தி
  • c) குமரகுருபரர்
  • d) பகழிக்கூத்தர்
Show Answer / விடை

Answer: ஒட்டக்கூத்தர்

Exam: Group 2 2013

Question 3

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

Choices:

  • a) திருக்குறுந்தாண்டகம்
  • b) திருவெழுக்கூற்றிருக்கை
  • c) திருநெடுந்தாண்டகம்
  • d) திருவந்தாதி
Show Answer / விடை

Answer: திருவெழுக்கூற்றிருக்கை

Exam: Group 2 2013

Question 4

விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

Choices:

  • a) முதுமொழி மாலை
  • b) செந்தமிழ் இலக்கணம்
  • c) கொடுந்தமிழ் இலக்கணம்
  • d) தொன்னூல் விளக்கம்
Show Answer / விடை

Answer: தொன்னூல் விளக்கம்

Exam: Group 2 2013

Question 5

“எறும்பும் தன்கையில் எண் சாண்” - எனப்பாடியவர்

Choices:

  • a) கபிலர்
  • b) ஒட்டக்கூத்தர்
  • c) ஒளவையார்
  • d) புகழேந்தி
Show Answer / விடை

Answer: ஒளவையார்

Exam: Group 2 2013

Question 6

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?

Choices:

  • a) தைப்பாவை
  • b) திருப்பாவை
  • c) திருவெம்பாவை
  • d) காவியப்பாவை
Show Answer / விடை

Answer: திருப்பாவை

Exam: Group 2 2013

Question 7

காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?

Choices:

  • a) சிவஞான முனிவர்
  • b) பலபட்டடைச் சொக்கநாதர்
  • c) அழகிய சொக்க நாதர்
  • d) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
Show Answer / விடை

Answer: அழகிய சொக்க நாதர்

Exam: Group 2 2013

Question 8

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?

Choices:

  • a) பேராசிரியர்
  • b) அடியார்க்கு நல்லார்
  • c) நச்சினார்க்கினியர்
  • d) ந.மு.வேங்கடசாமி
Show Answer / விடை

Answer: நச்சினார்க்கினியர்

Exam: Group 2 2013

Question 9

கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை

Choices:

  • a) நச்சர்
  • b) திருமலையர்
  • c) அடியார்க்கு நல்லார்
  • d) தாமத்தர்
Show Answer / விடை

Answer: அடியார்க்கு நல்லார்

Exam: Group 2 2013

Question 10

"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?

Choices:

  • a) பாரதிதாசன்
  • b) கண்ணதாசன்
  • c) முடியரசன்
  • d) பாரதியார்
Show Answer / விடை

Answer: முடியரசன்

Exam: Group 2 2013

Question 11

'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்

Choices:

  • a) கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
  • b) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
  • c) கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
  • d) கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
Show Answer / விடை

Answer: கோவலன் கொலைக்களப்பட்ட இடம்

Exam: Group 2 2013

Question 12

பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?.

Choices:

  • a) வ.ரா
  • b) உ.வே.சா
  • c) கி.ஆ.பெ.வி
  • d) லா.ச.ரா
Show Answer / விடை

Answer: வ.ரா

Exam: Group 2 2013

Question 13

பொருந்தா இணையைத் தேர்க: சொல் பொருள்

Choices:

  • a) மா - அழகு
  • b) மீ - உயர்ச்சி
  • c) மூ - மூப்பு
  • d) மை - மேம்பாடு
Show Answer / விடை

Answer: மை - மேம்பாடு

Exam: Group 2 2013

Question 14

“ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

Choices:

  • a) அறிஞர் அண்ணா
  • b) வல்லிக்கண்ணன்
  • c) பட்டுக்கோட்டையார்
  • d) மீரா
Show Answer / விடை

Answer: வல்லிக்கண்ணன்

Exam: Group 2 2013

Question 15

“வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்” - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?

Choices:

  • a) இராசேந்திரன்
  • b) முதல் இராசராசன்
  • c) இராசாதிராசன்
  • d) இராசமகேந்திரன்
Show Answer / விடை

Answer: இராசேந்திரன்

Exam: Group 2 2013

Question 16

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?

Choices:

  • a) இல்லறவியல்
  • b) துறவறவியல்
  • c) ஊழியல்
  • d) பாயிரவியல்
Show Answer / விடை

Answer: இல்லறவியல்

Exam: Group 2 2013

Question 17

செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

Choices:

  • a) செய்தீர்
  • b) செய்வாய்
  • c) செய்தவன்
  • d) செய்தான்
Show Answer / விடை

Answer: செய்தவன்

Exam: Group 2 2013

Question 18

சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:

Choices:

  • a) “கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே”
  • b) "கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
  • c) "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
  • d) "களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்"
Show Answer / விடை

Answer: “கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே”

Exam: Group 2 2013

Question 19

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

Choices:

  • a) திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
  • b) முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்
  • c) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
  • d) குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட
Show Answer / விடை

Answer: இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே

Exam: Group 2 2013

Question 20

விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'

Choices:

  • a) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?
  • b) பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
  • c) பெருங்குணம் எப்போது வரும்?
  • d) பெறுவது எது?
Show Answer / விடை

Answer: பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?

Exam: Group 2 2013

Question 21

பொருந்தா இணையைக் கண்டறிக:

Choices:

  • a) தினம் - நாள்
  • b) நெருநல் - நேற்று
  • c) சலவர் - நல்லவர்
  • d) மாரன் - மன்மதன்
Show Answer / விடை

Answer: சலவர் - நல்லவர்

Exam: Group 2 2013

Question 22

வேர்ச்சொல் தேர்க: பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

Choices:

  • a) பற்றுக
  • b) பற்றற்றான்
  • c) பற்றி
  • d) பற்று
Show Answer / விடை

Answer: பற்று

Exam: Group 2 2013

Question 23

"நான்மணிமாலை" - என்ற சொற்றொடர் குறிப்பது

Choices:

  • a) முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
  • b) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
  • c) முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
  • d) முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
Show Answer / விடை

Answer: முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்

Exam: Group 2 2013

Question 24

சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது

Choices:

  • a) நுபுவத்துக் காண்டம்
  • b) விலாதத்துக் காண்டம்
  • c) ஹிஜ்ரத்துக் காண்டம்
  • d) மேற்கூறிய அனைத்தும்
Show Answer / விடை

Answer: நுபுவத்துக் காண்டம்

Exam: Group 2 2013

Question 25

‘வள்ளைக்கு உறங்கும் வளநாட' வள்ளை - என்பதன் பொருள் யாது?

Choices:

  • a) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
  • b) நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
  • c) கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
  • d) இவை எதுவும் இல்லை
Show Answer / விடை

Answer: நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு

Exam: Group 2 2013

Question 26

‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்

Choices:

  • a) தேவாரம்
  • b) திருவாசகம்
  • c) திருக்கோவையார்
  • d) திருப்பள்ளியெழுச்சி
Show Answer / விடை

Answer: திருவாசகம்

Exam: Group 2 2013

Question 27

“ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை” - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?

Choices:

  • a) சீர்மோனை அமைந்துள்ளது
  • b) சீர் முரண் அமைந்துள்ளது
  • c) சீர் இயைபு அமைந்துள்ளது
  • d) கீழ்க்கதுவாய்மோனை அமைந்துள்ளது
Show Answer / விடை

Answer: சீர் முரண் அமைந்துள்ளது

Exam: Group 2 2013

Question 28

தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

Choices:

  • a) வினாப் பொருள் தரும் வாக்கியம்
  • b) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
  • c) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
  • d) ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
Show Answer / விடை

Answer: ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்

Exam: Group 2 2013

Question 29

"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது'' எனக் கூறியவர்

Choices:

  • a) கி.வா.ஜ.
  • b) கி.ஆ.பெ.வி.
  • c) திரு.வி.க.
  • d) உ.வே.சா
Show Answer / விடை

Answer: கி.ஆ.பெ.வி.

Exam: Group 2 2013

Question 30

“தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” -இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு

Choices:

  • a) கொடுமையான
  • b) கடுமையான
  • c) எடுப்பான
  • d) உறுதியான
Show Answer / விடை

Answer: உறுதியான

Exam: Group 2 2013

Question 31

துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்

Choices:

  • a) மீரா
  • b) முடியரசன்
  • c) கண்ணதாசன்
  • d) பெருஞ்சித்திரனார்
Show Answer / விடை

Answer: பெருஞ்சித்திரனார்

Exam: Group 2 2013

Question 32

'ஏற்பாடு' என்பதன் பொருள்

Choices:

  • a) சூரியன் உதிக்கும் நேரம்
  • b) ஏற்றப்பாட்டுப்பாடுதல்
  • c) சந்திரன் தோன்றும் நேரம்
  • d) சூரியன் மறையும் நேரம்
Show Answer / விடை

Answer: சூரியன் மறையும் நேரம்

Exam: Group 2 2013

Question 33

'க' - என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?

Choices:

  • a) அரசன்
  • b) காற்று
  • c) மயில்
  • d) காத்தல்
Show Answer / விடை

Answer: காத்தல்

Exam: Group 2 2013

Question 34

‘சலவரைச் சாரா விடுதல் இனிதே' 'சலவர்' - என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்

Choices:

  • a) Sorrow full person
  • b) Importer
  • c) Violent person
  • d) Deceit full person
Show Answer / விடை

Answer: Deceit full person

Exam: Group 2 2013

Question 35

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Choices:

  • a) சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
  • b) தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
  • c) நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
  • d) பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
Show Answer / விடை

Answer: சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு

Exam: Group 2 2013

Question 36

செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.

Choices:

  • a) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
  • b) தச்சன் நாற்காலியைச் செய்தான்
  • c) நாற்காலியைச் செய்தவன் தச்சன்
  • d) நாற்காலியைத் தச்சன் செய்தான்
Show Answer / விடை

Answer: நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

Exam: Group 2 2013

Question 37

கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்

Choices:

  • a) கலித்தளை
  • b) வஞ்சித்தளை
  • c) இயற்சீர் வெண்டளை
  • d) வெண்சீர் வெண்டளை
Show Answer / விடை

Answer: வஞ்சித்தளை

Exam: Group 2 2013

Question 38

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக :

Choices:

  • a) பரிந்து × வெறுத்து
  • b) பரிந்து × விரும்பி
  • c) தெரிந்து × உணர்ந்து
  • d) தெரிந்து X ஆராய்ந்து
Show Answer / விடை

Answer: பரிந்து × வெறுத்து

Exam: Group 2 2013

Question 39

'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?

Choices:

  • a) மருதம்
  • b) பாலை
  • c) குறிஞ்சி
  • d) நெய்தல்
Show Answer / விடை

Answer: மருதம்

Exam: Group 2 2013

Question 40

பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது

Choices:

  • a) நெடுங்கடல்
  • b) செங்கடல்
  • c) கருங்கடல்
  • d) கருங்குயில்
Show Answer / விடை

Answer: செங்கடல்

Exam: Group 2 2013

Question 41

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Choices:

  • a) வீரமாமுனிவர் - பரமார்த்த குருகதை
  • b) தேவநேயப்பாவாணர் - தமிழர் திருமணம்
  • c) திரு.வி.க.- சைவத்திறவு
  • d) பெருஞ்சித்திரனார் - தமிழ்ச்சோலை
Show Answer / விடை

Answer: பெருஞ்சித்திரனார் - தமிழ்ச்சோலை

Exam: Group 2 2013

Question 42

பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு : செரு செறு

Choices:

  • a) சண்டை வயல்
  • b) போர் சிறிய
  • c) போர்க்களம் குளம்
  • d) கோபப்படு போரிடு
Show Answer / விடை

Answer: சண்டை வயல்

Exam: Group 2 2013

Question 43

'அழுது அடியடைந்த அன்பர்' – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

Choices:

  • a) அருணகிரியார்
  • b) சம்பந்தர்
  • c) சுந்தரர்
  • d) மாணிக்கவாசகர்
Show Answer / விடை

Answer: மாணிக்கவாசகர்

Exam: Group 2 2013

Question 44

'என்றுமுள தென்தமிழ்' - என்னும் தொடரை இயம்பியவர் யார்?

Choices:

  • a) கம்பர்
  • b) பாரதியார்
  • c) பாரதிதாசன்
  • d) வள்ளலார்
Show Answer / விடை

Answer: கம்பர்

Exam: Group 2 2013

Question 45

பதிதொறு புயல்பொழி தருமணி பணைத்ரு பருமணி பகராநெற் – இத்தொடரில் ‘புயல்' - என்னும் சொல்லிற்கு பொருள்

Choices:

  • a) வானம்
  • b) காற்று
  • c) மேகம்
  • d) நீர்
Show Answer / விடை

Answer: மேகம்

Exam: Group 2 2013

Question 46

கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Choices:

  • a) சே-சோலை
  • b) சோ - சிவப்பு
  • c) கா – மதில்
  • d) மா - விலங்கு
Show Answer / விடை

Answer: மா - விலங்கு

Exam: Group 2 2013

Question 47

'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?

Choices:

  • a) சுப்பிரமணிய பாரதியார்
  • b) சுத்தானந்த பாரதியார்
  • c) சோமசுந்தர பாரதியார்
  • d) சுப்ரமணிய சிவா
Show Answer / விடை

Answer: சுப்பிரமணிய பாரதியார்

Exam: Group 2 2013

Question 48

குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

Choices:

  • a) சூளாமணி
  • b) நாககுமார காவியம்
  • c) யசோதர காவியம்
  • d) நீலகேசி
Show Answer / விடை

Answer: நீலகேசி

Exam: Group 2 2013

Question 49

விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?

Choices:

  • a) அபிதான கோசம்
  • b) அபிதான சிந்தாமணி
  • c) விவேக சிந்தாமணி
  • d) சீவக சிந்தாமணி
Show Answer / விடை

Answer: அபிதான சிந்தாமணி

Exam: Group 2 2013

Question 50

"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?

Choices:

  • a) காந்திஜி
  • b) நேருஜி
  • c) இராஜாஜி
  • d) நேதாஜி
Show Answer / விடை

Answer: இராஜாஜி

Exam: Group 2 2013

Question 51

"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?

Choices:

  • a) வ.உ.சிதம்பரம்
  • b) டி. கே.சிதம்பரம்
  • c) சிதம்பர சுவாமி
  • d) சிதம்பர நாதன்
Show Answer / விடை

Answer: டி. கே.சிதம்பரம்

Exam: Group 2 2013

Question 52

திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

Choices:

  • a) யான் கண்ட இலங்கை
  • b) எனது இலங்கைச் செலவு
  • c) யான் கண்ட ஜப்பான்
  • d) உலகம் சுற்றிய தமிழன்
Show Answer / விடை

Answer: எனது இலங்கைச் செலவு

Exam: Group 2 2013

Question 53

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" - எனப்பாடியவர்

Choices:

  • a) அரிசில் கிழார்
  • b) மோசிகீரனார்
  • c) ஒளவையார்
  • d) பரணர்
Show Answer / விடை

Answer: மோசிகீரனார்

Exam: Group 2 2013

Question 54

சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

Choices:

  • a) பெரிய புராணம்
  • b) திருவிளையாடற்புராணம்
  • c) கந்தபுராணம்
  • d) திருவாசகம்
Show Answer / விடை

Answer: திருவிளையாடற்புராணம்

Exam: Group 2 2013

Question 55

பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

Choices:

  • a) திருநாவுக்கரசர்
  • b) திருஞானசம்பந்தர்
  • c) சுந்தரர்
  • d) காரைக்கால் அம்மையார்
Show Answer / விடை

Answer: திருஞானசம்பந்தர்

Exam: Group 2 2013

Question 56

சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?

Choices:

  • a) திருச்செங்குன்றம்
  • b) திருவெண்ணெய் நல்லூர்
  • c) திருச்செந்தூர்
  • d) திருவாரூர்
Show Answer / விடை

Answer: திருவெண்ணெய் நல்லூர்

Exam: Group 2 2013

Question 57

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

Choices:

  • a) மீரா
  • b) இன்குலாப்
  • c) தருமு சிவராமு
  • d) ந.பிச்சமூர்த்தி
Show Answer / விடை

Answer: தருமு சிவராமு

Exam: Group 2 2013

Question 58

மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்

Choices:

  • a) லாச. ராமாமிருதம்
  • b) சி. சு. செல்லப்பா
  • c) ந. பிச்சமூர்த்தி
  • d) தி.ஜானகிராமன்
Show Answer / விடை

Answer: ந. பிச்சமூர்த்தி

Exam: Group 2 2013

Question 59

முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

Choices:

  • a) குமர குருபரர்
  • b) பலபட்டடைச் சொக்கநாதர்
  • c) சேக்கிழார்
  • d) சிவஞான சுவாமிகள்
Show Answer / விடை

Answer: குமர குருபரர்

Exam: Group 2 2013

Question 60

இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்

Choices:

  • a) உ.வே. சாமிநாத அய்யர்
  • b) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  • c) சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்
  • d) தஞ்சைவாணன்
Show Answer / விடை

Answer: சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்

Exam: Group 2 2013

Question 61

'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

Choices:

  • a) 39 படலங்கள்
  • b) 30 படலங்கள்
  • c) 32 படலங்கள்
  • d) 36 படலங்கள்
Show Answer / விடை

Answer: 36 படலங்கள்

Exam: Group 2 2013

Question 62

பொருத்துக: புலவர் நூற்பெயர் (a) முடியரசன் 1. ஆனந்தத் தேன் (b) சச்சிதானந்தன் 2. மாங்கனி (c) குமரகுருபரர் 3. காவியப்பாவை (d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை

Choices:

  • a) 2 1 4 3
  • b) 3 2 4 1
  • c) 3 1 4 2
  • d) 1 3 2 4
Show Answer / விடை

Answer: 3 1 4 2

Exam: Group 2 2013

Question 63

மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?

Choices:

  • a) அகரு
  • b) அலர்
  • c) முகை
  • d) வீ
Show Answer / விடை

Answer: அகரு

Exam: Group 2 2013

Question 64

'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

Choices:

  • a) திரு.வி.க
  • b) கவிமணி
  • c) இரசிரமணி
  • d) நாமக்கல் கவிஞர்
Show Answer / விடை

Answer: கவிமணி

Exam: Group 2 2013

Question 65

‘கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?

Choices:

  • a) இன்பம்
  • b) வருமுன் காத்தல்
  • c) மகிழ்ச்சி
  • d) துன்பம்
Show Answer / விடை

Answer: துன்பம்

Exam: Group 2 2013

Question 66

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

Choices:

  • a) வைகுதல் வைகறை வைகலும் வைகல்
  • b) வைகறை வைகுதல் வைகல் வைகலும்
  • c) வைகலும் வைகல் வைகுதல் வைகறை
  • d) வைகல் வைகலும் வைகறை வைகுதல்
Show Answer / விடை

Answer: வைகல் வைகலும் வைகறை வைகுதல்

Exam: Group 2 2013

Question 67

வாக்கியங்களைக் கவனி: கூற்று (A) : எ.கா " நான் புத்தகம் கொண்டு வருகிறேன்' என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள் காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்

Choices:

  • a) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
  • b) இவற்றுள் (A) தவறு. ஆனால் (R) சரி
  • c) இவற்றுள் (A) சரி. ஆனால் (R) தவறு
  • d) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Show Answer / விடை

Answer: இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

Exam: Group 2 2013

Question 68

இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க: 'பண்புப் பெயர்'

Choices:

  • a) திட்பம்
  • b) ஆட்டம்
  • c) கோடல்
  • d) பெறுதல்
Show Answer / விடை

Answer: திட்பம்

Exam: Group 2 2013

Question 69

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

Choices:

  • a) தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
  • b) துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
  • c) தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
  • d) தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
Show Answer / விடை

Answer: தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு

Exam: Group 2 2013

Question 70

பொருந்தா இணையைக் கண்டறிக:

Choices:

  • a) சுவடி - நூல்
  • b) வெய்யோன் - திங்கள்
  • c) செட்டு - சிக்கனம்
  • d) சிந்தை - உள்ளம்
Show Answer / விடை

Answer: வெய்யோன் - திங்கள்

Exam: Group 2 2013

Question 71

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

Choices:

  • a) தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
  • b) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
  • c) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
  • d) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
Show Answer / விடை

Answer: தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

Exam: Group 2 2013

Question 72

'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்

Choices:

  • a) மூதுரை
  • b) நாலடியார்
  • c) பழமொழி நானூறு
  • d) நான்மணிக்கடிகை
Show Answer / விடை

Answer: பழமொழி நானூறு

Exam: Group 2 2013

Question 73

எவ்வகை வாக்கியம்? மாணவன் பாடம் படித்திலன்

Choices:

  • a) எதிர்மறைத் தொடர்
  • b) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
  • c) உடன்பாட்டுத் தொடர்
  • d) கலவைத் தொடர்
Show Answer / விடை

Answer: எதிர்மறைத் தொடர்

Exam: Group 2 2013

Question 74

தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்- எச்சத்தால் என்ற இணை

Choices:

  • a) அடி முரண்
  • b) அடி மோனை
  • c) அடி இயைபு
  • d) இன எதுகை
Show Answer / விடை

Answer: அடி இயைபு

Exam: Group 2 2013

Question 75

விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை'

Choices:

  • a) தமிழர்க்குப் பெருமை தராதது எது?
  • b) நமக்குள்ளே பேசுவது எது?
  • c) பழங்கதைகளால் என்ன நன்மை?
  • d) பழங்கதைகளின் மகிமை யாது?
Show Answer / விடை

Answer: தமிழர்க்குப் பெருமை தராதது எது?

Exam: Group 2 2013

Question 76

விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'

Choices:

  • a) இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
  • b) இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
  • c) இரட்டிற் பிரிந்திசையாதது எது?
  • d) இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
Show Answer / விடை

Answer: இரட்டிற் பிரிந்திசையாதது எது?

Exam: Group 2 2013

Question 77

“சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே” - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்

Choices:

  • a) கண்ணதாசன்
  • b) தஞ்சை இராமையாதாஸ்
  • c) மருதகாசி
  • d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
Show Answer / விடை

Answer: மருதகாசி

Exam: Group 2 2013

Question 78

கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?

Choices:

  • a) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
  • b) இராஜ தண்டனை
  • c) மாங்கனி
  • d) கொய்யாக்கனி
Show Answer / விடை

Answer: கொய்யாக்கனி

Exam: Group 2 2013

Question 79

உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?

Choices:

  • a) நிலவுப் பூ
  • b) சூரியகாந்தி
  • c) தேன்மழை
  • d) பூங்கொடி
Show Answer / விடை

Answer: தேன்மழை

Exam: Group 2 2013

Question 80

தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?

Choices:

  • a) பொய்கையாழ்வார்
  • b) நம்மாழ்வார்
  • c) குலசேகர ஆழ்வார்
  • d) பெரியாழ்வார்
Show Answer / விடை

Answer: நம்மாழ்வார்

Exam: Group 2 2013

Question 81

உமர்கய்யாம், ‘ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.

Choices:

  • a) எட்டடிச்செய்யுள்
  • b) இரண்டடிச் செய்யுள்
  • c) நான்கடிச் செய்யுள்
  • d) இவை எல்லாம் தவறானவை
Show Answer / விடை

Answer: நான்கடிச் செய்யுள்

Exam: Group 2 2013

Question 82

கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.

Choices:

  • a) அழுகை
  • b) தொல்லை
  • c) போக்கு
  • d) தொழுகை
Show Answer / விடை

Answer: தொல்லை

Exam: Group 2 2013

Question 83

செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.

Choices:

  • a) வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
  • b) தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
  • c) பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
  • d) வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
Show Answer / விடை

Answer: தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது

Exam: Group 2 2013

Question 84

'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது' – இக்குறளில் அடி எதுகையாவது.

Choices:

  • a) குணமென்னும் குன்றேறி
  • b) குன்றேறி நின்றார்
  • c) குணமென்னும் கணமேயும்
  • d) கணமேயும் காத்தல்
Show Answer / விடை

Answer: குணமென்னும் கணமேயும்

Exam: Group 2 2013

Question 85

வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல். பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Choices:

  • a) தனி வாக்கியம்
  • b) கலவை வாக்கியம்
  • c) செயப்பாட்டு வினை வாக்கியம்
  • d) பிறவினை வாக்கியம்
Show Answer / விடை

Answer: தனி வாக்கியம்

Exam: Group 2 2013

Question 86

பிறவினை வாக்கியத்தை கண்டறிக :

Choices:

  • a) புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
  • b) அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்
  • c) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
  • d) ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
Show Answer / விடை

Answer: அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்

Exam: Group 2 2013

Question 87

பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க : பண்புத்தொகை

Choices:

  • a) மென்கண்
  • b) செய்வினை
  • c) நன்கலம்
  • d) அருவிலை
Show Answer / விடை

Answer: செய்வினை

Exam: Group 2 2013

Question 88

'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

Choices:

  • a) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
  • b) வினையாலணையும் பெயர்
  • c) வியங்கோள் வினைமுற்று
  • d) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Show Answer / விடை

Answer: இரண்டாம் வேற்றுமைத்தொகை

Exam: Group 2 2013

Question 89

சரியானவற்றைத் தேர்க. பொருள் திணை 1. எதிரூன்றல் வெட்சி 2. மீட்டல் வஞ்சி 3. செருவென்றது வாகை 4. எயில்காத்தல் நொச்சி

Choices:

  • a) 1ம்,2ம் சரி
  • b) 2ம், 3ம் சரி
  • c) 3ம்,4ம் சரி
  • d) 1ம், 4ம் சரி
Show Answer / விடை

Answer: 3ம்,4ம் சரி

Exam: Group 2 2013

Question 90

பிரித்தெழுதுக: நெடுநாவாய்

Choices:

  • a) நெடு + நாவாய்
  • b) நெடுமை + நா + வாய்
  • c) நெடுமை + நாவாய்
  • d) நெடுநா + வாய்
Show Answer / விடை

Answer: நெடுமை + நாவாய்

Exam: Group 2 2013

Question 91

'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

Choices:

  • a) நற்றிணை
  • b) குறுந்தொகை
  • c) அகநானூறு
  • d) ஐங்குறுநூறு
Show Answer / விடை

Answer: குறுந்தொகை

Exam: Group 2 2013

Question 92

'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

Choices:

  • a) பகர்தல்
  • b) கலத்தல்
  • c) வீணாதல்
  • d) ஏமாறல்
Show Answer / விடை

Answer: வீணாதல்

Exam: Group 2 2013

Question 93

தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.

Choices:

  • a) நோயின்றி வாழ்கிறான்
  • b) மெல்ல நடந்தான்
  • c) நடந்து வந்தான்
  • d) நன்கு பாடினான்
Show Answer / விடை

Answer: நடந்து வந்தான்

Exam: Group 2 2013

Question 94

பொருத்துக: (a) கை 1. துன்பம் (b) நோ 2. கைப்பற்றுதல் (c) யா 3. ஒழுக்கம் (d) வௌ 4. ஒருவகை மரம்

Choices:

  • a) 2 4 3 1
  • b) 3 4 1 2
  • c) 3 2 4 1
  • d) 3 1 4 2
Show Answer / விடை

Answer: 3 1 4 2

Exam: Group 2 2013

Question 95

ஈற்றயலடி ‘சிந்தடி' பெற்று வரும் பா வகை

Choices:

  • a) நேரிசைச் சிந்தியல் வெண்பா
  • b) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
  • c) நிலைமண்டில ஆசிரியப்பா
  • d) நேரிசை ஆசிரியப்பா
Show Answer / விடை

Answer: நேரிசை ஆசிரியப்பா

Exam: Group 2 2013

Question 96

''சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.

Choices:

  • a) பேரறிஞர் அண்ணா
  • b) காந்தியடிகள்
  • c) பண்டித ஜவஹர்லால் நேரு
  • d) ஜி.யு. போப்
Show Answer / விடை

Answer: காந்தியடிகள்

Exam: Group 2 2013

Question 97

'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

Choices:

  • a) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
  • b) சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
  • c) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
  • d) வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
Show Answer / விடை

Answer: வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்

Exam: Group 2 2013

Question 98

உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.

Choices:

  • a) இந்தியா
  • b) குயில்
  • c) தமிழ்ச்சிட்டு
  • d) மணிக்கொடி
Show Answer / விடை

Answer: தமிழ்ச்சிட்டு

Exam: Group 2 2013

Question 99

மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

Choices:

  • a) கற்றது மறவாமை
  • b) ஒழுக்கம் உடைமை
  • c) கண்ணஞ்சப் படுதல்
  • d) வாய்மை உடைமை
Show Answer / விடை

Answer: கற்றது மறவாமை

Exam: Group 2 2013

Question 100

இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக: (a) வழிக்கரை 1. வினைத்தொகை (b) கரகமலம் 2. உரிச்சொற்றொடர் (c) பொங்குகடல் 3. ஆறாம் வேற்றுமைத்தொகை (d) உறுவேனில் 4. உருவகம்

Choices:

  • a) 3 2 4 1
  • b) 3 1 2 4
  • c) 3 4 1 2
  • d) 2 3 4 1
Show Answer / விடை

Answer: 3 4 1 2

Exam: Group 2 2013