Skip to main content

Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2013

தமிழ் (Tamil)

Question 1

பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்

Choices:

  • a) கீரியும் பாம்பும் போல
  • b) கிணற்றுத் தவளை போல
  • c) இலவு காத்த கிளி போல
  • d) அனலிடைப்பட்ட புழு போல
Show Answer / விடை

Answer: கிணற்றுத் தவளை போல

Exam: Group 4 2013

Question 2

இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை

Choices:

  • a) நெடுந்தேர்
  • b) மலர்ச்சேவடி
  • c) செங்கோல்
  • d) கருங்குரங்கு
Show Answer / விடை

Answer: மலர்ச்சேவடி

Exam: Group 4 2013

Question 3

பெயர்ச் சொல்லின் வகையறிதல் :
'கரியன்' - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.

Choices:

  • a) சினைப் பெயர்
  • b) பொருட் பெயர்
  • c) பண்புப் பெயர்
  • d) தொழிற் பெயர்
Show Answer / விடை

Answer: பண்புப் பெயர்

Exam: Group 4 2013

Question 4

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.

Choices:

  • a) Affection
  • b) Affliction
  • c) Attraction
  • d) Addition
Show Answer / விடை

Answer: Affliction

Exam: Group 4 2013

Question 5

பெயர்ச் சொல்லின் வகையறிதல் :
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.

Choices:

  • a) பண்புப் பெயர்
  • b) தொழிற் பெயர்
  • c) காலப் பெயர்
  • d) குணப் பெயர்
Show Answer / விடை

Answer: காலப் பெயர்

Exam: Group 4 2013

Question 6

"இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.

Choices:

  • a) An assistant
  • b) Supporter
  • c) Staff
  • d) Friends
Show Answer / விடை

Answer: Staff

Exam: Group 4 2013

Question 7

தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

Choices:

  • a) இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
  • b) இலக்கியா புத்தாடை அணிந்தாள்.
  • c) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
  • d) இலக்கியா புத்தாடை அணியாள்
Show Answer / விடை

Answer: இலக்கியா புத்தாடை அணிந்தாள்.

Exam: Group 4 2013

Question 8

திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை

Choices:

  • a) நானூற்று முப்பது
  • b) இருநூற்று ஒன்று
  • c) முந்நூற்று ஆறு
  • d) நானூற்று எழுபது
Show Answer / விடை

Answer: நானூற்று முப்பது

Exam: Group 4 2013

Question 9

தழீஇ : இலக்கணக் குறிப்பு தருக.

Choices:

  • a) செய்யுளிசை அளபெடை
  • b) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • c) இன்னிசையளபெடை
  • d) சொல்லிசை அளபெடை
Show Answer / விடை

Answer: சொல்லிசை அளபெடை

Exam: Group 4 2013

Question 10

உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?

Choices:

  • a) உலகு
  • b) உலவு
  • c) உளது
  • d) உளம்
Show Answer / விடை

Answer: உலவு

Exam: Group 4 2013

Question 11

ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

Choices:

  • a) அவன் கவிஞன் அல்லர்
  • b) அவன் கவிஞன் அன்று
  • c) அவன் கவிஞன் அல்லன்
  • d) அவன் அல்லன் கவிஞன்
Show Answer / விடை

Answer: அவன் கவிஞன் அல்லன்

Exam: Group 4 2013

Question 12

ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை.

Choices:

  • a) துளசி
  • b) கீழாநெல்லி
  • c) தூதுவளை
  • d) கற்றாழை
Show Answer / விடை

Answer: தூதுவளை

Exam: Group 4 2013

Question 13

இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
வினைத்தொகை

Choices:

  • a) செந்நாய்
  • b) சூழ்கழல்
  • c) வெண்மதி
  • d) கண்ணோட்டம்
Show Answer / விடை

Answer: சூழ்கழல்

Exam: Group 4 2013

Question 14

கோடிட்ட இடத்தை நிரப்புக :
தில்லையாடி வள்ளியம்மை ___________ நாட்டில் பிறந்தார்.

Choices:

  • a) அமெரிக்கா
  • b) இத்தாலி
  • c) இந்தியா
  • d) தென்னாப்பிரிக்கா
Show Answer / விடை

Answer: தென்னாப்பிரிக்கா

Exam: Group 4 2013

Question 15

'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?

Choices:

  • a) அசதிக் கோவை
  • b) ஆசாரக் கோவை
  • c) திருக்கோவையார்
  • d) மும்மணிக் கோவை
Show Answer / விடை

Answer: திருக்கோவையார்

Exam: Group 4 2013

Question 16

பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.

Choices:

  • a) வெண்பா
  • b) விருத்தப்பா
  • c) கலி விருத்தம்
  • d) கலித்தாழிசை
Show Answer / விடை

Answer: கலித்தாழிசை

Exam: Group 4 2013

Question 17

பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) களவழி நாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்

Choices:

  • a) (a) 3 (b) 1 (c) 2 (d) 4
  • b) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
  • c) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
  • d) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 1 (c) 2 (d) 3

Exam: Group 4 2013

Question 18

பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் - இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?

Choices:

  • a) பிறவினை
  • b) தன்வினை
  • c) கலவை
  • d) செய்யப்பாட்டு வினை
Show Answer / விடை

Answer: தன்வினை

Exam: Group 4 2013

Question 19

பொருந்தாத தொடரைக் கண்டறிக.

Choices:

  • a) ஒறுத்தார் - பொறுத்தார்
  • b) அஞ்சாமை- துஞ்சாமை
  • c) அறிவுடையார் - அறிவிலார்
  • d) வையார் - வைப்பர்
Show Answer / விடை

Answer: அஞ்சாமை- துஞ்சாமை

Exam: Group 4 2013

Question 20

வினாவிற்குரிய விடை எழுதுக:
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?

Choices:

  • a) கல்விப் பணி ஆற்றிய நாள்
  • b) கல்வி வளர்ச்சி நாள்
  • c) தொழில் முன்னேற்ற நாள்
  • d) தேசிய கல்வி நாள்
Show Answer / விடை

Answer: கல்வி வளர்ச்சி நாள்

Exam: Group 4 2013

Question 21

பெயர்ச்சொல்லின் வகை அறிக.
'நன்மை' என்பது

Choices:

  • a) பொருட் பெயர்
  • b) சினைப் பெயர்
  • c) பண்புப் பெயர்
  • d) தொழிற் பெயர்
Show Answer / விடை

Answer: பண்புப் பெயர்

Exam: Group 4 2013

Question 22

"நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?

Choices:

  • a) கம்பர்
  • b) கபிலர்
  • c) இளங்கோவடிகள்
  • d) சீத்தலைச் சாத்தனார்
Show Answer / விடை

Answer: இளங்கோவடிகள்

Exam: Group 4 2013

Question 23

வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

Choices:

  • a) பரிதிமாற் கலைஞர்
  • b) மு.வரதராஜன்
  • c) தேவநேயப் பாவாணர்
  • d) புதுமைப்பித்தன்
Show Answer / விடை

Answer: தேவநேயப் பாவாணர்

Exam: Group 4 2013

Question 24

கோடிட்ட இடத்தை நிரப்புக :
நிகண்டுகளில் மிகப் பழமையானது ___________

Choices:

  • a) சேந்தன் திவாகரம்
  • b) சூடாமணி நிகண்டு
  • c) அகராதி
  • d) இதில் எதுவும் இல்லை
Show Answer / விடை

Answer: சேந்தன் திவாகரம்

Exam: Group 4 2013

Question 25

பொருளறிந்து பொருத்துக:
(a) ஓ 1. கோபம்
(b) மா 2. சோலை
(c) கா 3. நீர் தாங்கும் பலகை
(d) தீ 4. திருமகள்

Choices:

  • a) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
  • b) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
  • c) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • d) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 2 (d) 1

Exam: Group 4 2013

Question 26

'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை'
இத்தொடரில் 'பாணிரண்டு' என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

Choices:

  • a) அகநானூறு, புறநானூறு
  • b) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
  • c) திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
  • d) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
Show Answer / விடை

Answer: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

Exam: Group 4 2013

Question 27

உரிய விடையைத் தேர்க :
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

Choices:

  • a) திருமூலர்
  • b) வீரமாமுனிவர்
  • c) திருநாவுக்கரசர்
  • d) கம்பர்
Show Answer / விடை

Answer: திருமூலர்

Exam: Group 4 2013

Question 28

பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்

Choices:

  • a) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • b) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
  • c) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
  • d) (a) 1 (b) 4 (c) 2 (d) 3
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 2 (d) 1

Exam: Group 4 2013

Question 29

உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?

Choices:

  • a) 1786
  • b) 1858
  • c) 1808
  • d) 1886
Show Answer / விடை

Answer: 1886

Exam: Group 4 2013

Question 30

வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க :

Choices:

  • a) வினையெச்சம்
  • b) உருவகம்
  • c) உரிச்சொல் தொடர்
  • d) வியங்கோள் வினைமுற்று
Show Answer / விடை

Answer: வியங்கோள் வினைமுற்று

Exam: Group 4 2013

Question 31

பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.

Choices:

  • a) கலம்பகம் - பதினெட்டு உறுப்புகள்
  • b) சிற்றிலக்கியங்கள் - தொண்ணூற்றாறு
  • c) பிள்ளைத்தமிழ் - பத்துப் பருவங்கள்
  • d) பரணி - 100 தாழிசைகள்
Show Answer / விடை

Answer: பரணி - 100 தாழிசைகள்

Exam: Group 4 2013

Question 32

பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

Choices:

  • a) நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
  • b) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
  • c) பெண்களே சமூகத்தின் கண்கள்
  • d) சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்
Show Answer / விடை

Answer: வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.

Exam: Group 4 2013

Question 33

பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக.

Choices:

  • a) மார்பு
  • b) வரகு
  • c) மடு
  • d) மாசு
Show Answer / விடை

Answer: மடு

Exam: Group 4 2013

Question 34

சித்துகளின் எண்ணிக்கை

Choices:

  • a) பன்னிரண்டு
  • b) பதினெட்டு
  • c) பத்து
  • d) எட்டு
Show Answer / விடை

Answer: எட்டு

Exam: Group 4 2013

Question 35

அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31

Choices:

  • a) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
  • b) அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
  • c) குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு
  • d) நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை
Show Answer / விடை

Answer: ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

Exam: Group 4 2013

Question 36

தன்வினையைத் தேர்ந்து எழுதுக.

Choices:

  • a) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
  • b) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
  • c) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
  • d) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
Show Answer / விடை

Answer: அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்

Exam: Group 4 2013

Question 37

பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நலில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை

Choices:

  • a) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
  • b) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • c) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
  • d) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Exam: Group 4 2013

Question 38

சரியான விடையைத் தேர்வு செய்க.
'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப'
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?,

Choices:

  • a) அன்பும் பண்பும்
  • b) அறிவும் ஆற்றலும்
  • c) அறனும் மறனும்
  • d) கற்பும் அருளும்
Show Answer / விடை

Answer: கற்பும் அருளும்

Exam: Group 4 2013

Question 39

'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?

Choices:

  • a) தாவீது
  • b) கோலியாத்து
  • c) சூசையப்பர்
  • d) சவுல் மன்னன்
Show Answer / விடை

Answer: சூசையப்பர்

Exam: Group 4 2013

Question 40

கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்

Choices:

  • a) ஆழி, அம்பி, ஆர்கலி
  • b) பௌவம், முந்நீர், பரிசில்
  • c) ஆழி, ஆர்கலி, பௌவம்
  • d) வாரணம், பரவை, புணை
Show Answer / விடை

Answer: ஆழி, ஆர்கலி, பௌவம்

Exam: Group 4 2013

Question 41

பொருத்தமான விடையைக் கண்டறி.
“தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்

Choices:

  • a) பாட்டும் தொகையும்
  • b) சிலம்பும் மேகலையும்
  • c) இராமாயணமும் குறளும்
  • d) பாரதமும் இராமாயணமும்
Show Answer / விடை

Answer: இராமாயணமும் குறளும்

Exam: Group 4 2013

Question 42

பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
பட்டியல் I பட்டியல் II
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்

Choices:

  • a) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
  • b) (a) 3 (b) 1 (c) 2 (d) 4
  • c) (a) 1 (b) 2 (c) 4 (d) 3
  • d) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 2 (c) 4 (d) 1

Exam: Group 4 2013

Question 43

ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்

Choices:

  • a) அன்பு காட்டுதல்
  • b) ஆறுதல் கூறுதல்
  • c) வழிகாட்டுதல்
  • d) ஆதரவு தருதல்
Show Answer / விடை

Answer: வழிகாட்டுதல்

Exam: Group 4 2013

Question 44

ஐஞ்சிறு காப்பியம் - இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.

Choices:

  • a) உதயண குமார காவியம்
  • b) இராவண காவியம்
  • c) நாக குமார காவியம்
  • d) யசோதரா காவியம்
Show Answer / விடை

Answer: இராவண காவியம்

Exam: Group 4 2013

Question 45

பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) புள் 1. விரைவு
(b) குலவு 2. கலப்பை
(c) மேழி 3. அன்னம்
(d) ஒல்லை 4. விளங்கும்

Choices:

  • a) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
  • b) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
  • c) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • d) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 2 (d) 1

Exam: Group 4 2013

Question 46

பொருந்தாத இணையைக் கண்டறிக.

Choices:

  • a) Mishap - விபத்து
  • b) Miserable – துக்ககரமான
  • c) Mislay - தவறான சொல்
  • d) Misdeed - கெட்ட செயல்
Show Answer / விடை

Answer: Mislay - தவறான சொல்

Exam: Group 4 2013

Question 47

'வாழ்த்துவோம்' என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக.

Choices:

  • a) வாழ்
  • b) வாழ்த்துதல்
  • c) வாழ்த்து
  • d) வாழ்த்தும்
Show Answer / விடை

Answer: வாழ்த்து

Exam: Group 4 2013

Question 48

பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை களை

Choices:

  • a) கரும்பு அழகு
  • b) மூங்கில் காந்தி
  • c) வேய் சீலை
  • d) கழி அகற்று
Show Answer / விடை

Answer: வேய் சீலை

Exam: Group 4 2013

Question 49

சரியான பொருள் தருக :
'இந்து'

Choices:

  • a) நிலவு
  • b) துன்பம்
  • c) படகு
  • d) தலைவன்
Show Answer / விடை

Answer: நிலவு

Exam: Group 4 2013

Question 50

தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்

Choices:

  • a) காந்தியடிகள்
  • b) பேரறிஞர் அண்ணா
  • c) மு. வரதராசனார்
  • d) பெரியார்
Show Answer / விடை

Answer: மு. வரதராசனார்

Exam: Group 4 2013

Question 51

உரிய மரபுச் சொல்லை எழுதுக.
"மயில்"

Choices:

  • a) கரையும்
  • b) பிளிறும்
  • c) அலறும்
  • d) அகவும்
Show Answer / விடை

Answer: அகவும்

Exam: Group 4 2013

Question 52

'வந்தான்' என்னும் வினைமுற்று _____ என வினையாலணையும் பெயராய் வரும்.

Choices:

  • a) வருவான்
  • b) வாரான்
  • c) வந்தவன்
  • d) வந்த
Show Answer / விடை

Answer: வந்தவன்

Exam: Group 4 2013

Question 53

ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் _____ முடிவது சிறப்பு.

Choices:

  • a) ஆகாரத்தில்
  • b) ஏகாரத்தில்
  • c) ஓகாரத்தில்
  • d) ஈகாரத்தில்
Show Answer / விடை

Answer: ஏகாரத்தில்

Exam: Group 4 2013

Question 54

"தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Choices:

  • a) எதுகை மட்டும் வந்துள்ளது
  • b) மோனை மட்டும் வந்துள்ளது
  • c) எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன
  • d) எதுகையும், மோனையும் வந்துள்ளன
Show Answer / விடை

Answer: எதுகையும், மோனையும் வந்துள்ளன

Exam: Group 4 2013

Question 55

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.

Choices:

  • a) தரங்கம், தையல், திட்பம், தோடு
  • b) தையல், தோடு, திட்பம், தரங்கம்
  • c) தரங்கம், திட்பம், தையல், தோடு
  • d) தரங்கம், தையல், தோடு, திட்பம்
Show Answer / விடை

Answer: தரங்கம், திட்பம், தையல், தோடு

Exam: Group 4 2013

Question 56

பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை

Choices:

  • a) (a) 4 (b) 2 (c) 3 (d) 1
  • b) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
  • c) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
  • d) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Exam: Group 4 2013

Question 57

'உறுமிடத்துதவா உவர்நிலம்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Choices:

  • a) புறநானூறு
  • b) அகநானூறு
  • c) ஐங்குறுநூறு
  • d) திருக்குறள்
Show Answer / விடை

Answer: புறநானூறு

Exam: Group 4 2013

Question 58

திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?

Choices:

  • a) தேச பக்தன்
  • b) தென்றல்
  • c) இந்தியா
  • d) சுதேசமித்திரன்
Show Answer / விடை

Answer: தேச பக்தன்

Exam: Group 4 2013

Question 59

'பொறு' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.

Choices:

  • a) பொறுத்தான்
  • b) பொறுத்து
  • c) பொறுத்தல்
  • d) பொறுத்தவர்
Show Answer / விடை

Answer: பொறுத்தவர்

Exam: Group 4 2013

Question 60

'அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு' எனக் கூறியவர் யார்?

Choices:

  • a) இராமலிங்க அடிகள்
  • b) தாயுமானவர்
  • c) ஆறுமுக நாவலர்
  • d) குமரகுருபரர்
Show Answer / விடை

Answer: தாயுமானவர்

Exam: Group 4 2013

Question 61

மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.

Choices:

  • a) அடி மோனை
  • b) அடி எதுகை
  • c) சீர் இயைபு
  • d) சீர் மோனை
Show Answer / விடை

Answer: சீர் இயைபு

Exam: Group 4 2013

Question 62

வினாவிற்குரிய விடை எழுதுக.
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?

Choices:

  • a) 1927
  • b) 1936
  • c) 1895
  • d) 1946
Show Answer / விடை

Answer: 1946

Exam: Group 4 2013

Question 63

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்

Choices:

  • a) வள்ளலார்
  • b) பாரதியார்
  • c) பெருந்தேவனார்
  • d) பாரதிதாசனார்
Show Answer / விடை

Answer: வள்ளலார்

Exam: Group 4 2013

Question 64

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?

Choices:

  • a) வாக்குரிமை
  • b) பேச்சுரிமை
  • c) சொத்துரிமை
  • d) எழுத்துரிமை
Show Answer / விடை

Answer: சொத்துரிமை

Exam: Group 4 2013

Question 65

திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது _____ என்று அழைக்கப்படுகிறது.

Choices:

  • a) பல்லவபுரம்
  • b) இலட்சுமிபுரம்
  • c) தண்டலம்
  • d) இராமவரம்
Show Answer / விடை

Answer: தண்டலம்

Exam: Group 4 2013

Question 66

கோடிட்ட இடத்தை நிரப்புக :
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர்

Choices:

  • a) தில்லையாடி வள்ளியம்மை
  • b) வேலுநாச்சியார்
  • c) இராணி மங்கம்மாள்
  • d) ஜான்சி ராணி
Show Answer / விடை

Answer: இராணி மங்கம்மாள்

Exam: Group 4 2013

Question 67

உரிய விடையை எழுதுக :
"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Choices:

  • a) கந்தபுராணம்
  • b) திருமந்திரம்
  • c) பெரியபுராணம்
  • d) திருவிளையாடற்புராணம்
Show Answer / விடை

Answer: பெரியபுராணம்

Exam: Group 4 2013

Question 68

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

Choices:

  • a) வீண்,வீழ்ச்சி, வீடு, வீதி
  • b) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
  • c) வீழ்ச்சி,வீண், வீதி, வீடு
  • d) வீழ்ச்சி,வீடு, வீதி, வீண்
Show Answer / விடை

Answer: வீழ்ச்சி,வீடு, வீதி, வீண்

Exam: Group 4 2013

Question 69

எடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.

Choices:

  • a) எடுத்த
  • b) எடுத்தல்
  • c) எடுத்து
  • d) எடுத்தான்
Show Answer / விடை

Answer: எடுத்து

Exam: Group 4 2013

Question 70

கோடிட்ட இடத்தை நிரப்புக :
'ஞால்' என்பதற்கு _____ என்பது பொருள்.

Choices:

  • a) தொங்குதல்
  • b) ஞாலம்
  • c) தொடங்குதல்
  • d) வாழுதல்
Show Answer / விடை

Answer: தொங்குதல்

Exam: Group 4 2013

Question 71

"வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?

Choices:

  • a) பாரதியார்
  • b) சுரதா
  • c) தாரா பாரதி
  • d) பாரதிதாசன்
Show Answer / விடை

Answer: பாரதிதாசன்

Exam: Group 4 2013

Question 72

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.

Choices:

  • a) எதனால் ஐவரானார்கள்?
  • b) ஐவர் யார்?
  • c) ஐந்தாவதாக வந்தவன் யார்?
  • d) யாரிடம் கூறினான்?
Show Answer / விடை

Answer: எதனால் ஐவரானார்கள்?

Exam: Group 4 2013

Question 73

தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

Choices:

  • a) வேதநாயகம் பிள்ளை
  • b) வீரமாமுனிவர்
  • c) H.A. கிருஷ்ணப் பிள்ளை
  • d) உ.வே.சாமிநாதையர்
Show Answer / விடை

Answer: வீரமாமுனிவர்

Exam: Group 4 2013

Question 74

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி யார்?

Choices:

  • a) காளமேகப் புலவர்
  • b) பாரதியார்
  • c) இளஞ்சூரியர்
  • d) முது சூரியர்
Show Answer / விடை

Answer: காளமேகப் புலவர்

Exam: Group 4 2013

Question 75

தவறான கூற்றைத் தேர்வு செய்க.

Choices:

  • a) ''மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்" - ஆண்டாள்
  • b) ''வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" - குலசேகர ஆழ்வார்
  • c) "கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
  • d) "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி" - மாணிக்கவாசகர்
Show Answer / விடை

Answer: "கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை

Exam: Group 4 2013

Question 76

பொருத்துக:
(a) ஊ 1. தலைவன்
(b) கோ 2. ஊன்
(c) நொ 3. கடவுள்
(d) தீ 4. துன்புறு

Choices:

  • a) (a) 1 (b) 4 (c) 3 (d) 2
  • b) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
  • c) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
  • d) (a) 3 (b) 1 (c) 2 (d) 4
Show Answer / விடை

Answer: (a) 2 (b) 1 (c) 4 (d) 3

Exam: Group 4 2013

Question 77

பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்

Choices:

  • a) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
  • b) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
  • c) (a) 2 (b) 1 (c) 3 (d) 4
  • d) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 1 (c) 4 (d) 2

Exam: Group 4 2013

Question 78

சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

Choices:

  • a) காசினிக் கீரை
  • b) வல்லாரைக் கீரை
  • c) பசலைக் கீரை
  • d) அகத்திக் கீரை
Show Answer / விடை

Answer: வல்லாரைக் கீரை

Exam: Group 4 2013

Question 79

உரிய விடையைத் தேர்க :
தமிழ் படித்தால் எது பெருகும்?

Choices:

  • a) புதுமை
  • b) திறம்
  • c) அறம்
  • d) புறம்
Show Answer / விடை

Answer: அறம்

Exam: Group 4 2013

Question 80

பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்

Choices:

  • a) (a) 1 (b) 4 (c) 2 (d) 3
  • b) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
  • c) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
  • d) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Exam: Group 4 2013

Question 81

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?

Choices:

  • a) சிலப்பதிகாரம்
  • b) பாஞ்சாலி சபதம்
  • c) மனோன்மணீயம்
  • d) மணிமேகலை
Show Answer / விடை

Answer: சிலப்பதிகாரம்

Exam: Group 4 2013

Question 82

'மருகி' என்பது யாரைக் குறிக்கும்?

Choices:

  • a) மருமகள்
  • b) மகள்
  • c) கொழுந்தி
  • d) மாமியார்
Show Answer / விடை

Answer: மருமகள்

Exam: Group 4 2013

Question 83

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?

Choices:

  • a) கண்ணன் பாட்டு
  • b) குயில் பாட்டு
  • c) பாப்பா பாட்டு
  • d) பாஞ்சாலி சபதம்
Show Answer / விடை

Answer: குயில் பாட்டு

Exam: Group 4 2013

Question 84

"புதுநெறிகண்ட புலவர்" என்று போற்றப்பட்டவர்

Choices:

  • a) இராமலிங்க அடிகளார்
  • b) தாயுமானவர்
  • c) திரு.வி.க.
  • d) கவிமணி
Show Answer / விடை

Answer: இராமலிங்க அடிகளார்

Exam: Group 4 2013

Question 85

பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்

Choices:

  • a) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
  • b) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
  • c) (a) 1 (b) 4 (c) 2 (d) 3
  • d) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 1 (d) 2

Exam: Group 4 2013

Question 86

சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை

Choices:

  • a) 100
  • b) 80
  • c) 96
  • d) 108
Show Answer / விடை

Answer: 96

Exam: Group 4 2013

Question 87

'பண்ணொடு தமிழொப்பாய்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

Choices:

  • a) திருவாசகம்
  • b) தேவாரம்
  • c) திருக்கோவையார்
  • d) திருமந்திரம்
Show Answer / விடை

Answer: தேவாரம்

Exam: Group 4 2013

Question 88

பொருந்தாத தொடரைக் கண்டறி :

Choices:

  • a) அடக்கம் அமரருள் உய்க்கும்
  • b) கற்க கசடற
  • c) தீதும் நன்றும் பிறர்தர வாரா
  • d) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
Show Answer / விடை

Answer: கற்க கசடற

Exam: Group 4 2013

Question 89

பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1. மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2. கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3. கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4. ஆதிரை

Choices:

  • a) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
  • b) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • c) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
  • d) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 1 (d) 2

Exam: Group 4 2013

Question 90

63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?

Choices:

  • a) கந்தபுராணம்
  • b) திருவிளையாடற் புராணம்
  • c) பெரிய புராணம்
  • d) தணிகை புராணம்
Show Answer / விடை

Answer: பெரிய புராணம்

Exam: Group 4 2013

Question 91

பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

Choices:

  • a) ஞாயிறைக் கைமுறைப்பார் இல்
  • b) முள்ளினால் முள்களையும் ஆறு
  • c) பாம்பு அறியும் பாம்பின் கால்
  • d) ஆற்று உணா வேண்டுவது இல்
Show Answer / விடை

Answer: பாம்பு அறியும் பாம்பின் கால்

Exam: Group 4 2013

Question 92

'செழுங்கனித் தீஞ்சுவை' என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?

Choices:

  • a) செழுமை + கனி + தீஞ்சுவை
  • b) செழும் + கனி + தீஞ்சுவை
  • c) செழும் + கனி + தீம் + சுவை
  • d) செழுமை + கனி + தீம் + சுவை
Show Answer / விடை

Answer: செழுமை + கனி + தீம் + சுவை

Exam: Group 4 2013

Question 93

'முடுகினன்' என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?

Choices:

  • a) செலுத்தினான்
  • b) நிறுத்தினான்
  • c) வளைத்தான்
  • d) முரித்தான்
Show Answer / விடை

Answer: நிறுத்தினான்

Exam: Group 4 2013

Question 94

"வையக மெல்லா மெமதென் றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?

Choices:

  • a) சேரன்
  • b) பல்லவன்
  • c) சோழன்
  • d) பாண்டியன்
Show Answer / விடை

Answer: பாண்டியன்

Exam: Group 4 2013

Question 95

சரியானவற்றைக் காண்க.
(1) நீ +ஐ =நின்னை
(2) நீ + அது = நினது
(3) நீ + ஆல் = நீயால்
(4) நீ +கு = நீக்கு

Choices:

  • a) 2,3-சரி
  • b) 1,2-சரி
  • c) 3,4-சரி
  • d) நான்கும் சரி
Show Answer / விடை

Answer: 1,2-சரி

Exam: Group 4 2013

Question 96

உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
''கொக்கொக்க கூம்பும் பருவத்து''

Choices:

  • a) காத்திருத்தல்
  • b) வெறுத்திருத்தல்
  • c) அறியாதிருத்தல்
  • d) மறந்திருத்தல்
Show Answer / விடை

Answer: காத்திருத்தல்

Exam: Group 4 2013

Question 97

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக.

Choices:

  • a) ஊரன்
  • b) முக்கன்
  • c) வறியன்
  • d) கடையன்
Show Answer / விடை

Answer: முக்கன்

Exam: Group 4 2013

Question 98

மனக்குகை - இலக்கணக் குறிப்பு எழுதுக.

Choices:

  • a) வினைத்தொகை
  • b) உவமைத்தொகை
  • c) உருவகம்
  • d) உம்மைத்தொகை
Show Answer / விடை

Answer: உருவகம்

Exam: Group 4 2013

Question 99

இலக்கணக் குறிப்பறிதல்
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று
'உறுவேனில்’- இலக்கணம் தேர்ந்து எழுது.

Choices:

  • a) வினைத்தொகை
  • b) அன்மொழித்தொகை
  • c) தொழில் பெயர்
  • d) உரிச்சொல் தொடர்
Show Answer / விடை

Answer: உரிச்சொல் தொடர்

Exam: Group 4 2013

Question 100

கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?

Choices:

  • a) சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்
  • b) சிலம்புச் செல்வர் இளங்கோவடிகள்
  • c) இசைக்குயில் சரோஜினி நாயுடு
  • d) கவிக்கோ முடியரசன்
Show Answer / விடை

Answer: சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்

Exam: Group 4 2013