Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2019
தமிழ் (Tamil)
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
Choices:
- a) அகநானூறு
- b) ஐங்குறுநூறு
- c) நற்றிணை
- d) பரிபாடல்
Show Answer / விடை
Answer: நற்றிணை
Exam: Group 4 2019
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
Choices:
- a) பரிபாடல்
- b) நற்றிணை
- c) ஐங்குறுநூறு
- d) பதிற்றுப்பத்து
Show Answer / விடை
Answer: பரிபாடல்
Exam: Group 4 2019
தவறான இணையைத் தேர்வு செய்க:
Choices:
- a) குறிஞ்சி - கபிலர்
- b) முல்லை - ஓதலாந்தையார்
- c) மருதம் - ஓரம்போகியார்
- d) நெய்தல் - அம்மூவனார்
Show Answer / விடை
Answer: முல்லை - ஓதலாந்தையார்
Exam: Group 4 2019
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
Choices:
- a) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
- b) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
- c) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
- d) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Show Answer / விடை
Answer: கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
Exam: Group 4 2019
செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு
Choices:
- a) உவமை
- b) அடுக்குத்தொடர்
- c) எண்ணும்மை
- d) உருவகம்
Show Answer / விடை
Answer: உருவகம்
Exam: Group 4 2019
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?
Choices:
- a) படை கவசம்
- b) படை கருவிகள்
- c) கைப்பொருள்
- d) வலிமையான ஆயுதம்
Show Answer / விடை
Answer: கைப்பொருள்
Exam: Group 4 2019
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
Choices:
- a) பொழிப்பு எதுகை
- b) கூழை எதுகை
- c) மேற்கதுவாய் எதுகை
- d) கீழ்க்கதுவாய் எதுகை
Show Answer / விடை
Answer: கூழை எதுகை
Exam: Group 4 2019
'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
Choices:
- a) கூழை எதுகை
- b) மேற்கதுவாய் எதுகை
- c) கீழ்க்கதுவாய் எதுகை
- d) பொழிப்பு எதுகை
Show Answer / விடை
Answer: மேற்கதுவாய் எதுகை
Exam: Group 4 2019
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
Choices:
- a) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
- b) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
- c) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
- d) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
Show Answer / விடை
Answer: அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
Exam: Group 4 2019
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
Choices:
- a) உம்மைத்தொகை
- b) பெண்பால் பெயர்கள்
- c) எண்ணும்மை
- d) அன்மொழித்தொகை
Show Answer / விடை
Answer: எண்ணும்மை
Exam: Group 4 2019
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
Choices:
- a) மிகும்
- b) மிகாது
- c) சில இடங்களில் வரும்
- d) சில இடங்களில் வராது
Show Answer / விடை
Answer: மிகும்
Exam: Group 4 2019
தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
Choices:
- a) ஏவல் வினைமுற்று
- b) உரிச்சொல் தொடர்
- c) பண்புத்தொகை
- d) வினைத்தொகை
Show Answer / விடை
Answer: வினைத்தொகை
Exam: Group 4 2019
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
Choices:
- a) பழுத்த பழம்
- b) பழுக்கும் பழம்
- c) பழுக்கின்றது.
- d) பழங்கள் பழுத்தன
Show Answer / விடை
Answer: பழுக்கின்றது.
Exam: Group 4 2019
படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
Choices:
- a) படித்து
- b) படித்தல்
- c) படித்த
- d) பாடுதல்
Show Answer / விடை
Answer: படித்து
Exam: Group 4 2019
"கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
Choices:
- a) கற்றல்
- b) கற்பனை
- c) கண்டான்
- d) கல்லை
Show Answer / விடை
Answer: கற்றல்
Exam: Group 4 2019
"இயல்பானது" வேர்ச்சொல்லறிக
Choices:
- a) இயல்
- b) இயல்பு
- c) இயைபு
- d) இய
Show Answer / விடை
Answer: இயல்பு
Exam: Group 4 2019
'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
Choices:
- a) தலைவன்
- b) நெருப்பு
- c) அரண்
- d) அம்பு
Show Answer / விடை
Answer: அம்பு
Exam: Group 4 2019
குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
Choices:
- a) குழலிக்குப் பாடத்தெரியும்
- b) குழலியின் பாடத்தெரியும்
- c) குழலி பாடத்தெரியும்
- d) குழலியால் பாடத்தெரியும்
Show Answer / விடை
Answer: குழலிக்குப் பாடத்தெரியும்
Exam: Group 4 2019
தமிழ்ச்சொல்லைக் கண்டறிக :
Choices:
- a) அனுமதி
- b) ஈசன்
- c) குபேரன்
- d) மணிமுடி
Show Answer / விடை
Answer: மணிமுடி
Exam: Group 4 2019
பொருந்தா இணையைச் சுட்டுக :
Choices:
- a) குறிஞ்சி - யாமம்
- b) முல்லை மாலை
- c) மருதம் - நண்பகல்
- d) நெய்தல் - எற்பாடு
Show Answer / விடை
Answer: மருதம் - நண்பகல்
Exam: Group 4 2019
மிசை- எதிர்ச்சொல் காண்க :
Choices:
- a) இசை
- b) கீழ்
- c) விசை
- d) நாள்
Show Answer / விடை
Answer: கீழ்
Exam: Group 4 2019
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
Choices:
- a) கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
- b) கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
- c) கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
- d) கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Show Answer / விடை
Answer: கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
Exam: Group 4 2019
பொருத்துக
வேற்றுமை உருபு
(a) நான்காம் வேற்றுமை 1. இன்
(b) ஐந்தாம் வேற்றுமை 2. அது
(c) ஆறாம் வேற்றுமை 3. கண்
(d) ஏழாம் வேற்றுமை 4. கு
Choices:
- a) (a) (b) (c) (d) 4 1 2 3
- b) 3 2 1 4
- c) 2 3 4 1
- d) 1 4 3 2
Show Answer / விடை
Answer: (a) (b) (c) (d) 4 1 2 3
Exam: Group 4 2019
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
Choices:
- a) 1,4 சரி
- b) 2, 3 சரி
- c) 2,4 சரி
- d) 1,3 சரி
Show Answer / விடை
Answer: 2, 3 சரி
Exam: Group 4 2019
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
Choices:
- a) அரசுக்கணக்கர்
- b) தட்டச்சுப்பணியாளர்
- c) பத்திரிக்கையாளர்
- d) இசைப்பணியாளர்
Show Answer / விடை
Answer: அரசுக்கணக்கர்
Exam: Group 4 2019
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
Choices:
- a) திலகவதி
- b) தில்லையாடி வள்ளியம்மை
- c) ஜான்சிராணி
- d) நாகம்மை
Show Answer / விடை
Answer: தில்லையாடி வள்ளியம்மை
Exam: Group 4 2019
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
Choices:
- a) கலீலியோ
- b) நிகோலஸ்கிராப்ஸ்
- c) சி.வி.இராமன்
- d) தாமஸ் ஆல்வா எடிசன்
Show Answer / விடை
Answer: கலீலியோ
Exam: Group 4 2019
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
Choices:
- a) ஆறுமுக நாவலர்
- b) ஜோசப் கொன்ஸ்டான்
- c) ஜேம்ஸ் பிராங்கா
- d) ஜி.யு. போப்
Show Answer / விடை
Answer: ஜேம்ஸ் பிராங்கா
Exam: Group 4 2019
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Choices:
- a) கால்டுவெல்
- b) ஜி.யு.போப்
- c) வீரமாமுனிவர்
- d) ஷெல்லி
Show Answer / விடை
Answer: ஜி.யு.போப்
Exam: Group 4 2019
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
Choices:
- a) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- b) பெருங்குன்று கிழார்
- c) பெருநாவலர்
- d) பாவேந்தர் பாரதிதாசன்
Show Answer / விடை
Answer: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Exam: Group 4 2019
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
Choices:
- a) கவிஞர் சுரதா
- b) கவிஞர் மீரான்
- c) பாரதிதாசன்
- d) பெருஞ்சித்திரனார்
Show Answer / விடை
Answer: பெருஞ்சித்திரனார்
Exam: Group 4 2019
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Choices:
- a) சி.வை.தாமோதரம்
- b) வ. சுப. மாணிக்கம்
- c) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- d) சீனி. வேங்கடசாமி
Show Answer / விடை
Answer: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Exam: Group 4 2019
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
Choices:
- a) மு.சி. பூர்ணலிங்கம்
- b) தெ.பொ. மீனாட்சி சுந்தரம்
- c) கே. வி. சுப்பையா
- d) எல்.வி.இராமசுவாமி
Show Answer / விடை
Answer: மு.சி. பூர்ணலிங்கம்
Exam: Group 4 2019
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
Choices:
- a) கந்தர்வன்
- b) நாஞ்சில் நாடன்
- c) புதுமைப்பித்தன்
- d) வண்ணதாசன்
Show Answer / விடை
Answer: புதுமைப்பித்தன்
Exam: Group 4 2019
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
Choices:
- a) மரபியல்
- b) பொருளியல்
- c) மெய்ப்பாட்டியல்
- d) களவியல்
Show Answer / விடை
Answer: மெய்ப்பாட்டியல்
Exam: Group 4 2019
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
Choices:
- a) நாடகக்கலை
- b) நாட்டியக்கலை
- c) இசைக்கலை
- d) ஓவியக்கலை
Show Answer / விடை
Answer: இசைக்கலை
Exam: Group 4 2019
'சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்
Choices:
- a) அண்ணா
- b) காந்தி
- c) அம்பேத்கர்
- d) மு.வரதராசனார்
Show Answer / விடை
Answer: அண்ணா
Exam: Group 4 2019
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
Choices:
- a) துறைமுகம்
- b) சுவரும் சுண்ணாம்பும்
- c) தேன்மழை
- d) சுரதாவின் கவிதைகள்
Show Answer / விடை
Answer: தேன்மழை
Exam: Group 4 2019
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
Choices:
- a) சுரதா
- b) மு.மேத்தா
- c) தாரா பாரதி
- d) அப்துல் ரகுமான்
Show Answer / விடை
Answer: சுரதா
Exam: Group 4 2019
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Choices:
- a) கண்ணகி புரட்சிக் காப்பியம்
- b) பிசிராந்தையார்
- c) சுவரும் சுண்ணாம்பும்
- d) பாண்டியன் பரிசு
Show Answer / விடை
Answer: பிசிராந்தையார்
Exam: Group 4 2019
நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
Choices:
- a) நடுவணரசு
- b) மாநில அரசு
- c) ஆங்கில அரசு
- d) பிரெஞ்சு அரசு
Show Answer / விடை
Answer: நடுவணரசு
Exam: Group 4 2019
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
Choices:
- a) பாம்பாட்டிச்சித்தர்
- b) திருமூலர்
- c) போகர்
- d) கோரக்கர்
Show Answer / விடை
Answer: திருமூலர்
Exam: Group 4 2019
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
Choices:
- a) மனோன்மணீயம்
- b) அகத்தியம்
- c) முறுவல்
- d) குணநூல்
Show Answer / விடை
Answer: மனோன்மணீயம்
Exam: Group 4 2019
மனோன்மணியத்தை இயற்றியவர்
Choices:
- a) சுந்தரம் பிள்ளை
- b) சுந்தர முனிவர்
- c) சுந்தரர்
- d) சுந்தர மூர்த்தி
Show Answer / விடை
Answer: சுந்தரம் பிள்ளை
Exam: Group 4 2019
செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
Choices:
- a) இரண்டாம் பருவம்
- b) ஐந்தாம் பருவம்
- c) முதற் பருவம்
- d) மூன்றாம் பருவம்
Show Answer / விடை
Answer: இரண்டாம் பருவம்
Exam: Group 4 2019
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
Choices:
- a) சிவதொண்டர் புராணம்
- b) சிவனடியார் புராணம்
- c) திருத்தொண்டர் புராணம்
- d) தொண்டர்சீர் புராணம்
Show Answer / விடை
Answer: திருத்தொண்டர் புராணம்
Exam: Group 4 2019
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
Choices:
- a) பல்கலைக்கழகம்
- b) அரசவைக் கவிஞர் பணி
- c) அறக்கட்டளை
- d) பேராசிரியர் பணி
Show Answer / விடை
Answer: பல்கலைக்கழகம்
Exam: Group 4 2019
பொருளறிந்து பொருத்துக:
(a) தடக்கர் 1. கரடி
(b) எண்கு 2. காட்சி
(c) வள்உகிர் 3. பெரிய யானை
(d) தெரிசனம் 4. கூர்மையான நகம்
Choices:
- a) (a) (b) (c) (d) 3 1 4 2
- b) 1 4 3 2
- c) 1 2 3 4
- d) 1 3 2 4
Show Answer / விடை
Answer: (a) (b) (c) (d) 3 1 4 2
Exam: Group 4 2019
குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
Choices:
- a) கைகேயி
- b) பத்தரை
- c) சுமத்திரை
- d) மாதவி
Show Answer / விடை
Answer: பத்தரை
Exam: Group 4 2019
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
Choices:
- a) சமணத் துறவி
- b) பௌத்தத் துறவி
- c) இஸ்லாமியத் துறவி
- d) சைவ துறவி
Show Answer / விடை
Answer: சமணத் துறவி
Exam: Group 4 2019
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
Choices:
- a) சீவகசிந்தாமணி
- b) மணிமேகலை
- c) குண்டலகேசி
- d) நீலகேசி
Show Answer / விடை
Answer: மணிமேகலை
Exam: Group 4 2019
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்!- மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Choices:
- a) சிலம்பு
- b) கம்ப இராமாயணம்
- c) மணிமேகலை
- d) பெரிய புராணம்
Show Answer / விடை
Answer: மணிமேகலை
Exam: Group 4 2019
குறுந்தொகை நூலின் 'பா' வகை யாது?
Choices:
- a) கலிப்பா
- b) வஞ்சிப்பா
- c) வெண்பா
- d) அகவற்பா
Show Answer / விடை
Answer: அகவற்பா
Exam: Group 4 2019
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்.
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
இக்கூற்றிற்குரியவர் யார்?
Choices:
- a) இராமன்
- b) இலக்குவன்
- c) அனுமன்
- d) குகன்
Show Answer / விடை
Answer: குகன்
Exam: Group 4 2019
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Choices:
- a) நற்றிணை
- b) குறிஞ்சிப்பாட்டு
- c) பரிபாடல்
- d) ஏலாதி
Show Answer / விடை
Answer: ஏலாதி
Exam: Group 4 2019
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
Choices:
- a) இன்னா நாற்பது
- b) நான்மணிக்கடிகை
- c) நாலடியார்
- d) சிறுபஞ்சமூலம்
Show Answer / விடை
Answer: நாலடியார்
Exam: Group 4 2019
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள _________ ஆகும்.
Choices:
- a) நற்பண்பு
- b) நற்குணம்
- c) புகழ்
- d) நல்லெண்ணங்கள்
Show Answer / விடை
Answer: நல்லெண்ணங்கள்
Exam: Group 4 2019
பொருட்பாலின் இயல்கள்
Choices:
- a) பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
- b) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
- c) களவியல்,கற்பியல்
- d) பாயிரவியல், அரசியல்,களவியல்
Show Answer / விடை
Answer: அரசியல், அங்கவியல், ஒழிபியல்
Exam: Group 4 2019
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
Choices:
- a) தென்னை போன்ற தோள்
- b) பளிங்கு போன்ற தோள்
- c) மூங்கில் போன்ற தோள்
- d) வாழை போன்ற தோள்
Show Answer / விடை
Answer: மூங்கில் போன்ற தோள்
Exam: Group 4 2019
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Choices:
- a) எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
- b) எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
- c) எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
- d) எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
Show Answer / விடை
Answer: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
Exam: Group 4 2019
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.-பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
Choices:
- a) அயற்கூற்று வாக்கியம்
- b) நேர்க்கூற்று வாக்கியம்
- c) கலவை வாக்கியம்
- d) எதிர்மறை வாக்கியம்
Show Answer / விடை
Answer: அயற்கூற்று வாக்கியம்
Exam: Group 4 2019
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
Choices:
- a) தன்வினை வாக்கியம்
- b) செய்வினை வாக்கியம்
- c) பிறவினை வாக்கியம்
- d) செயப்பாட்டுவினை வாக்கியம்
Show Answer / விடை
Answer: பிறவினை வாக்கியம்
Exam: Group 4 2019
அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
Choices:
- a) குணப் பெயர்
- b) இடப் பெயர்
- c) காலப் பெயர்
- d) தொழில் பெயர்
Show Answer / விடை
Answer: காலப் பெயர்
Exam: Group 4 2019
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
Choices:
- a) மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
- b) மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
- c) மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
- d) மாணவர்கள் செய்க வட்டமாக உட்கார
Show Answer / விடை
Answer: மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
Exam: Group 4 2019
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
Choices:
- a) மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
- b) மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
- c) நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
- d) பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
Show Answer / விடை
Answer: நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
Exam: Group 4 2019
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
Choices:
- a) கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
- b) கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
- c) கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
- d) கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
Show Answer / விடை
Answer: கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
Exam: Group 4 2019
சொல்லுக்கேற்ற பொருளறிக :
Choices:
- a) வலிமை - திண்மை
- b) நாண் - தன்னைக்குறிப்பது
- c) கான் - பார்
- d) துணி - துன்பம்
Show Answer / விடை
Answer: வலிமை - திண்மை
Exam: Group 4 2019
சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை மறை
Choices:
- a) மான் வேதம்
- b) தாமரை புலன்
- c) வேதம் இயல்பு
- d) யானை மறைத்தல்
Show Answer / விடை
Answer: மான் வேதம்
Exam: Group 4 2019
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
Choices:
- a) ஒளி நகல்
- b) ஒலி நகல்
- c) அசல் படம்
- d) மறு படம்
Show Answer / விடை
Answer: ஒளி நகல்
Exam: Group 4 2019
"மா" ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
Choices:
- a) பெரிய
- b) இருள்
- c) வானம்
- d) அழகு
Show Answer / விடை
Answer: பெரிய
Exam: Group 4 2019
பாகற்காய் - பிரித்தெழுதுக
Choices:
- a) பாகு + அல் + காய்
- b) பாகு + அற்காய்
- c) பாகற் + காய்
- d) பாகு + கல்+காய்
Show Answer / விடை
Answer: பாகு + அல் + காய்
Exam: Group 4 2019
பைந்நிணம் - பிரித்தெழுதுக
Choices:
- a) பை + நிணம்
- b) பை + இணம்
- c) பசுமை + நிணம்
- d) பசுமை + இணம்
Show Answer / விடை
Answer: பசுமை + நிணம்
Exam: Group 4 2019
"திருத்தொண்டர் புராணம்' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
Choices:
- a) திருவிளையாடற்புராணம்
- b) மேருமந்த புராணம்
- c) திருவாசகம்
- d) பெரியபுராணம்
Show Answer / விடை
Answer: பெரியபுராணம்
Exam: Group 4 2019
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Choices:
- a) ஐங்குறுநூறு
- b) குறுந்தொகை
- c) கலித்தொகை
- d) புறநானூறு
Show Answer / விடை
Answer: ஐங்குறுநூறு
Exam: Group 4 2019
தவறான இணை எது?
Choices:
- a) மணித்தக்காளி - வாய்ப்பண்
- b) முசுமுசுக்கை வேர் - இருமல்
- c) அகத்திக் கீரை - கண்நோய்
- d) வேப்பங்கொழுந்து - மார்புச்சளி
Show Answer / விடை
Answer: அகத்திக் கீரை - கண்நோய்
Exam: Group 4 2019
பொருந்தாத இணை எது?
Choices:
- a) மேற்கு மலையில் இருந்து வந்தவை - சந்தனம், ஆரம்
- b) கீழ்க்கடலில் விளைந்தவை - பவளம்
- c) வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
- d) தென்கடலில் இருந்து கிடைத்தவை - முத்து
Show Answer / விடை
Answer: வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
Exam: Group 4 2019
அகர வரிசைப்படுத்துக
Choices:
- a) மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
- b) முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை,மருங்கை
- c) மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
- d) மருங்கை,முசிறி,மூதூர்,மிளகு, மேற்குமலை
Show Answer / விடை
Answer: மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
Exam: Group 4 2019
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
Choices:
- a) இராணி மங்கம்மாள்
- b) ஜான்சி ராணி
- c) தில்லையாடி வள்ளியம்மை
- d) வேலுநாச்சியார்
Show Answer / விடை
Answer: இராணி மங்கம்மாள்
Exam: Group 4 2019
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
Choices:
- a) ஆட்டையாம்பட்டி
- b) வேப்பனேரி
- c) புளியம்பட்டி
- d) புளியங்குடி
Show Answer / விடை
Answer: ஆட்டையாம்பட்டி
Exam: Group 4 2019
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
Choices:
- a) அம்பேத்கர்
- b) இராஜாஜி
- c) அண்ணா
- d) காமராசர்
Show Answer / விடை
Answer: அம்பேத்கர்
Exam: Group 4 2019
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் 'தமிழ்ப்பீடம்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
Choices:
- a) 2005
- b) 2004
- c) 2003
- d) 2006
Show Answer / விடை
Answer: 2005
Exam: Group 4 2019
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
Choices:
- a) ஜி.யு. போப்
- b) வீரமாமுனிவர்
- c) H.A. கிருஷ்ணப்பிள்ளை
- d) ரா.பி.சேதுபிள்ளை
Show Answer / விடை
Answer: வீரமாமுனிவர்
Exam: Group 4 2019
'தபோலி' என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
Choices:
- a) மராட்டிய மாநிலம்
- b) குஜராத் மாநிலம்
- c) தமிழ்நாடு
- d) கர்நாடகம்
Show Answer / விடை
Answer: மராட்டிய மாநிலம்
Exam: Group 4 2019
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
Choices:
- a) மறைமலையடிகள்
- b) உ.வே.சாமிநாத ஐயர்
- c) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
- d) வையாபுரிப்பிள்ளை
Show Answer / விடை
Answer: வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
Exam: Group 4 2019
''தமிழே மிகவும் பண்பட்ட மொழி" என்று பாராட்டியவர் யார்?
Choices:
- a) கமில்சுவலபில்
- b) மாக்சு முல்லர்
- c) முனைவர் எமினோ
- d) வில்லியம் ஜோன்ஸ்
Show Answer / விடை
Answer: மாக்சு முல்லர்
Exam: Group 4 2019
'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்றவர் யார்?
Choices:
- a) மாக்சு முல்லர்
- b) கால்டுவெல்
- c) கெல்லட்
- d) எமினோ
Show Answer / விடை
Answer: எமினோ
Exam: Group 4 2019
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
Choices:
- a) போட்டி
- b) பொழுதுபோக்கு
- c) உடற்பயிற்சி
- d) உற்சாகம்
Show Answer / விடை
Answer: போட்டி
Exam: Group 4 2019
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
Choices:
- a) எட்வார்டு மை பிரிட்சு
- b) எடிசன்
- c) வால்ட் விட்மன்
- d) கீட்ஸ்
Show Answer / விடை
Answer: எடிசன்
Exam: Group 4 2019
"எழுத்து" இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
Choices:
- a) சிற்பி
- b) சி. சு. செல்லப்பா
- c) ந. பிச்சமூர்த்தி
- d) மு. மேத்தா
Show Answer / விடை
Answer: சி. சு. செல்லப்பா
Exam: Group 4 2019
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
Choices:
- a) அப்துல் ரகுமான்
- b) ந. பிச்சமூர்த்தி
- c) சிற்பி
- d) இரா.மீனாட்சி
Show Answer / விடை
Answer: ந. பிச்சமூர்த்தி
Exam: Group 4 2019
"ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று கூறியவர் யார்?
Choices:
- a) மு. மேத்தா
- b) பசுவய்யா
- c) ந.பிச்சமூர்த்தி
- d) ஈரோடு தமிழன்பன்
Show Answer / விடை
Answer: ஈரோடு தமிழன்பன்
Exam: Group 4 2019
"தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்" என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
Choices:
- a) பாரதிதாசன்
- b) வாணிதாசன்
- c) நாமக்கல் கவிஞர்
- d) முடியரசன்
Show Answer / விடை
Answer: வாணிதாசன்
Exam: Group 4 2019
"வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
Choices:
- a) தமிழ்நாடு அரசு
- b) புதுவை அரசு
- c) பிரெஞ்சு அரசு
- d) ஆங்கில அரசு
Show Answer / விடை
Answer: புதுவை அரசு
Exam: Group 4 2019
இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
Choices:
- a) நாதகுத்தனார்
- b) தோலா மொழித்தேவர்
- c) திருத்தக்க தேவர்
- d) சீத்தலைச் சாத்தனார்
Show Answer / விடை
Answer: சீத்தலைச் சாத்தனார்
Exam: Group 4 2019
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
Choices:
- a) திருநாவுக்கரசர்
- b) சுந்தரர்
- c) திருஞானசம்பந்தர்
- d) மாணிக்கவாசகர்
Show Answer / விடை
Answer: திருநாவுக்கரசர்
Exam: Group 4 2019
'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Choices:
- a) பட்டினத்தார்
- b) மருதகாசி
- c) உடுமலை நாராயணகவி
- d) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Show Answer / விடை
Answer: மருதகாசி
Exam: Group 4 2019
'காவடிச் சிந்தின் தந்தை' என அழைக்கப்படுபவர்
Choices:
- a) பாரதியார்
- b) சென்னிகுளம் அண்ணாமலையார்
- c) அருணகிரியார்
- d) விளம்பி நாகனார்
Show Answer / விடை
Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்
Exam: Group 4 2019
கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
Choices:
- a) 596
- b) 599
- c) 593
- d) 597
Show Answer / விடை
Answer: 599
Exam: Group 4 2019
"நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே" - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
Choices:
- a) வங்கத்துப் பரணி
- b) திராவிடத்துப் பரணி
- c) கலிங்கத்துப் பரணி
- d) தக்கயாகப் பரணி
Show Answer / விடை
Answer: கலிங்கத்துப் பரணி
Exam: Group 4 2019
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
Choices:
- a) பதிற்றுப்பத்து
- b) பரிபாடல்
- c) புறநானூறு
- d) ஆத்திச்சூடி
Show Answer / விடை
Answer: புறநானூறு
Exam: Group 4 2019