Skip to main content

Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2016

பொது அறிவியல் (General science)

Question 1

1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
How many electrons are there in one coulomb charge?

Choices (தமிழ்):

  • a) 1.6×10⁻¹⁹ எலக்ட்ரான்கள்
  • b) 6.25×10¹⁸ எலக்ட்ரான்கள்
  • c) 6.25×10⁻¹⁸ எலக்ட்ரான்கள்
  • d) 1.6×10¹⁹ எலக்ட்ரான்கள்

Choices (English):

  • a) 1.6×10⁻¹⁹ electrons
  • b) 6.25×10¹⁸ electrons
  • c) 6.25x10⁻¹⁸ electrons
  • d) 1.6x10¹⁹ electrons
Show Answer / விடை

Answer (தமிழ்): 6.25×10¹⁸ எலக்ட்ரான்கள்
Answer (English): 6.25×10¹⁸ electrons

Exam: Group 4 2016

Question 2

15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி⁻¹ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன?
A bullet of mass 15 g is horizontally fired with velocity 100 ms⁻¹ from a pistol of mass 2 kg. Total momentum of the pistol and bullet before firing is equal to

Choices (தமிழ்):

  • a) சுழி
  • b) 201.5 கிகி மீவி⁻¹
  • c) 215 கிகி மீவி⁻¹
  • d) 200 கிகி மீவி⁻¹

Choices (English):

  • a) zero
  • b) 201.5 kg ms⁻¹
  • c) 215 kg ms⁻¹
  • d) 200 kg ms⁻¹
Show Answer / விடை

Answer (தமிழ்): சுழி
Answer (English): zero

Exam: Group 4 2016

Question 3

DDT-யின் வேதிப்பெயர் என்ன?
What is the chemical name of DDT?

Choices (தமிழ்):

  • a) டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்
  • b) டைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
  • c) டைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோ ஈத்தேன்
  • d) டைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்

Choices (English):

  • a) Dichloro diphenyl trichloro ethane
  • b) Dichloro diphenyl tribromo ethane
  • c) Diphenyl dichloro trichloro ethane
  • d) Diphenyl dibromo trichloro ethane
Show Answer / விடை

Answer (தமிழ்): டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்
Answer (English): Dichloro diphenyl trichloro ethane

Exam: Group 4 2016

Question 4

மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
What are Microsporum, Epidermophyton?

Choices (தமிழ்):

  • a) மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
  • b) மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
  • c) மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
  • d) மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்

Choices (English):

  • a) Disease causing bacteria in man
  • b) Disease causing fungi in man
  • c) Disease causing virus in man
  • d) Disease causing protozoans in man
Show Answer / விடை

Answer (தமிழ்): மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
Answer (English): Disease causing fungi in man

Exam: Group 4 2016

Question 5

அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
Ovulation is stimulated by

Choices (தமிழ்):

  • a) LH
  • b) LTH
  • c) ரெனின்
  • d) அட்ரீனலின்

Choices (English):

  • a) LH
  • b) LTH
  • c) Renin
  • d) Adrenalin
Show Answer / விடை

Answer (தமிழ்): LH
Answer (English): LH

Exam: Group 4 2016

Question 6

முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
Which gymnospermic plant cures rheumatism?

Choices (தமிழ்):

  • a) அரக்கேரியா
  • b) எபிட்ரா
  • c) நீட்டம்
  • d) பைனஸ்

Choices (English):

  • a) Araucaria
  • b) Ephedra
  • c) Gnetum
  • d) Pinus
Show Answer / விடை

Answer (தமிழ்): நீட்டம்
Answer (English): Gnetum

Exam: Group 4 2016

Question 7

கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
A special root-like structure in cuscuta and viscum is called

Choices (தமிழ்):

  • a) வேரிகள்
  • b) ஹாஸ்டோரியாக்கள்
  • c) ஹைப்பாக்கள்
  • d) ஸ்டோலன்

Choices (English):

  • a) Rhizoids
  • b) Haustoria
  • c) Hyphae
  • d) Stolens
Show Answer / விடை

Answer (தமிழ்): ஹாஸ்டோரியாக்கள்
Answer (English): Haustoria

Exam: Group 4 2016

Question 8

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது
Asteroids are found between

Choices (தமிழ்):

  • a) செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
  • b) பூமிக்கும் செவ்வாய்க்கும்
  • c) வியாழனுக்கும் சனிக்கும்
  • d) புதனுக்கும் வெள்ளிக்கும்

Choices (English):

  • a) Mars and Jupiter
  • b) Earth and Mars
  • c) Jupiter and Saturn
  • d) Mercury and Venus
Show Answer / விடை

Answer (தமிழ்): செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
Answer (English): Mars and Jupiter

Exam: Group 4 2016

Question 9

ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
If you stand in a rectangular room, where two adjacent walls are covered with plane mirrors, the total number of your images will be

Choices (தமிழ்):

  • a) முடிவிலி
  • b) 1
  • c) 3
  • d) 0

Choices (English):

  • a) infinity
  • b) 1
  • c) 3
  • d) 0
Show Answer / விடை

Answer (தமிழ்): 3
Answer (English): 3

Exam: Group 4 2016

Question 10

முயலின் செவியுணர் நெடுக்கம்
Audible range of rabbit is

Choices (தமிழ்):

  • a) 100-32,000 Hz
  • b) 1,000 - 1,50,000 Hz
  • c) 1,000 - 1,00,000 Hz
  • d) 900-2,00,000 Hz

Choices (English):

  • a) 100-32,000 Hz
  • b) 1,000-1,50,000 Hz
  • c) 1,000-1,00,000 Hz
  • d) 900-2,00,000 Hz
Show Answer / விடை

Answer (தமிழ்): 100-32,000 Hz
Answer (English): 100-32,000 Hz

Exam: Group 4 2016

Question 11

காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
Why vegetables and fruits turn brown on cutting?

Choices (தமிழ்):

  • a) காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
  • b) கனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
  • c) உப்புக்கள் உருவாவதால்
  • d) காரங்கள் உருவாவதால்

Choices (English):

  • a) Due to the reaction between phenolic compound and oxygen in air
  • b) Due to the formation of inorganic compound
  • c) Due to the formation of salts
  • d) Due to the formation of bases
Show Answer / விடை

Answer (தமிழ்): காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
Answer (English): Due to the reaction between phenolic compound and oxygen in air

Exam: Group 4 2016

Question 12

பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?
Among the following which one is not a biofertilizer?

Choices (தமிழ்):

  • a) அனபீனா
  • b) நாஸ்டாக்
  • c) லின்டேன்
  • d) ரைசோபியம்

Choices (English):

  • a) Anabaena
  • b) Nostoc
  • c) Lindane
  • d) Rhizobium
Show Answer / விடை

Answer (தமிழ்): லின்டேன்
Answer (English): Lindane

Exam: Group 4 2016

Question 13

கீழ்கண்ட கூற்றுகளை கவனி :
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.

Consider the statements:
(a) Sterility is caused by the deficiency of Vitamin K.
(b) Night blindness is caused by the deficiency of Vitamin D.

Choices (தமிழ்):

  • a) (a) மற்றும் (b) தவறானவை
  • b) (a) தவறு மற்றும் (b) சரி
  • c) (a) சரி மற்றும் (b) தவறு
  • d) (a) மற்றும் (b) சரியானவை

Choices (English):

  • a) Both (a) and (b) are false
  • b) (a) is false and (b) is true
  • c) (a) is true and (b) is false
  • d) Both (a) and (b) are true
Show Answer / விடை

Answer (தமிழ்): (a) மற்றும் (b) தவறானவை
Answer (English): Both (a) and (b) are false

Exam: Group 4 2016

Question 14

வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
The valve which regulates the blood flow froin right ventricle to the pulmonary artery

Choices (தமிழ்):

  • a) பிறைசந்திர வால்வு
  • b) ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு
  • c) ஈரிதழ் வால்வு
  • d) மூவிதழ் வால்வு

Choices (English):

  • a) Semi-lunar valve
  • b) Auriculo-ventricular valve
  • c) Bi Cuspid valve
  • d) Tri Cuspid valve
Show Answer / விடை

Answer (தமிழ்): பிறைசந்திர வால்வு
Answer (English): Semi-lunar valve

Exam: Group 4 2016

Question 15

வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக:
வரிசை I
(a) கிளைக்காலிஸிஸ்
(b) கிரெப் சுழற்சி
(c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி
(d) நொதித்தல்
வரிசை II
1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
2. ATP-க்கள் உருவாகிறது
3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது

Match List I and List II:
List I
(a) Glycolysis
(b) Kreb's cycle
(c) Electron transport chain
(d) Fermentation
List II
1. O2 is not utilised
2. ATP are produced
3. Oxidation of pyruvic acid
4. Occurs in cytoplasm

Choices (தமிழ்):

  • a) 3 4 2 1
  • b) 4 3 2 1
  • c) 1 3 4 2
  • d) 2 4 1 3

Choices (English):

  • a) 3 4 2 1
  • b) 4 3 2 1
  • c) 1 3 4 2
  • d) 2 4 1 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 4 3 2 1
Answer (English): 4 3 2 1

Exam: Group 4 2016

Question 16

எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?
Name the Battery that shuts down on over heating and restarts when the temperature becomes cool

Choices (தமிழ்):

  • a) சோடியம் அயனி
  • b) லித்தியம் அயனி
  • c) கார்பன் அயனி
  • d) பொட்டாசியம் அயனி

Choices (English):

  • a) Sodium ion
  • b) Lithium ion
  • c) Carbon ion
  • d) Potassium ion
Show Answer / விடை

Answer (தமிழ்): லித்தியம் அயனி
Answer (English): Lithium ion

Exam: Group 4 2016

Question 17

எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
The INSAT-3DR was launched through rocket for Metereological Research on 8th September, 2016 by which rocket?

Choices (தமிழ்):

  • a) GSLV-F05
  • b) PSLV-4
  • c) அரியான்
  • d) GSLV-3

Choices (English):

  • a) GSLV-F05
  • b) PSLV-4
  • c) Arianne
  • d) GSLV-3
Show Answer / விடை

Answer (தமிழ்): GSLV-F05
Answer (English): GSLV-F05

Exam: Group 4 2016

Question 18

"மருந்துகளின் இராணி" என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
Which medicine is known as "THE QUEEN OF DRUGS"?

Choices (தமிழ்):

  • a) அட்ரோபின்
  • b) பாலிமிக்சின்
  • c) ஸ்ட்ரெப்டோமைசின்
  • d) பெனிசிலின்

Choices (English):

  • a) ATROPIN
  • b) POLYMIXIN
  • c) STREPTOMYCIN
  • d) PENICILLIN
Show Answer / விடை

Answer (தமிழ்): பெனிசிலின்
Answer (English): PENICILLIN

Exam: Group 4 2016

பொது அறிவு (General Knowledge)

Question 1

உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Which of the following is observed as "National Girl Child Day"?

Choices (தமிழ்):

  • a) ஜனவரி 8
  • b) ஜனவரி 21
  • c) ஜனவரி 22
  • d) ஜனவரி 24

Choices (English):

  • a) 8th January
  • b) 21st January
  • c) 22nd January
  • d) 24th January
Show Answer / விடை

Answer (தமிழ்): ஜனவரி 24
Answer (English): 24th January

Exam: Group 4 2016

Question 2

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
Which of the following was discovered by ONGC in the Indian Ocean on 26th July 2016?

Choices (தமிழ்):

  • a) நீரேற்றம் பெற்ற மீத்தேன்
  • b) நீரேற்றம் பெற்ற பென்சீன்
  • c) நீரேற்றம் பெற்ற ஈதர்கள்
  • d) நீரேற்றம் பெற்ற ஆக்டேன்

Choices (English):

  • a) Hydrated Methane
  • b) Hydrated Benzene
  • c) Hydrated Ether
  • d) Hydrated Octane
Show Answer / விடை

Answer (தமிழ்): நீரேற்றம் பெற்ற மீத்தேன்
Answer (English): Hydrated Methane

Exam: Group 4 2016

Question 3

எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்?
Which State Governor was appointed as Tamilnadu Governor additional-charge in September, 2016?

Choices (தமிழ்):

  • a) கேரளா
  • b) கர்நாடகா
  • c) மகாராஷ்டிரா
  • d) மத்திய பிரதேசம்

Choices (English):

  • a) Kerala
  • b) Karnataka
  • c) Maharashtra
  • d) Madhya Pradesh
Show Answer / விடை

Answer (தமிழ்): மகாராஷ்டிரா
Answer (English): Maharashtra

Exam: Group 4 2016

Question 4

ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
Which Musician was honoured in August 2016, by United Nations Organization for her contribution to music?

Choices (தமிழ்):

  • a) M.S. சுப்புலட்சுமி
  • b) ஆஷா போஸ்லே
  • c) லதா மங்கேஷ்கர்
  • d) M.S. இராஜலட்சுமி

Choices (English):

  • a) M.S. Subbulakshmi
  • b) Asha Bhosle
  • c) Lata Mangeshkar
  • d) M.S. Rajalakshmi
Show Answer / விடை

Answer (தமிழ்): M.S. சுப்புலட்சுமி
Answer (English): M.S. Subbulakshmi

Exam: Group 4 2016

Question 5

2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார்?
Identify the 2016 Dhronacharya Awardee

Choices (தமிழ்):

  • a) பிஸ்வேஷ்வர் நந்தி
  • b) லலிதா பாபர்
  • c) இராணி ராம்பால்
  • d) பி.வி.சிந்து

Choices (English):

  • a) Bishweshwar Nandi
  • b) Lalitha Babar
  • c) Rani Rampal
  • d) P.V. Sindhu
Show Answer / விடை

Answer (தமிழ்): பிஸ்வேஷ்வர் நந்தி
Answer (English): Bishweshwar Nandi

Exam: Group 4 2016

Question 6

ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது?
The Asian Junior Chess Championships, May 2016 was held at

Choices (தமிழ்):

  • a) சென்னை
  • b) மும்பை
  • c) கொல்கட்டா
  • d) புது டெல்லி

Choices (English):

  • a) Chennai
  • b) Mumbai
  • c) Kolkatta
  • d) New Delhi
Show Answer / விடை

Answer (தமிழ்): புது டெல்லி
Answer (English): New Delhi

Exam: Group 4 2016

Question 7

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?
Which country's Badminton player was defeated by P.V. Sindhu in the semi-finals at the Rio 2016 Olympic game's?

Choices (தமிழ்):

  • a) ஸ்பெயின்
  • b) அமெரிக்கா
  • c) ஆப்பிரிக்கா
  • d) ஜப்பான்

Choices (English):

  • a) Spain
  • b) America
  • c) Africa
  • d) Japan
Show Answer / விடை

Answer (தமிழ்): ஜப்பான்
Answer (English): Japan

Exam: Group 4 2016

Question 8

ஜூலை 2016-ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய _____ பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
In July 2016, Theresa May was appointed as the _____ Woman Prime Minister of UK (Britain).

Choices (தமிழ்):

  • a) முதல்
  • b) இரண்டாம்
  • c) பத்தாவது
  • d) ஆறாவது

Choices (English):

  • a) first
  • b) second
  • c) tenth
  • d) sixth
Show Answer / விடை

Answer (தமிழ்): இரண்டாம்
Answer (English): second

Exam: Group 4 2016

Question 9

2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது?
The Third Asian Ministerial Conference on Tiger Conservation 2016 was held

Choices (தமிழ்):

  • a) 2016 ஒரிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய
  • b) 2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய
  • c) 2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
  • d) 2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய

Choices (English):

  • a) From April 9th to 12th 2016 at Orissa
  • b) From April 14th to 17th 2016 at Calcutta
  • c) From April 11th to 14th 2016 at New-Delhi
  • d) From April 6th to 9th 2016 at Mumbai
Show Answer / விடை

Answer (தமிழ்): 2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
Answer (English): From April 11th to 14th 2016 at New-Delhi

Exam: Group 4 2016

Question 10

அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lemelson-MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
Who among the Indian-born American scientist bagged the prestigious award Lemelson-MIT prize worth 5,00,000 dollars?

Choices (தமிழ்):

  • a) அஜித் தோவல்
  • b) முகமது நஷீத்
  • c) ரமேஷ்ரஷ்கர்
  • d) ஜக்தீஷ் டைட்லர்

Choices (English):

  • a) Ajit Doval
  • b) Mohamed Nasheed
  • c) Ramesh Raskar
  • d) Jagdish Tytler
Show Answer / விடை

Answer (தமிழ்): ரமேஷ்ரஷ்கர்
Answer (English): Ramesh Raskar

Exam: Group 4 2016

Question 11

2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?
Who won the GD Birla Award for Scientific Research for the year 2016?

Choices (தமிழ்):

  • a) சஞ்சீவ் கிளண்டி
  • b) ராகவன் வரதராஜன்
  • c) ஸ்ரீராம் ராமசாமி
  • d) சஞ்சய் மிட்டல்

Choices (English):

  • a) Sanjeev Galande
  • b) Raghavan Varadarajan
  • c) Sriram Ramasamy
  • d) Sanjay Mittal
Show Answer / விடை

Answer (தமிழ்): சஞ்சீவ் கிளண்டி
Answer (English): Sanjeev Galande

Exam: Group 4 2016

Question 12

''ஆப்ரேஷன் காம் டவுன்" என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
"Operation calm down" is associated with which state?

Choices (தமிழ்):

  • a) தமிழ் நாடு
  • b) ஆந்திர பிரதேசம்
  • c) ஜம்மு காஷ்மீர்
  • d) பீகார்

Choices (English):

  • a) Tamilnadu
  • b) Andhra Pradesh
  • c) Jammu Kashmir
  • d) Bihar
Show Answer / விடை

Answer (தமிழ்): ஜம்மு காஷ்மீர்
Answer (English): Jammu Kashmir

Exam: Group 4 2016

Question 13

2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
Name the person who was appointed as the ambassador on behalf of India to work for the cause of gender equality and progress of women in UNO for the year 2016

Choices (தமிழ்):

  • a) ஐஸ்வர்யா இராய்
  • b) பிரியங்கா சோப்ரா
  • c) ஐஸ்வர்யா தனுஷ்
  • d) சானியா மிர்ஸா

Choices (English):

  • a) Aishwarya Rai
  • b) Priyanka Chopra
  • c) Aishwarya Dhanush
  • d) Sania Mirza
Show Answer / விடை

Answer (தமிழ்): ஐஸ்வர்யா தனுஷ்
Answer (English): Aishwarya Dhanush

Exam: Group 4 2016

Question 14

பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
Who won the Rajiv Gandhi Khel Rathna Award for Badminton in the year 2016?

Choices (தமிழ்):

  • a) சாக்ஷி மாலிக்
  • b) மேரி கோம்
  • c) பிரதீப் குமார்
  • d) பி.வி.சிந்து

Choices (English):

  • a) Sakshi Malik
  • b) Mary Kom
  • c) Pradeep Kumar
  • d) P.V. Sindhu
Show Answer / விடை

Answer (தமிழ்): பி.வி.சிந்து
Answer (English): P.V. Sindhu

Exam: Group 4 2016

Question 15

எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ.நா. அமைப்பு அறிவித்தது?
Which year has been declared by UNO as the "International Year of Pulses"?

Choices (தமிழ்):

  • a) 2012
  • b) 2013
  • c) 2016
  • d) 2015

Choices (English):

  • a) 2012
  • b) 2013
  • c) 2016
  • d) 2015
Show Answer / விடை

Answer (தமிழ்): 2016
Answer (English): 2016

Exam: Group 4 2016

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy & TN Development Administration)

Question 1

எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது?
Which Bill was passed in the Parliament of India in 2016 to adopt Uniform Tax of States?

Choices (தமிழ்):

  • a) பொருட்கள் மற்றும் விற்பனை வரி
  • b) சரக்கு மற்றும் சேவை வரி
  • c) நேர்முக வரி
  • d) மறைமுக வரி

Choices (English):

  • a) Goods and Sales Tax
  • b) Goods and Service Tax
  • c) Direct Tax
  • d) Indirect Tax
Show Answer / விடை

Answer (தமிழ்): சரக்கு மற்றும் சேவை வரி
Answer (English): Goods and Service Tax

Exam: Group 4 2016

Question 2

நித்தி அயோக்-இன் தலைவர் யார்?
Who is the chairperson of Niti Aayog?

Choices (தமிழ்):

  • a) குடியரசு தலைவர்
  • b) பிரதம மந்திரி
  • c) துணை குடியரசு தலைவர்
  • d) உச்ச நீதிமன்ற நீதிபதி

Choices (English):

  • a) President
  • b) Prime Minister
  • c) Vice-President
  • d) Supreme Court Judge
Show Answer / விடை

Answer (தமிழ்): பிரதம மந்திரி
Answer (English): Prime Minister

Exam: Group 4 2016

Question 3

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
Which year has a special significance in Indian Economy as far as Economic Reforms are concerned?

Choices (தமிழ்):

  • a) 1952
  • b) 1981
  • c) 1991
  • d) 2001

Choices (English):

  • a) 1952
  • b) 1981
  • c) 1991
  • d) 2001
Show Answer / விடை

Answer (தமிழ்): 1991
Answer (English): 1991

Exam: Group 4 2016

Question 4

இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
Where is the diamond cutting industry located in India?

Choices (தமிழ்):

  • a) லக்னோ
  • b) சூரத்
  • c) லூதியானா
  • d) சண்டிஹார்

Choices (English):

  • a) Lucknow
  • b) Surat
  • c) Ludiyana
  • d) Chandigar
Show Answer / விடை

Answer (தமிழ்): சூரத்
Answer (English): Surat

Exam: Group 4 2016

Question 5

நிகர நாட்டு உற்பத்தி என்பது
Net National Product is

Choices (தமிழ்):

  • a) மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்
  • b) மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்
  • c) நிகர நாட்டு உற்பத்தி - தேய்மானம்
  • d) நிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்

Choices (English):

  • a) Gross Domestic Product - Depreciation
  • b) Gross National Product - Depreciation
  • c) Net National Product - Depreciation
  • d) Net Domestic Product - Depreciation
Show Answer / விடை

Answer (தமிழ்): மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்
Answer (English): Gross National Product - Depreciation

Exam: Group 4 2016

Question 6

வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்
When a person lives below the minimum subsistence level he is said to live in

Choices (தமிழ்):

  • a) முழுமையான வறுமை
  • b) ஒப்பீட்டு வறுமை
  • c) சுருக்க வறுமை
  • d) உண்மை வறுமை

Choices (English):

  • a) Absolute poverty
  • b) Relative poverty
  • c) Abstract poverty
  • d) True poverty
Show Answer / விடை

Answer (தமிழ்): முழுமையான வறுமை
Answer (English): Absolute poverty

Exam: Group 4 2016

Question 7

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
What is the name of Ganga river cleaning scheme?

Choices (தமிழ்):

  • a) நமாமி கங்கா திட்டம்
  • b) பூர்வா கங்கா திட்டம்
  • c) அபூர்வா கங்கா திட்டம்
  • d) கங்கா யமுனா திட்டம்

Choices (English):

  • a) Namami Ganga scheme
  • b) Poorva Ganga scheme
  • c) Apoorva Ganga scheme
  • d) Ganga Yamuna scheme
Show Answer / விடை

Answer (தமிழ்): நமாமி கங்கா திட்டம்
Answer (English): Namami Ganga scheme

Exam: Group 4 2016

Question 8

கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) சாம்பல் புரட்சி - 1. எண்ணெய் வித்துக்கள்
(b) பொன் புரட்சி - 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
(c) மஞ்சள் புரட்சி - 3. கடல் பொருட்கள்
(d) நீலப்புரட்சி - 4. பழங்கள் உற்பத்தி

Match the following:
(a) Grey revolution - 1. Oil seeds
(b) Golden revolution - 2. Eggs and poultry
(c) Yellow revolution - 3. Marine products
(d) Blue revolution - 4. Horticulture

Choices (தமிழ்):

  • a) 2 4 1 3
  • b) 4 2 3 1
  • c) 3 1 4 2
  • d) 2 1 4 3

Choices (English):

  • a) 2 4 1 3
  • b) 4 2 3 1
  • c) 3 1 4 2
  • d) 2 1 4 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 4 1 3
Answer (English): 2 4 1 3

Exam: Group 4 2016

Question 9

'இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
In India the organisation which was responsible for self-sufficiency in food production was

Choices (தமிழ்):

  • a) இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
  • b) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
  • c) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
  • d) இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)

Choices (English):

  • a) CSIR
  • b) ICAR
  • c) ISRO
  • d) ICMR
Show Answer / விடை

Answer (தமிழ்): இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
Answer (English): ICAR

Exam: Group 4 2016

Question 10

மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
As explained by Robert Malthus, Population increases in the

Choices (தமிழ்):

  • a) விகிதாச்சார விகிதத்தில்
  • b) பெருக்கல் விகிதத்தில்
  • c) கூட்டு விகிதத்தில்
  • d) சிறு விகிதத்தில்

Choices (English):

  • a) Proportionate ratio
  • b) Geometric ratio
  • c) Arithmetic ratio
  • d) Smaller ratio
Show Answer / விடை

Answer (தமிழ்): பெருக்கல் விகிதத்தில்
Answer (English): Geometric ratio

Exam: Group 4 2016

Question 11

1966- 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
Which plan was implemented after the Annual Plans of 1966-69?

Choices (தமிழ்):

  • a) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
  • b) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
  • c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
  • d) நான்காம் ஐந்தாண்டு திட்டம்

Choices (English):

  • a) Second Five Year Plan
  • b) Fifth Five Year Plan
  • c) Third Five Year Plan
  • d) Fourth Five Year Plan
Show Answer / விடை

Answer (தமிழ்): நான்காம் ஐந்தாண்டு திட்டம்
Answer (English): Fourth Five Year Plan

Exam: Group 4 2016

இந்திய ஆட்சியியல் (Indian Polity)

Question 1

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
Indian Constitution Drafting Committee's Chairman

Choices (தமிழ்):

  • a) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
  • b) ஜவஹர்லால் நேரு
  • c) டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
  • d) காந்தி

Choices (English):

  • a) Dr. Rajendra Prasad
  • b) Jawaharlal Nehru
  • c) Dr. B.R. Ambedkar
  • d) Gandhi
Show Answer / விடை

Answer (தமிழ்): டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
Answer (English): Dr. B.R. Ambedkar

Exam: Group 4 2016

Question 2

எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
Which year the Constitution of India (61st Amendment Act) lowered the voting age from 21 years to 18 years?

Choices (தமிழ்):

  • a) 1988
  • b) 1987
  • c) 1986
  • d) 1985

Choices (English):

  • a) 1988
  • b) 1987
  • c) 1986
  • d) 1985
Show Answer / விடை

Answer (தமிழ்): 1988
Answer (English): 1988

Exam: Group 4 2016

Question 3

இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
Article 63 of the Indian Constitution refers to

Choices (தமிழ்):

  • a) துணை குடியரசுத் தலைவர்
  • b) குடியரசு தலைவர்
  • c) பிரதம மந்திரி
  • d) ஆளுநர்

Choices (English):

  • a) Vice-President
  • b) President
  • c) Prime Minister
  • d) Governor
Show Answer / விடை

Answer (தமிழ்): துணை குடியரசுத் தலைவர்
Answer (English): Vice-President

Exam: Group 4 2016

Question 4

ஆட்கொணர் நீதி பேராணை என்பது
The writ of Habeas Corpus is

Choices (தமிழ்):

  • a) சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
  • b) விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
  • c) துணை நீதி மன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல்
  • d) பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்

Choices (English):

  • a) To safeguard people from illegal arrest
  • b) The Petitioner who requires legal help to get his work done by respective Public Authorities
  • c) It probability a subordinate court from acting beyond its jurisdiction
  • d) It prevents usurpation of a public office
Show Answer / விடை

Answer (தமிழ்): சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
Answer (English): To safeguard people from illegal arrest

Exam: Group 4 2016

Question 5

இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
Who is the Chief Information Commissioner of India in September 2016?

Choices (தமிழ்):

  • a) பி.கே.சின்ஹா
  • b) ஆர்.கே.நாராயணன்
  • c) ஆர்.கே.மாத்தூர்
  • d) ஆர்.கே. கௌல்

Choices (English):

  • a) P.K. Sinha
  • b) R.K. Narayanan
  • c) R.K. Mathoor
  • d) R.K. Koul
Show Answer / விடை

Answer (தமிழ்): ஆர்.கே.மாத்தூர்
Answer (English): R.K. Mathoor

Exam: Group 4 2016

Question 6

பொருத்துக :
பகுதி-I
(a) ராஜ்பவன்
(b) ராஷ்டிரபதி பவன்
(c) இராஜதுரோக விசாரணை
(d) துணைநிலை ஆளுநர்
பகுதி-II
1. ஜனாதிபதி
2. ஆளுநர்
3. யூனியன் பிரதேசங்கள்
4. அரசியலமைப்பு மீறல்

Match the following :
Part-I
(a) Raj Bhavan
(b) Rastrapathy Bhavan
(c) Impeachment
(d) Lt. Governor
Part-II
1. President
2. Governor
3. Union Territories
4. Violation of the Constitution

Choices (தமிழ்):

  • a) 1 4 3 2
  • b) 2 3 4 1
  • c) 4 2 3 1
  • d) 2 1 4 3

Choices (English):

  • a) 1 4 3 2
  • b) 2 3 4 1
  • c) 4 2 3 1
  • d) 2 1 4 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 1 4 3
Answer (English): 2 1 4 3

Exam: Group 4 2016

Question 7

மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
The election process at the state level is supervised by

Choices (தமிழ்):

  • a) தலைமை தேர்தல் ஆணையர்
  • b) உச்சநீதிமன்ற நீதிபதி
  • c) தலைமை தேர்தல் அதிகாரி
  • d) உயர்நீதிமன்ற நீதிபதி

Choices (English):

  • a) Chief Election Commissioner
  • b) Supreme Court Judge
  • c) Chief Electoral Officer
  • d) High Court Judge
Show Answer / விடை

Answer (தமிழ்): தலைமை தேர்தல் அதிகாரி
Answer (English): Chief Electoral Officer

Exam: Group 4 2016

Question 8

சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு கொண்டுள்ளது.

Find out the correct statement.
The Indian Constitution contains

Choices (தமிழ்):

  • a) XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
  • b) XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
  • c) XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
  • d) XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்

Choices (English):

  • a) XXII parts, 449 Articles and 12 Schedules
  • b) XXI parts, 438 Articles and 8 Schedules
  • c) XXIII parts, 469 Articles and 21 Schedules
  • d) XX parts, 428 Articles and 18 Schedules
Show Answer / விடை

Answer (தமிழ்): XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
Answer (English): XXII parts, 449 Articles and 12 Schedules

Exam: Group 4 2016

Question 9

பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Which of the following is incorrectly matched?

Choices (தமிழ்):

  • a) காந்தியடிகள் படுகொலை - ஜனவரி 30, 1948
  • b) குடியரசு தினம் - ஜனவரி 26, 1950
  • c) சுதந்திர தினம் - ஆகஸ்டு 15, 1947
  • d) தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் - ஜனவரி 23, 1950

Choices (English):

  • a) Assassination of Gandhiji - January 30, 1948
  • b) Republic Day - January 26, 1950
  • c) Independence day - August 15, 1947
  • d) Constituent Assembly adopted National Anthem - January 23, 1950
Show Answer / விடை

Answer (தமிழ்): தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் - ஜனவரி 23, 1950
Answer (English): Constituent Assembly adopted National Anthem - January 23, 1950

Exam: Group 4 2016

Question 10

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Which of the following is correctly matched?

Choices (தமிழ்):

  • a) குடியரகத் தலைவர் - அரசியலமைப்பின் பாதுகாவலர்
  • b) முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
  • c) உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள்
  • d) தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி

Choices (English):

  • a) The President - Guardian of our Constitution
  • b) The Chief Minister - Appointed by the Governor
  • c) Supreme Court - Unique Identification
  • d) National Anthem - Bankim Chandra Chatterjee
Show Answer / விடை

Answer (தமிழ்): முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
Answer (English): The Chief Minister - Appointed by the Governor

Exam: Group 4 2016

Question 11

நுகர்வோர் நீதிமன்றங்கள் _____ அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
Consumer Courts are set up in _____ tier system.

Choices (தமிழ்):

  • a) 2
  • b) 3
  • c) 4
  • d) 5

Choices (English):

  • a) Two
  • b) Three
  • c) Four
  • d) Five
Show Answer / விடை

Answer (தமிழ்): 3
Answer (English): Three

Exam: Group 4 2016

Question 12

''பாப்பான் பச்சோவ் அந்தோலன்" என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
"Bachpan Bachao Andolan" is an organisation that fights against

Choices (தமிழ்):

  • a) குழந்தை தொழிலாளி
  • b) கொத்தடிமை
  • c) பாலிய விவாகம்
  • d) வறுமை ஒழிப்பு

Choices (English):

  • a) Child labour
  • b) Bonded labour
  • c) Child marriage
  • d) Poverty
Show Answer / விடை

Answer (தமிழ்): குழந்தை தொழிலாளி
Answer (English): Child labour

Exam: Group 4 2016

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (Tamil Nadu History, Culture, Heritage & Socio-Political Movements)

Question 1

சரியாக பொருத்துக:
(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே - 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் - 2. Dr.முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது - 3. சமூக நீதி
(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை - 4. தடை சட்டம் கொண்டு வந்தார்

Match the following :
(a) To eradicate the inequality in the society - 1. Beliefs passed through the generation
(b) Women depend on male companions - 2. It proclaims the fame of Dr. Muthu Lakshmi
(c) To stop the customs of child marriage - 3. Social justice
(d) Cancer institute at Adyar - 4. Prohibition

Choices (தமிழ்):

  • a) 3 1 4 2
  • b) 2 3 1 4
  • c) 1 4 2 3
  • d) 4 2 3 1

Choices (English):

  • a) 3 1 4 2
  • b) 2 3 1 4
  • c) 1 4 2 3
  • d) 4 2 3 1
Show Answer / விடை

Answer (தமிழ்): 3 1 4 2
Answer (English): 3 1 4 2

Exam: Group 4 2016

Question 2

புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி _____ பல்லவர்களது கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
The Pallava inscription at _____ refers to a great musician Rudracharya.

Choices (தமிழ்):

  • a) குடுமியான் மலை
  • b) மாமண்டுர்
  • c) உத்திரமேரூர்
  • d) மகேந்திரவாடி

Choices (English):

  • a) Kudumiyan Malai
  • b) Mamandur
  • c) Uthiramerur
  • d) Mahendravadi
Show Answer / விடை

Answer (தமிழ்): குடுமியான் மலை
Answer (English): Kudumiyan Malai

Exam: Group 4 2016

Question 3

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
During the age of Kalabhras, a Jain monk who established Dravida Sangha at Madurai was

Choices (தமிழ்):

  • a) வஜ்ஜிரநந்தி
  • b) பார்சவ முனிவர்
  • c) மகாவீரர்
  • d) மகா கசபர்

Choices (English):

  • a) Vajranandhi
  • b) Parsava Munivar
  • c) Mahavir
  • d) Maha Kasabar
Show Answer / விடை

Answer (தமிழ்): வஜ்ஜிரநந்தி
Answer (English): Vajranandhi

Exam: Group 4 2016

Question 4

தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
The Tanjore king who-helped Vijayanagar king in the battle of Thalaikottai was

Choices (தமிழ்):

  • a) சேவப்ப நாயக்கர்
  • b) அச்கதப்ப நாயக்கர்
  • c) இரகுநாத நாயக்கர்
  • d) சரபோஜி மன்னர்

Choices (English):

  • a) Sevappa Nayak
  • b) Achutappa Nayak
  • c) Ragunatha Nayak
  • d) King Sarfoji
Show Answer / விடை

Answer (தமிழ்): அச்கதப்ப நாயக்கர்
Answer (English): Achutappa Nayak

Exam: Group 4 2016

Question 5

'சத்யமேவ ஜெயதே' என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
National motto "Satyameva Jayate" hence forth appears as "Vaimaye Vellum" in Tamil was announced by

Choices (தமிழ்):

  • a) அரவிந்த் கோஷ்
  • b) பெரியார்
  • c) காமராசர்
  • d) அண்ணாதுரை

Choices (English):

  • a) Arabind Ghosh
  • b) Periyar
  • c) Kamaraj
  • d) Annadurai
Show Answer / விடை

Answer (தமிழ்): அண்ணாதுரை
Answer (English): Annadurai

Exam: Group 4 2016

Question 6

வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
How many years V.O.C. was sentenced to imprisonment?

Choices (தமிழ்):

  • a) 30
  • b) 35
  • c) 40
  • d) 34

Choices (English):

  • a) 30
  • b) 35
  • c) 40
  • d) 34
Show Answer / விடை

Answer (தமிழ்): 40
Answer (English): 40

Exam: Group 4 2016

இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (Indian History, Culture & National Movement)

Question 1

“முணுமுணுக்கும் அரங்கம்”- என்று அழைக்கப்படுவது எது?
Which is known as the "Murmering Auditorium"?

Choices (தமிழ்):

  • a) கோல்கொண்டா
  • b) கோல்கும்பாஸ்
  • c) குல்பர்கா
  • d) ஜூம்மா மசூதி

Choices (English):

  • a) Golkonda
  • b) Golkumbas
  • c) Gulberga
  • d) Jumma Masjid
Show Answer / விடை

Answer (தமிழ்): கோல்கும்பாஸ்
Answer (English): Golkumbas

Exam: Group 4 2016

Question 2

சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
Which Mughal King killed the Sikh Guru Tegh Bahadur?

Choices (தமிழ்):

  • a) அக்பர்
  • b) ஔரங்கசீப்
  • c) ஷாஜகான்
  • d) ஜஹாங்கீர்

Choices (English):

  • a) Akbar
  • b) Aurangazeb
  • c) Shahjahan
  • d) Jahangir
Show Answer / விடை

Answer (தமிழ்): ஔரங்கசீப்
Answer (English): Aurangazeb

Exam: Group 4 2016

Question 3

பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் - 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் - 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் - 3. கவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா - 4. ஸ்ரீ நாராயண குரு

Match:
(a) Sathya Sodhak Samaj - 1. Ramalinga Adigal
(b) Jeeva Karunyam - 2. Jyotiba Phule
(c) Dharma Paribalanam - 3. Swami Vivekanandha
(d) Jeeva is Siva - 4. Sri Narayana Guru

Choices (தமிழ்):

  • a) 2 1 4 3
  • b) 2 4 3 1
  • c) 4 1 2 3
  • d) 1 3 2 4

Choices (English):

  • a) 2 1 4 3
  • b) 2 4 3 1
  • c) 4 1 2 3
  • d) 1 3 2 4
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 1 4 3
Answer (English): 2 1 4 3

Exam: Group 4 2016

Question 4

சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
Which of these describes the conquest and victories of Samudra Gupta?

Choices (தமிழ்):

  • a) உத்திரமேரூர் கல்வெட்டு
  • b) அலகாபாத் தூண் கல்வெட்டு
  • c) ஐஹோலே கல்வெட்டு
  • d) அசோகரின் கல்வெட்டு

Choices (English):

  • a) Uthiramerur inscription
  • b) Allahabad Pillar inscription
  • c) Ihola inscription
  • d) Ashokas inscription
Show Answer / விடை

Answer (தமிழ்): அலகாபாத் தூண் கல்வெட்டு
Answer (English): Allahabad Pillar inscription

Exam: Group 4 2016

Question 5

டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
Who was the last Sultan of Delhi Sulthanate?

Choices (தமிழ்):

  • a) இப்ராஹிம் லோடி
  • b) சிக்கந்தர் லோடி
  • c) இப்ராஹிம் அலி
  • d) தௌலத் கான் லோடி

Choices (English):

  • a) Ibrahim Lodi
  • b) Sikkandar Lodi
  • c) Ibrahim Ali
  • d) Dowlath Khan Lodi
Show Answer / விடை

Answer (தமிழ்): இப்ராஹிம் லோடி
Answer (English): Ibrahim Lodi

Exam: Group 4 2016

Question 6

நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
Who built the Nalanda university?

Choices (தமிழ்):

  • a) குமார குப்தர்
  • b) ஸ்ரீ குப்தர்
  • c) சந்திர குப்தர்
  • d) சமுத்திர குப்தர்

Choices (English):

  • a) Kumara Gupta
  • b) Shri Gupta
  • c) Chandra Gupta
  • d) Samudra Gupta
Show Answer / விடை

Answer (தமிழ்): குமார குப்தர்
Answer (English): Kumara Gupta

Exam: Group 4 2016

Question 7

Dr.B.R.அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?
Where was Dr. B.R. Ambedkar born?

Choices (தமிழ்):

  • a) மகவு
  • b) மக்காவு
  • c) சரயு
  • d) லக்னோ

Choices (English):

  • a) Mhow
  • b) Makkavu
  • c) Sarayu
  • d) Lucknow
Show Answer / விடை

Answer (தமிழ்): மகவு
Answer (English): Mhow

Exam: Group 4 2016

Question 8

"நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?
Who remarked "The light has gone out of our lives and there is darkness everywhere"?

Choices (தமிழ்):

  • a) வல்லபாய் படேல்
  • b) Dr. ராஜேந்திர பிரசாத்
  • c) மவுண்ட் பேட்டன்
  • d) ஜவஹர்லால் நேரு

Choices (English):

  • a) Vallabai Patel
  • b) Dr. Rajendra Prasad
  • c) Mount Batten
  • d) Jawaharlal Nehru
Show Answer / விடை

Answer (தமிழ்): ஜவஹர்லால் நேரு
Answer (English): Jawaharlal Nehru

Exam: Group 4 2016

Question 9

மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Who chaired the first session of the Indian National Congress held at Bombay?

Choices (தமிழ்):

  • a) மதன் மோகன் மாளவியா
  • b) W.C.பானர்ஜி
  • c) பெரோஷ்ஷா மேத்தா
  • d) சுரேந்திரநாத் பானர்ஜி

Choices (English):

  • a) Madan Mohan Malavya
  • b) W.C. Banerjee
  • c) Pherozeshah Mehta
  • d) Surendranath Banerjee
Show Answer / விடை

Answer (தமிழ்): W.C.பானர்ஜி
Answer (English): W.C. Banerjee

Exam: Group 4 2016

புவியியல் (Geography)

Question 1

உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
The leading producers of jute in the world is

Choices (தமிழ்):

  • a) இந்தியா மற்றும் வங்காளதேசம்
  • b) இலங்கை மற்றும் பாகிஸ்தான்
  • c) சீனா மற்றும் ஜப்பான்
  • d) சிங்கப்பூர் மற்றும் மலேசியா

Choices (English):

  • a) India and Bangladesh
  • b) Srilanka and Pakistan
  • c) China and Japan
  • d) Singapore and Malaysia
Show Answer / விடை

Answer (தமிழ்): இந்தியா மற்றும் வங்காளதேசம்
Answer (English): India and Bangladesh

Exam: Group 4 2016

Question 2

பொருத்துக:
(a) கண்ட்லா - 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு - 2. குஜராத்
(c) பாரதீப் - 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா - 4. ஒரிசா

Match the following:
(a) Kandla - 1. Maharashtra
(b) Jawaharlal Nehru - 2. Gujarat
(c) Paradip - 3. West Bengal
(d) Haldia - 4. Orissa

Choices (தமிழ்):

  • a) 3 2 4 1
  • b) 4 1 3 2
  • c) 2 3 1 4
  • d) 2 1 4 3

Choices (English):

  • a) 3 2 4 1
  • b) 4 1 3 2
  • c) 2 3 1 4
  • d) 2 1 4 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 1 4 3
Answer (English): 2 1 4 3

Exam: Group 4 2016

Question 3

குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
Ox-bow lakes are formed in the

Choices (தமிழ்):

  • a) பள்ளதாக்கு பகுதி
  • b) மலைப் பகுதி
  • c) சமவெளிப் பகுதி
  • d) டெல்டா பகுதி

Choices (English):

  • a) Valley region
  • b) Mountain region
  • c) Plain region
  • d) Delta region
Show Answer / விடை

Answer (தமிழ்): சமவெளிப் பகுதி
Answer (English): Plain region

Exam: Group 4 2016

Question 4

மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
The shortest National Highway is

Choices (தமிழ்):

  • a) ΝΗ 48
  • b) NH 9
  • c) ΝΗ 45 A
  • d) NH 47 A

Choices (English):

  • a) ΝΗ 48
  • b) NH 9
  • c) ΝΗ 45 A
  • d) NH 47 A
Show Answer / விடை

Answer (தமிழ்): NH 47 A
Answer (English): NH 47 A

Exam: Group 4 2016

திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Reasoning)

Question 1

(3/7) + (-2/7) + (-5/7) + (6/7) ன் மதிப்பு
(3/7) + (-2/7) + (-5/7) + (6/7) is

Choices (தமிழ்):

  • a) 3/7
  • b) 5/7
  • c) 11/7
  • d) 19/7

Choices (English):

  • a) 3/7
  • b) 5/7
  • c) 11/7
  • d) 19/7
Show Answer / விடை

Answer (தமிழ்): 2/7
Answer (English): 2/7

Exam: Group 4 2016

Question 2

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
The population of a city in the year 2014 is 1,80,000 and increases at a rate of 20% per year. Find the population of the city in the year 2016?

Choices (தமிழ்):

  • a) 2,40,000
  • b) 2,59,200
  • c) 2,55,000
  • d) 2,54,300

Choices (English):

  • a) 2,40,000
  • b) 2,59,200
  • c) 2,55,000
  • d) 2,54,300
Show Answer / விடை

Answer (தமிழ்): 2,59,200
Answer (English): 2,59,200

Exam: Group 4 2016

Question 3

3 _ 25 என்ற எண்ணில் _ குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?
3 _ 25 here, which of the following number is suitable in _, so that the number will be a perfect square?

Choices (தமிழ்):

  • a) 1
  • b) 0
  • c) 4
  • d) 6

Choices (English):

  • a) 1
  • b) 0
  • c) 4
  • d) 6
Show Answer / விடை

Answer (தமிழ்): 6
Answer (English): 6

Exam: Group 4 2016

Question 4

10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்
The average mark of 10 children is 80 then their total mark is

Choices (தமிழ்):

  • a) 200
  • b) 300
  • c) 800
  • d) 400

Choices (English):

  • a) 200
  • b) 300
  • c) 800
  • d) 400
Show Answer / விடை

Answer (தமிழ்): 800
Answer (English): 800

Exam: Group 4 2016

Question 5

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
A man and woman are engaged in a work. A man can do a piece of work in 4 days and the woman can do in 12 days. Find how many days will they take to finish it together?

Choices (தமிழ்):

  • a) 6 நாட்கள்
  • b) 5 நாட்கள்
  • c) 4 நாட்கள்
  • d) 3 நாட்கள்

Choices (English):

  • a) 6 days
  • b) 5 days
  • c) 4 days
  • d) 3 days
Show Answer / விடை

Answer (தமிழ்): 3 நாட்கள்
Answer (English): 3 days

Exam: Group 4 2016

Question 6

கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?
Which of the following set of measurements will form a right angle triangle?

Choices (தமிழ்):

  • a) 6, 9, 12
  • b) 5, 8, 10
  • c) 5, 5, 5√2
  • d) 3, 4, 4√2

Choices (English):

  • a) 6, 9, 12
  • b) 5, 8, 10
  • c) 5, 5, 5√2
  • d) 3, 4, 4√2
Show Answer / விடை

Answer (தமிழ்): 5, 5, 5√2
Answer (English): 5, 5, 5√2

Exam: Group 4 2016

Question 7

√609 +√248 + √60 + √7 + √81 ன் மதிப்பு
The value of √609 +√248 + √60+√7+√81

Choices (தமிழ்):

  • a) 20
  • b) 25
  • c) 16
  • d) 9

Choices (English):

  • a) 20
  • b) 25
  • c) 16
  • d) 9
Show Answer / விடை

Answer (தமிழ்): 25
Answer (English): 25

Exam: Group 4 2016

Question 8

ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்
The price of a house is decreased from rupees fifteen lakhs to rupees twelve lakhs. The percentage of decrease is

Choices (தமிழ்):

  • a) 10%
  • b) 20%
  • c) 30%
  • d) 40%

Choices (English):

  • a) 10%
  • b) 20%
  • c) 30%
  • d) 40%
Show Answer / விடை

Answer (தமிழ்): 20%
Answer (English): 20%

Exam: Group 4 2016

Question 9

3(t-3)=5(2t + 1) எனில் t = ?
If 3 (t-3) = 5 (2t+1) then t =?

Choices (தமிழ்):

  • a) -2
  • b) 2
  • c) -3
  • d) 3

Choices (English):

  • a) -2
  • b) 2
  • c) -3
  • d) 3
Show Answer / விடை

Answer (தமிழ்): -2
Answer (English): -2

Exam: Group 4 2016

Question 10

1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75 / 1.75×1.75-0.75×0.75 ன் மதிப்பு
The value of 1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75 / 1.75×1.75-0.75×0.75

Choices (தமிழ்):

  • a) 3.5
  • b) 6.25
  • c) 1
  • d) 2.5

Choices (English):

  • a) 3.5
  • b) 6.25
  • c) 1
  • d) 2.5
Show Answer / விடை

Answer (தமிழ்): 2.5
Answer (English): 2.5

Exam: Group 4 2016

Question 11

16³ + 7³ - 23³ ன் மதிப்பு
The value of 16³ + 7³ - 23³ is

Choices (தமிழ்):

  • a) -7728
  • b) 7028
  • c) 7728
  • d) -7718

Choices (English):

  • a) -7728
  • b) 7028
  • c) 7728
  • d) -7718
Show Answer / விடை

Answer (தமிழ்): -7728
Answer (English): -7728

Exam: Group 4 2016

Question 12

1, 1, 2, 8, 3, 27, 4,... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?
Find the next term of 4 in the series is 1, 1, 2, 8, 3, 27, 4, ...

Choices (தமிழ்):

  • a) 31
  • b) 29
  • c) 16
  • d) 64

Choices (English):

  • a) 31
  • b) 29
  • c) 16
  • d) 64
Show Answer / விடை

Answer (தமிழ்): 64
Answer (English): 64

Exam: Group 4 2016

Question 13

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு
Three angles of a triangle are x-30°, x-45°, x + 15°, find the value of x.

Choices (தமிழ்):

  • a) 60°
  • b) 40°
  • c) 80°
  • d) 100°

Choices (English):

  • a) 60°
  • b) 40°
  • c) 80°
  • d) 100°
Show Answer / விடை

Answer (தமிழ்): 80°
Answer (English): 80°

Exam: Group 4 2016

Question 14

ரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
The difference between simple interest and compound interest for a sum of Rs. 12,000 lent at 10% per annum in 2 years, is

Choices (தமிழ்):

  • a) ரூ. 80
  • b) ரூ. 90
  • c) ரூ. 120
  • d) ரூ. 100

Choices (English):

  • a) Rs. 80
  • b) Rs. 90
  • c) Rs. 120
  • d) Rs. 100
Show Answer / விடை

Answer (தமிழ்): ரூ. 120
Answer (English): Rs. 120

Exam: Group 4 2016

Question 15

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ² எனில் அதன் அடிப்பக்க அளவு
The base of a triangle is four times its height and its area is 50 m². The length of the base is

Choices (தமிழ்):

  • a) 10 மீ
  • b) 15 மீ
  • c) 20 மீ
  • d) 25 மீ

Choices (English):

  • a) 10 m
  • b) 15 m
  • c) 20 m
  • d) 25 m
Show Answer / விடை

Answer (தமிழ்): 20 மீ
Answer (English): 20 m

Exam: Group 4 2016

Question 16

A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ.3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
A can do a piece of work in 20 days and B can do it in 25 days. Both of them finished the work and earned Rs. 3,600. Then A's share is

Choices (தமிழ்):

  • a) ரூ. 1,600
  • b) ரூ. 2,000
  • c) ரூ. 3,000
  • d) ரூ. 3,100

Choices (English):

  • a) Rs. 1,600
  • b) Rs. 2,000
  • c) Rs. 3,000
  • d) Rs. 3,100
Show Answer / விடை

Answer (தமிழ்): ரூ. 2,000
Answer (English): Rs. 2,000

Exam: Group 4 2016

Question 17

(7/12)⁻⁴ * (7/12)³ˣ = (7/12)⁵ எனில் x-ன் மதிப்பு
If (7/12)⁻⁴ * (7/12)³ˣ = (7/12)⁵; then the value of x is

Choices (தமிழ்):

  • a) -1
  • b) 1
  • c) 2
  • d) 3

Choices (English):

  • a) -1
  • b) 1
  • c) 2
  • d) 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 3
Answer (English): 3

Exam: Group 4 2016

Question 18

22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்
If 22 men can build a wall of 110 meters in 10 days. The length of a similar wall built by 30 men in 6 days is

Choices (தமிழ்):

  • a) 100 மீ
  • b) 90 மீ
  • c) 80 மீ
  • d) 70 மீ

Choices (English):

  • a) 100 mts
  • b) 90 mts
  • c) 80 mts
  • d) 70 mts
Show Answer / விடை

Answer (தமிழ்): 90 மீ
Answer (English): 90 mts

Exam: Group 4 2016

Question 19

ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4:7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
If the ratio of length and breadth of a rectangle is 4: 7. Find the length while its breadth is 77 cm.

Choices (தமிழ்):

  • a) 22 செ.மீ
  • b) 33 செ.மீ
  • c) 44 செ.மீ
  • d) 55 செ.மீ

Choices (English):

  • a) 22 cm
  • b) 33 cm
  • c) 44 cm
  • d) 55 cm
Show Answer / விடை

Answer (தமிழ்): 44 செ.மீ
Answer (English): 44 cm

Exam: Group 4 2016

Question 20

ஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன் பரப்பளவு
A room is 5 m 40 cm long and 4 m 50 cm broad. Its Area is

Choices (தமிழ்):

  • a) 23.4 மீ²
  • b) 24.3 மீ²
  • c) 25 மீ²
  • d) 98.01 மீ²

Choices (English):

  • a) 23.4 m²
  • b) 24.3 m²
  • c) 25 m²
  • d) 98.01 m²
Show Answer / விடை

Answer (தமிழ்): 24.3 மீ²
Answer (English): 24.3 m²

Exam: Group 4 2016

Question 21

சுருக்குக 5 1/3 + 4 1/2 ÷ 7 1/8 × 6 1/4 - 1 1/8
Simplify 5 1/3 + 4 1/2 ÷ 7 1/8 × 6 1/4 - 1 1/8

Choices (தமிழ்):

  • a) 98/47
  • b) 108/49
  • c) 98/45
  • d) 96/47

Choices (English):

  • a) 98/47
  • b) 108/49
  • c) 98/45
  • d) 96/47
Show Answer / விடை

Answer (தமிழ்): 98/47
Answer (English): 98/47

Exam: Group 4 2016

Question 22

ஓர் அசலானது 2 வருடத்தில் 9/4 மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
Find the rate of interest at which, a sum of money becomes 9/4 times in 2 years.

Choices (தமிழ்):

  • a) 69%
  • b) 67%
  • c) 62 1/2%
  • d) 61%

Choices (English):

  • a) 69%
  • b) 67%
  • c) 62 1/2%
  • d) 61%
Show Answer / விடை

Answer (தமிழ்): 62 1/2%
Answer (English): 62 1/2%

Exam: Group 4 2016

Question 23

ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ³ எனில் அதன் நீளத்தை கண்டறிக.
The breadth, height and volume of a cuboid are 10 cm, 11 cm and 3080 cm³ respectively. Find the length of the cuboid.

Choices (தமிழ்):

  • a) 21 செ.மீ.
  • b) 28 செ.மீ.
  • c) 24 செ.மீ.
  • d) 30 செ.மீ.

Choices (English):

  • a) 21 cm
  • b) 28 cm
  • c) 24 cm
  • d) 30 cm
Show Answer / விடை

Answer (தமிழ்): 28 செ.மீ.
Answer (English): 28 cm

Exam: Group 4 2016

Question 24

ஒருவர் ரூ.1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவீகிதத்தைக் காண்.
A man bought an old bicycle for Rs. 1,500. He spends Rs. 500 on its repair and sells it for Rs. 1,800. Find the percentage of his loss.

Choices (தமிழ்):

  • a) 10%
  • b) 15%
  • c) 20%
  • d) 5%

Choices (English):

  • a) 10%
  • b) 15%
  • c) 20%
  • d) 5%
Show Answer / விடை

Answer (தமிழ்): 10%
Answer (English): 10%

Exam: Group 4 2016

Question 25

a³b⁴, ab⁵, a²b⁷ -ன் மீ.பொ.ம காண்க
Find the LCM of a³b⁴, ab⁵ and a²b⁷

Choices (தமிழ்):

  • a) a⁷b³
  • b) a³b⁷
  • c) a²b⁵
  • d) ab⁵

Choices (English):

  • a) a⁷b³
  • b) a³b⁷
  • c) a²b⁵
  • d) ab⁵
Show Answer / விடை

Answer (தமிழ்): a³b⁷
Answer (English): a³b⁷

Exam: Group 4 2016