Skip to main content

Group 2 Previous Year Questions Topic Syllabus Wise - 2024

தமிழ் (Tamil)

Question 1

நிழல்போலத் தொடர்ந்தான் - இது எவ்வகை உவமை?

Choices:

  • a) வினை உவமை
  • b) பயன் உவமை
  • c) வடிவ உவமை
  • d) உரு உவமை
Show Answer / விடை

Answer: வினை உவமை

Exam: Group 2 2024

Question 2

பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. எடுப்பார் கைப்பிள்ளை

Choices:

  • a) எதையும் கேட்காதவர்
  • b) எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை
  • c) யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
  • d) எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
Show Answer / விடை

Answer: யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்

Exam: Group 2 2024

Question 3

'அப்துல் நேற்று வருவித்தான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.

Choices:

  • a) எதிர்மறைவினை
  • b) பிறவினை
  • c) தன்வினை
  • d) உடன்பாட்டுவினை
Show Answer / விடை

Answer: பிறவினை

Exam: Group 2 2024

Question 4

மாணாக்கர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினா என்பதைக் கண்டறிக.

Choices:

  • a) ஏவல்வினா
  • b) ஐயவினா
  • c) கொளல்வினா
  • d) கொடைவினா
Show Answer / விடை

Answer: கொடைவினா

Exam: Group 2 2024

Question 5

பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Choices:

  • a) பரிவாதினி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறதா?
  • b) பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
  • c) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
  • d) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?
Show Answer / விடை

Answer: பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?

Exam: Group 2 2024

Question 6

பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு - ‘உணர்த்தினென்'.

Choices:

  • a) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
  • b) தன்மை பன்மை வினைமுற்று
  • c) தன்மை ஒருமை வினைமுற்று
  • d) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
Show Answer / விடை

Answer: தன்மை ஒருமை வினைமுற்று

Exam: Group 2 2024

Question 7

முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

Choices:

  • a) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
  • b) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
  • c) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
  • d) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
Show Answer / விடை

Answer: தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

Exam: Group 2 2024

Question 8

சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டெழுதுக.

Choices:

  • a) யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விது ஆங்கு
  • b) கணைகொடிது செவ்விது ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளல்
  • c) செவ்விது ஆங்கு அன்ன கணைகொடிது யாழ்கோடு, வினைபடு பாலால் கொளல்
  • d) கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்
Show Answer / விடை

Answer: கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்

Exam: Group 2 2024

Question 9

அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.

Choices:

  • a) தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை
  • b) தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்பேர்ல், தீவினை, துன்பங்கள், தூய்மை
  • c) தாய்போல், தவப்பெருஞ்சுடர், தீவினை, திருவிளக்கு, துன்பங்கள், தூய்மை
  • d) தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
Show Answer / விடை

Answer: தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை

Exam: Group 2 2024

Question 10

வேர்ச்சொல் கண்டறிக. நைந்தான்

Choices:

  • a) நஞ்சு
  • b) நை
  • c) நஞ்சன்
  • d) ஐந்து
Show Answer / விடை

Answer: நை

Exam: Group 2 2024

Question 11

'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.

Choices:

  • a) படிக்கிறேன்
  • b) படித்தேன்
  • c) படிப்போம்
  • d) படிப்பேன்
Show Answer / விடை

Answer: படிப்பேன்

Exam: Group 2 2024

Question 12

சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.

Choices:

  • a) தே-தேடுதல்
  • b) மீ - வான்
  • c) ஏ - ஏற்றம்
  • d) நா - நான்
Show Answer / விடை

Answer: மீ - வான்

Exam: Group 2 2024

Question 13

ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க. (a) பை 1. உண் (b) வை 2. புல் (c) மை 3. அன்பு (d) து 4. இளமை

Choices:

  • a) 1 3 4 2
  • b) 3 4 1 2
  • c) 1 2 3 4
  • d) 4 3 2 1
Show Answer / விடை

Answer: 4 3 2 1

Exam: Group 2 2024

Question 14

பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க. 'Renaissance'

Choices:

  • a) மீட்டுருவாக்கம்
  • b) மறுசுழற்சி
  • c) மறுமலர்ச்சி
  • d) மீள்சிந்தனை
Show Answer / விடை

Answer: மறுமலர்ச்சி

Exam: Group 2 2024

Question 15

பிழையான இணையைக் கண்டறிக.

Choices:

  • a) கல்லில் நார் உரித்தல் - ஆராய்ந்து பாராமல்
  • b) ஆயிரங்காலத்துப் பயிர் - நீண்ட காலமாக இருப்பு
  • c) கானல் நீர் - இல்லாத ஒன்று
  • d) கம்பி நீட்டுதல் - விரைந்து வெளியேறுதல்
Show Answer / விடை

Answer: கல்லில் நார் உரித்தல் - ஆராய்ந்து பாராமல்

Exam: Group 2 2024

Question 16

சந்திப்பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Choices:

  • a) கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
  • b) கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலை பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
  • c) கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதியில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
  • d) கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
Show Answer / விடை

Answer: கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.

Exam: Group 2 2024

Question 17

தவறான இணையைக் கண்டறிக.

Choices:

  • a) முரணி - உடன்பட்டு
  • b) பன்னகம் - பாம்பு
  • c) நகம் - மலை
  • d) கெந்தம் - பற்கள்
Show Answer / விடை

Answer: கெந்தம் - பற்கள்

Exam: Group 2 2024

Question 18

பொருத்துக : (a) முல்லைப்பாட்டு 1. நறுந்தொகை (b) பட்டினப்பாலை 2. வேளாண்வேதம் (c) நாலடியார் 3. வஞ்சி நெடும்பாட்டு (d) வெற்றிவேற்கை 4. நெஞ்சாற்றுப்படை

Choices:

  • a) 2 3 4 1
  • b) 4 3 2 1
  • c) 3 4 1 2
  • d) 2 1 4 3
Show Answer / விடை

Answer: 4 3 2 1

Exam: Group 2 2024

Question 19

பொருத்துக : (a) தமிழ்த்தூதர் 1. திருஞானசம்பந்தர் (b) பாலறாவாயன் 2. அப்பாதுரையார் (c) பன்மொழிப் புலவர் 3. சேதுப்பிள்ளை ரா.பி. (d) சொல்லின் செல்வர் 4. தனிநாயகம் அடிகள்

Choices:

  • a) 4 1 2 3
  • b) 1 2 3 4
  • c) 4 3 2 1
  • d) 3 4 1 2
Show Answer / விடை

Answer: 4 1 2 3

Exam: Group 2 2024

Question 20

ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்

Choices:

  • a) சிவஞான முனிவர்
  • b) மயிலைநாதர்
  • c) ஆறுமுகநாவலர்
  • d) இளம்பூரணர்
Show Answer / விடை

Answer: மயிலைநாதர்

Exam: Group 2 2024

Question 21

“திராவிடம்” என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்

Choices:

  • a) ஹீராஸ் பாதிரியார்
  • b) அகத்தியலிங்கம்
  • c) குமரிலபட்டர்
  • d) ஹோக்கன்
Show Answer / விடை

Answer: குமரிலபட்டர்

Exam: Group 2 2024

Question 22

நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது

Choices:

  • a) தஞ்சை பெரிய கோயில்
  • b) இராமேசுவரம் பெருங்கோயில்
  • c) திருச்சி திருவரங்கக் கோயில்
  • d) காஞ்சி பெரிய கோயில்
Show Answer / விடை

Answer: இராமேசுவரம் பெருங்கோயில்

Exam: Group 2 2024

Question 23

'தேவதுந்துபி' எந்த ஆட்டத்துக்குரிய இசைக் கருவி?

Choices:

  • a) மயிலாட்டம்
  • b) ஒயிலாட்டம்
  • c) தேவராட்டம்
  • d) காவடியாட்டம்
Show Answer / விடை

Answer: தேவராட்டம்

Exam: Group 2 2024

Question 24

“புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு கனிமொழிபேசி நீ களித்திருக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்

Choices:

  • a) முத்தமிழறிஞர் கலைஞர்
  • b) பேரறிஞர் அண்ணா
  • c) மூதறிஞர் இராசாசி
  • d) மு. வரதராசனார்
Show Answer / விடை

Answer: பேரறிஞர் அண்ணா

Exam: Group 2 2024

Question 25

“குமரிகண்ட நோய்க்குக் குமரி கொடு” இத்தொடரில் 'குமரி' என்னும் மூலிகை

Choices:

  • a) கறிவேப்பிலை
  • b) குப்பைமேனி
  • c) தூதுவளை
  • d) கற்றாழை
Show Answer / விடை

Answer: கற்றாழை

Exam: Group 2 2024

Question 26

பொருத்துக : (a) அன்னை முத்துலெட்சுமி 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம் (b) மூவலூர் இராமாமிர்தம் 2. சமூகத் தன்னார்வலர் (c) பண்டித ரமாபாய் 3. பெண் கல்வி (d) மலாலா 4. புற்றுநோய் மருத்துவமனை

Choices:

  • a) 1 2 3 4
  • b) 1 3 2 4
  • c) 4 1 2 3
  • d) 3 2 4 1
Show Answer / விடை

Answer: 4 1 2 3

Exam: Group 2 2024

Question 27

தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.

Choices:

  • a) நெல்லை
  • b) திருச்சி
  • c) மதுரை
  • d) காவிரிப்பூம்பட்டினம்
Show Answer / விடை

Answer: மதுரை

Exam: Group 2 2024

Question 28

ஆங்கில அரசால், ‘வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?

Choices:

  • a) பெரியார்
  • b) ம.பொ. சிவஞானம்
  • c) முத்துராமலிங்கனார்
  • d) ப. ஜீவானந்தம்
Show Answer / விடை

Answer: முத்துராமலிங்கனார்

Exam: Group 2 2024

Question 29

"இன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு" என்று உரையாற்றியவர்

Choices:

  • a) பேரறிஞர் அண்ணா
  • b) ரா.பி. சேதுப்பிள்ளை
  • c) மகாத்மா காந்தியடிகள்
  • d) மு. வரதராசனார்
Show Answer / விடை

Answer: பேரறிஞர் அண்ணா

Exam: Group 2 2024

Question 30

சென்ரியு மற்றும் லிமரைக்கூ என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்

Choices:

  • a) கவிக்கோ அப்துல் ரகுமான்
  • b) கவிவேந்தர் மு. மேத்தா
  • c) கவிஞர் ஈரோடு தமிழன்பன்
  • d) இரவீந்திரநாத் தாகூர்
Show Answer / விடை

Answer: கவிஞர் ஈரோடு தமிழன்பன்

Exam: Group 2 2024

Question 31

'பாவலர் மணி' என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்

Choices:

  • a) உவமைக் கவிஞர் சுரதா
  • b) பாவேந்தர் பாரதிதாசன்
  • c) கவிஞர் வாணிதாசன்
  • d) கவிஞர் முடியரசன்
Show Answer / விடை

Answer: கவிஞர் வாணிதாசன்

Exam: Group 2 2024

Question 32

தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று குறித்து கூறினார்.

Choices:

  • a) சங்க இலக்கியம் - குமரிலபட்டர்
  • b) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு - உ.வே. சாமிநாதர்
  • c) புறநானூறு - பரிதிமாற்கலைஞர்
  • d) நன்னூல் - ஜி.யு. போப்
Show Answer / விடை

Answer: ஆனந்தரங்கர் நாட்குறிப்பு - உ.வே. சாமிநாதர்

Exam: Group 2 2024

Question 33

ஜெயகாந்தன் இயற்றாத சிறுகதை எது?

Choices:

  • a) குருபீடம்
  • b) அறம்
  • c) யுக்சந்தி
  • d) புதிய வார்ப்புகள்
Show Answer / விடை

Answer: அறம்

Exam: Group 2 2024

Question 34

ஆண்மையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?

Choices:

  • a) வறியவருக்கு உதவுதல்
  • b) பகைவருக்கு உதவுதல்
  • c) நண்பனுக்கு உதவுதல்
  • d) உறவினருக்கு உதவுதல்
Show Answer / விடை

Answer: பகைவருக்கு உதவுதல்

Exam: Group 2 2024

Question 35

ஒழுகல் - இலக்கணக் குறிப்பு தருக.

Choices:

  • a) தொழிற்பெயர்
  • b) வினையெச்சம்
  • c) வினையாலணையும் பெயர்
  • d) பண்புத்தொகை
Show Answer / விடை

Answer: தொழிற்பெயர்

Exam: Group 2 2024

Question 36

திருக்குறளின் சரியான வரியை கொண்டு நிறைவு செய்க. 'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் ?

Choices:

  • a) வன்மையுள் எல்லாம் தலை
  • b) கெடுக்குந் தகைமை யவர்
  • c) பேணித் தமராக் கொளல்
  • d) பெற்றியார்ப் பேணிக் கொளல்.
Show Answer / விடை

Answer: வன்மையுள் எல்லாம் தலை

Exam: Group 2 2024

Question 37

கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்முன் நிறுத்தும் சந்தம்

Choices:

  • a) வில்லை மாறி, மாறி, எய்வதால் வரும் ஓசை
  • b) மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
  • c) உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை
  • d) மத்தளங்களின் இடி இசை
Show Answer / விடை

Answer: உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை

Exam: Group 2 2024

Question 38

பின்வரும் பாடல் எந்த படிம வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவற்றை எடுத்தெழுதுக. "யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும்” - ( 391 : 11-12)

Choices:

  • a) வினைப்படிமம்
  • b) மெய்ப்படிமம்
  • c) பயன்படிமம்
  • d) உருப்படிமம்
Show Answer / விடை

Answer: மெய்ப்படிமம்

Exam: Group 2 2024

Question 39

கலித்தொகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.

Choices:

  • a) நல்லந்துவனார்
  • b) சோழன் நல்லுருத்திரன்
  • c) சேரமான் பெருங்கடுங்கோ
  • d) இளநாகனார்
Show Answer / விடை

Answer: சோழன் நல்லுருத்திரன்

Exam: Group 2 2024

Question 40

'சிதவல்' - இச்சொல்லின் பொருள்.

Choices:

  • a) முரசம்
  • b) ஊன்றுகோல்
  • c) சோம்பல்
  • d) தலைப்பாகை
Show Answer / விடை

Answer: தலைப்பாகை

Exam: Group 2 2024

Question 41

சீறாப்புராணம் இவருடைய உதவியால் நிறைவுற்றது

Choices:

  • a) அப்துல் காதிர்
  • b) வள்ளல் சீதக்காதி
  • c) அப்துல் சமத்
  • d) அபுல்காசிம்
Show Answer / விடை

Answer: அபுல்காசிம்

Exam: Group 2 2024

Question 42

இரண்டிரண்டு அடிகள் கொண்ட ____ யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

Choices:

  • a) மோனை
  • b) எதுகை
  • c) இயைபு
  • d) ஒரூஉ
Show Answer / விடை

Answer: எதுகை

Exam: Group 2 2024

Question 43

பொருத்துக : (a) விசும்பு 1. தந்தம் (b) துலை 2. நெருப்பு (c) கனல் 3. யானை (d) களிறு 4. வானம் (e) மருப்பு 5. துலாக்கோல்

Choices:

  • a) 4 5 2 3 1
  • b) 3 2 1 4 5
  • c) 4 3 2 1 5
  • d) 2 1 5 4 3
Show Answer / விடை

Answer: 4 5 2 3 1

Exam: Group 2 2024

Question 44

கீர்த்தனை ____ வகைகளுள் ஒன்றாகும்.

Choices:

  • a) சங்க இலக்கியம்
  • b) நீதி இலக்கியம்
  • c) பக்தி இலக்கியம்
  • d) சிற்றிலக்கியம்
Show Answer / விடை

Answer: சிற்றிலக்கியம்

Exam: Group 2 2024

Question 45

'தெம்மாங்கு' - பிரித்தெழுதுக.

Choices:

  • a) தென் + பாங்கு
  • b) தென் + மாங்கு
  • c) தேன் + மாங்கு
  • d) தேன் + பாங்கு
Show Answer / விடை

Answer: தேன் + பாங்கு

Exam: Group 2 2024

Question 46

எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே ! -இப்பாடலடிகளை இயற்றியவர் ____ சித்தர் ஆவார்.

Choices:

  • a) குதம்பைச் சித்தர்
  • b) இடைக்காட்டுச் சித்தர்
  • c) பாம்பாட்டிச் சித்தர்
  • d) திருமூலர்
Show Answer / விடை

Answer: இடைக்காட்டுச் சித்தர்

Exam: Group 2 2024

Question 47

“திருப்பல்லாண்டு” பாடியவர்

Choices:

  • a) குலசேகராழ்வார்
  • b) ஆண்டாள்
  • c) பெரியாழ்வார்
  • d) திருப்பாணாழ்வார்
Show Answer / விடை

Answer: பெரியாழ்வார்

Exam: Group 2 2024

Question 48

தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களைக் கொண்ட சைவ அடியார்.

Choices:

  • a) திருநாவுக்கரசர்
  • b) சம்பந்தர்
  • c) சுந்தரர்
  • d) மாணிக்கவாசகர்
Show Answer / விடை

Answer: திருநாவுக்கரசர்

Exam: Group 2 2024

Question 49

‘தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?

Choices:

  • a) நாவுக்கரசர்
  • b) நக்கீரர்
  • c) திருமாளிகைத்தேவர்
  • d) திருமூலர்
Show Answer / விடை

Answer: திருமூலர்

Exam: Group 2 2024

Question 50

'காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்' இத்தொடர் உணர்த்துவது

Choices:

  • a) கவிதை எழுதுவது எளிது
  • b) கவிதை எழுதுவது அரிது
  • c) கவிதை எழுதக் காரிகைத் தேவையில்லை
  • d) பேரிகை கொட்டினால் பிழைக்கலாம்
Show Answer / விடை

Answer: கவிதை எழுதுவது அரிது

Exam: Group 2 2024

Question 51

ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.

Choices:

  • a) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
  • b) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
  • c) ஆலும் வேலும் பல்லுக்குறுதி
  • d) நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
Show Answer / விடை

Answer: நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

Exam: Group 2 2024

Question 52

"பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை

Choices:

  • a) முற்றெ துகை
  • b) கீழ்க்கதுவாய் எதுகை
  • c) பொழிப்பெதுகை
  • d) ஒரூஉ எதுகை
Show Answer / விடை

Answer: பொழிப்பெதுகை

Exam: Group 2 2024

Question 53

அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். எவ்வகை வாக்கியம்?

Choices:

  • a) செயப்பாட்டுவினை
  • b) செய்வினை
  • c) பிறவினை
  • d) தன்வினை
Show Answer / விடை

Answer: தன்வினை

Exam: Group 2 2024

Question 54

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. 'நான் திடலில் ஓடினேன்'

Choices:

  • a) கட்டளை வாக்கியம்
  • b) செய்வினை
  • c) தன்வினை
  • d) வினையெச்ச வாக்கியம்
Show Answer / விடை

Answer: தன்வினை

Exam: Group 2 2024

Question 55

பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க. 'குமரன் மழையில் நனையாமல் இல்லை'

Choices:

  • a) செய்தித் தொடர்
  • b) எதிர்மறைத் தொடர்
  • c) பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
  • d) கட்டளைத் தொடர்
Show Answer / விடை

Answer: பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்

Exam: Group 2 2024

Question 56

வஞ்சித்தளைக்குரிய சீர் அமைப்பு

Choices:

  • a) தேமா புளிமாங்காய்
  • b) தேமாங்கனி புளிமாங்காய்
  • c) கருவிளம் கூவிளங்காய்
  • d) கூவிளங்காய் தேமாங்கனி
Show Answer / விடை

Answer: தேமாங்கனி புளிமாங்காய்

Exam: Group 2 2024

Question 57

சொல்லின் வகையைக் கண்டறிக. 'வெண்மை'

Choices:

  • a) தொழிற்பெயர்
  • b) இரண்டாம் வேற்றுமை
  • c) வண்ணப் பண்புப்பெயர்
  • d) ஆகுபெயர்
Show Answer / விடை

Answer: வண்ணப் பண்புப்பெயர்

Exam: Group 2 2024

Question 58

வஞ்சி விருத்தம் என்பது

Choices:

  • a) குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
  • b) சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
  • c) குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
  • d) அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
Show Answer / விடை

Answer: சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது

Exam: Group 2 2024

Question 59

பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நவமணிகளை தெரிவு செய்க.

Choices:

  • a) நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
  • b) கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
  • c) கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
  • d) கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
Show Answer / விடை

Answer: கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்

Exam: Group 2 2024

Question 60

வினையெச்சம் - கண்டறிக.

Choices:

  • a) ஓடினான்
  • b) ஓடும்
  • c) ஓடிய
  • d) ஓடி
Show Answer / விடை

Answer: ஓடி

Exam: Group 2 2024

Question 61

வினைமுற்றைத் தேர்வு செய்க.

Choices:

  • a) வந்தனன்
  • b) வந்து
  • c) வந்தான்
  • d) வந்த
Show Answer / விடை

Answer: வந்தான்

Exam: Group 2 2024

Question 62

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. மாரி, மாறி

Choices:

  • a) பாதி, பறை
  • b) மேளம், ஒலித்தல்
  • c) மழை, வேறு
  • d) வீடு, ஒலித்தல்
Show Answer / விடை

Answer: மழை, வேறு

Exam: Group 2 2024

Question 63

ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க : (a) அளை 1. இளைத்தல் (b) களை 2. நீக்கு (c) தளை 3. புற்று (d) இளை 4. விலங்கு

Choices:

  • a) 2 3 1 4
  • b) 4 1 2 3
  • c) 3 2 4 1
  • d) 1 2 3 4
Show Answer / விடை

Answer: 3 2 4 1

Exam: Group 2 2024

Question 64

கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக. Delegate (டெலிகேட்)

Choices:

  • a) வடிவமைப்பு
  • b) பேராளர்
  • c) குறும்பெட்டி
  • d) மரபுத்தகவு
Show Answer / விடை

Answer: பேராளர்

Exam: Group 2 2024

Question 65

கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக. 'அறை’

Choices:

  • a) அறைதல்
  • b) அறைந்த
  • c) அறைந்தவர்
  • d) அறையும்
Show Answer / விடை

Answer: அறைந்தவர்

Exam: Group 2 2024

Question 66

இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.

Choices:

  • a) இரவு × பகல்
  • b) அகலாது × போகாது
  • c) தண்மை X வெம்மை
  • d) விருப்பு X வெறுப்பு
Show Answer / விடை

Answer: அகலாது × போகாது

Exam: Group 2 2024

Question 67

சரியாக பிரித்தெழுதப்பட்ட சொல்லை எடுத்தெழுதுக. அஞ்சிலோதி

Choices:

  • a) அஞ்சில் + ஓதி
  • b) அம் + சிலோதி
  • c) அம் + சில் + ஓதி
  • d) அம் + சில + ஓதி
Show Answer / விடை

Answer: அம் + சில + ஓதி

Exam: Group 2 2024

Question 68

பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக. ஊன்பொதியவிழா

Choices:

  • a) ஊன் + பொதிய + விழா
  • b) ஊன்பொதிய + விழா
  • c) ஊன் + பொதி + விழா
  • d) ஊன் + பொதி + அவிழா
Show Answer / விடை

Answer: ஊன் + பொதி + அவிழா

Exam: Group 2 2024

Question 69

எழுத்துவகை அறிந்து பொருத்துக : (a) இயல் 1. உயிர் முதல் உயிரீறு (b) புதிது 2. உயிர் முதல் மெய்யீறு (c) ஆணி 3. மெய்ம்முதல் மெய்யீறு (d) வரம் 4. மெய்ம்முதல் உயிரீறு

Choices:

  • a) 2 4 1 3
  • b) 3 2 1 4
  • c) 1 3 4 2
  • d) 1 4 2 3
Show Answer / விடை

Answer: 2 4 1 3

Exam: Group 2 2024

Question 70

தமிழ்ச்சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

Choices:

  • a) கால்டுவெல்
  • b) தேவநேயப் பாவாணர்
  • c) ம.பொ.சி
  • d) உ.வே.சா
Show Answer / விடை

Answer: தேவநேயப் பாவாணர்

Exam: Group 2 2024

Question 71

உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?

Choices:

  • a) துக்ளக்
  • b) குமுதம்
  • c) கல்கண்டு
  • d) ஆனந்த விகடன்
Show Answer / விடை

Answer: ஆனந்த விகடன்

Exam: Group 2 2024

Question 72

தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை ‘உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.

Choices:

  • a) வ.சுப. மாணிக்கனார்
  • b) தேவநேயப் பாவாணர்
  • c) மா. இராசமாணிக்கனார்
  • d) பரிதிமாற் கலைஞர்
Show Answer / விடை

Answer: பரிதிமாற் கலைஞர்

Exam: Group 2 2024

Question 73

வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்க் கவிஞர்

Choices:

  • a) சிற்பி
  • b) மு.மேத்தா.
  • c) ந. பிச்சமூர்த்தி
  • d) சுரதா
Show Answer / விடை

Answer: ந. பிச்சமூர்த்தி

Exam: Group 2 2024

Question 74

பொருத்துக : (a) காந்தியக் கவிஞர் 1. சுரதா (b) உவமைக் கவிஞர் 2. நாமக்கல் கவிஞர் (c) மக்கள் கவிஞர் 3. வாணிதாசன் (d) கவிஞரேறு 4. பட்டுக்கோட்டை

Choices:

  • a) 2 1 4 3
  • b) 4 3 2 1
  • c) 3 4 1 2
  • d) 1 2 3 4
Show Answer / விடை

Answer: 2 1 4 3

Exam: Group 2 2024

Question 75

"பிசிராந்தையார்" எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

Choices:

  • a) பாவேந்தர் பாரதிதாசன்
  • b) கவிஞர் வாணிதாசன்
  • c) கவியரசர் கண்ணதாசன்
  • d) கவிஞர் முடியரசன்
Show Answer / விடை

Answer: பாவேந்தர் பாரதிதாசன்

Exam: Group 2 2024

Question 76

''உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர்

Choices:

  • a) ஆபிரகாம் லிங்கன்
  • b) அறிஞர் அண்ணா
  • c) விவேகானந்தர்
  • d) கதே
Show Answer / விடை

Answer: அறிஞர் அண்ணா

Exam: Group 2 2024

Question 77

''மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்

Choices:

  • a) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • b) பரிதிமாற் கலைஞர்
  • c) தேவநேயப் பாவாணர்
  • d) சோமசுந்தர பாரதியார்
Show Answer / விடை

Answer: தேவநேயப் பாவாணர்

Exam: Group 2 2024

Question 78

''சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவிரியாறு. அந்நதியின் பெருமையாலேயே சோழவள நாடு சோறுடைத்து என்று கவிகள் புகழ்வாராயினர்” என்று உரை நிகழ்த்தியவர்

Choices:

  • a) திரு.வி. கலியாண சுந்தரனார்
  • b) பேரறிஞர் அண்ணா
  • c) காமராசர்
  • d) ரா.பி. சேதுப்பிள்ளை
Show Answer / விடை

Answer: ரா.பி. சேதுப்பிள்ளை

Exam: Group 2 2024

Question 79

கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350. கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள். கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.

Choices:

  • a) கூற்று 1, 2 சரி, 3 தவறு
  • b) கூற்று 3, 2 சரி, 1 தவறு
  • c) கூற்று 1, 2 தவறு, 3 சரி
  • d) கூற்று 2, 3 தவறு, 1 சரி
Show Answer / விடை

Answer: கூற்று 1, 2 சரி, 3 தவறு

Exam: Group 2 2024

Question 80

மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?

Choices:

  • a) மூவகை
  • b) ஐவகை
  • c) நான்கு
  • d) ஏழு
Show Answer / விடை

Answer: ஐவகை

Exam: Group 2 2024

Question 81

தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?

Choices:

  • a) முதல் தலைமுறை
  • b) இரண்டாம் தலைமுறை
  • c) மூன்றாம் தலைமுறை
  • d) நான்காம் தலைமுறை
Show Answer / விடை

Answer: இரண்டாம் தலைமுறை

Exam: Group 2 2024

Question 82

கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது?

Choices:

  • a) மயிலாட்டம்
  • b) காவடியாட்டம்
  • c) ஒயிலாட்டம்
  • d) தேவராட்டம்
Show Answer / விடை

Answer: மயிலாட்டம்

Exam: Group 2 2024

Question 83

கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்

Choices:

  • a) சைவத்திறவு
  • b) நாயன்மார் வரலாறு
  • c) மனுமுறை கண்ட வாசகம்
  • d) தமிழ்சோலை
Show Answer / விடை

Answer: மனுமுறை கண்ட வாசகம்

Exam: Group 2 2024

Question 84

'விளக்குகள் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்

Choices:

  • a) ஜவஹர்லால் நேரு
  • b) லிலியன் வாட்சன்
  • c) கீட்ஸ்
  • d) வோர்ட்ஸ் வொர்த்
Show Answer / விடை

Answer: லிலியன் வாட்சன்

Exam: Group 2 2024

Question 85

உலகளாவிய தமிழர்கள் - சிறப்பும் பெருமையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்

Choices:

  • a) மண்ணும் மக்களும்
  • b) புயலிலே ஒரு தோணி
  • c) கடற்புரத்தில்
  • d) தீவுக்கரை
Show Answer / விடை

Answer: புயலிலே ஒரு தோணி

Exam: Group 2 2024

Question 86

'தமிழ் நாடகக்கலையின் பெர்னாட்ஷா' என்று அறிஞர் அண்ணா யாரால் பாராட்டப் பெற்றார்?

Choices:

  • a) திரு.வி. கலியாண சுந்தரனார்
  • b) கலைஞர் கருணாநிதி
  • c) கல்கி
  • d) மு. வரதராசனார்
Show Answer / விடை

Answer: கல்கி

Exam: Group 2 2024

Question 87

புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?

Choices:

  • a) நாலடியார்
  • b) முதுமொழிக்காஞ்சி
  • c) ஏலாதி
  • d) பழமொழி
Show Answer / விடை

Answer: புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?

Exam: Group 2 2024

Question 88

வெண்குடை - இலக்கணக் குறிப்பு தருக.

Choices:

  • a) ஆகுபெயர்
  • b) வினைத்தொகை
  • c) தொழிற்பெயர்
  • d) பண்புத்தொகை
Show Answer / விடை

Answer: பண்புத்தொகை

Exam: Group 2 2024

Question 89

திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்

Choices:

  • a) கணிமேதாவியார்
  • b) கம்பர்
  • c) நல்லாதனார்
  • d) இளங்கோவடிகள்
Show Answer / விடை

Answer: நல்லாதனார்

Exam: Group 2 2024

Question 90

சிருங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?

Choices:

  • a) நந்திவர்மன்
  • b) குகன்
  • c) அப்பூதியடிகள்
  • d) मे
Show Answer / விடை

Answer: குகன்

Exam: Group 2 2024

Question 91

'அனகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?

Choices:

  • a) வீடணன்
  • b) இராமன்
  • c) சுக்ரீவன்
  • d) குகன்
Show Answer / விடை

Answer: இராமன்

Exam: Group 2 2024

Question 92

யாழின் வகைகள் யாவை?

Choices:

  • a) 4
  • b) 5
  • c) 6
  • d) 7
Show Answer / விடை

Answer: 4

Exam: Group 2 2024

Question 93

'குடிமக்கள் காப்பியம்' - எனப்படுவது

Choices:

  • a) சிலப்பதிகாரம்
  • b) மணிமேகலை
  • c) சீவக சிந்தாமணி
  • d) வளையாபதி
Show Answer / விடை

Answer: சிலப்பதிகாரம்

Exam: Group 2 2024

Question 94

'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட' இப்பாடலில் பயின்று வரும் அணி

Choices:

  • a) தீவக அணி
  • b) வஞ்சப்புகழ்ச்சி அணி
  • c) தற்குறிப்பேற்ற அணி
  • d) உவமையணி
Show Answer / விடை

Answer: தற்குறிப்பேற்ற அணி

Exam: Group 2 2024

Question 95

உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்

Choices:

  • a) திணைமாலை
  • b) முதுமொழிமாலை
  • c) கார்நாற்பது
  • d) இனியவை நாற்பது
Show Answer / விடை

Answer: முதுமொழிமாலை

Exam: Group 2 2024

Question 96

பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?

Choices:

  • a) நம்மாழ்வார்
  • b) பெரியாழ்வார்
  • c) ஆண்டாள்
  • d) குலசேகராழ்வார்
Show Answer / விடை

Answer: குலசேகராழ்வார்

Exam: Group 2 2024

Question 97

இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்

Choices:

  • a) உவமை அணி
  • b) சிலேடை அணி
  • c) உருவக அணி
  • d) தற்குறிப்பேற்ற அணி
Show Answer / விடை

Answer: சிலேடை அணி

Exam: Group 2 2024

Question 98

மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது ?

Choices:

  • a) சிவகாமியின் சரிதம்
  • b) சிவகாமியின் செல்வன்
  • c) சிவகாமியின் வரலாறு
  • d) சிவகாமியின் சபதம்
Show Answer / விடை

Answer: சிவகாமியின் சரிதம்

Exam: Group 2 2024

Question 99

இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு

Choices:

  • a) 1891
  • b) 1881
  • c) 1871
  • d) 1901
Show Answer / விடை

Answer: 1891

Exam: Group 2 2024

Question 100

'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்

Choices:

  • a) இடைக்காட்டுச் சித்தர்
  • b) குதம்பைச் சித்தர்
  • c) பட்டினத்தார்
  • d) சிவவாக்கியர்
Show Answer / விடை

Answer: குதம்பைச் சித்தர்

Exam: Group 2 2024