Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2022
தமிழ் (Tamil)
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'
Choices:
- a) வெளிப்படைத் தன்மை
- b) வெளிப்படையற்ற தன்மை
- c) மறைத்து வைத்தல்
- d) தன்னலமின்மை
Show Answer / விடை
Answer: வெளிப்படைத் தன்மை
Exam: Group 4 2022
'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
Choices:
- a) தெளிவாகத் தெரியாது
- b) தெளிவாகத் தெரியும்
- c) நிலைத்து நிற்கும்
- d) நிலைத்து நிற்காது
Show Answer / விடை
Answer: நிலைத்து நிற்கும்
Exam: Group 4 2022
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
Choices:
- a) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
- b) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- c) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
- d) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
Show Answer / விடை
Answer: ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
Exam: Group 4 2022
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம் ?
Choices:
- a) செய் வினை
- b) செயப்பாட்டு வினை
- c) தன் வினை
- d) பிற வினை
Show Answer / விடை
Answer: செய் வினை
Exam: Group 4 2022
இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
Choices:
- a) இடைச்சொல் தொடர்
- b) விளித் தொடர்
- c) எழுவாய்த் தொடர்
- d) உரிச்சொல் தொடர்
Show Answer / விடை
Answer: உரிச்சொல் தொடர்
Exam: Group 4 2022
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர்
(b) பள்ளி 2. பண்புப்பெயர்
(c) கிளை 3. இடப்பெயர்
(d) இனிமை 4. பொருள்பெயர்
Choices:
- a) 4 3 1 2
- b) 3 4 2 1
- c) 4 3 2 1
- d) 2 3 1 4
Show Answer / விடை
Answer: 4 3 1 2
Exam: Group 4 2022
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் செம்மை
(b) சினைப்பெயர் கண்
(c) பண்புப்பெயர் ஆண்டு
(d) தொழிற்பெயர் ஆடுதல்
Choices:
- a) (a), (c)
- b) (a), (b)
- c) (c), (d)
- d) (a), (d)
Show Answer / விடை
Answer: (a), (c)
Exam: Group 4 2022
'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
Choices:
- a) கேட்டு
- b) கேட்ட
- c) கேட்டல்
- d) கேட்டான்
Show Answer / விடை
Answer: கேட்டு
Exam: Group 4 2022
'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
Choices:
- a) தணி
- b) தணிந்த
- c) தணிந்து
- d) தனி
Show Answer / விடை
Answer: தணி
Exam: Group 4 2022
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
Choices:
- a) தந்த
- b) தரு
- c) தா
- d) தந்து
Show Answer / விடை
Answer: தா
Exam: Group 4 2022
'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Choices:
- a) அரசன்
- b) வறுமை
- c) மதில்
- d) நோய்
Show Answer / விடை
Answer: மதில்
Exam: Group 4 2022
'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Choices:
- a) பெரிய
- b) சிறிய
- c) குறைய
- d) நிரம்ப
Show Answer / விடை
Answer: பெரிய
Exam: Group 4 2022
'பரவை'- இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Choices:
- a) மலை
- b) கடல்
- c) ஆறு
- d) உயிர்வகை
Show Answer / விடை
Answer: கடல்
Exam: Group 4 2022
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
Choices:
- a) கூகை கூவும்
- b) கூகை குனுகும்
- c) கூகை குழறும்
- d) கூகை அலறும்
Show Answer / விடை
Answer: கூகை கூவும்
Exam: Group 4 2022
சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Choices:
- a) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- b) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- c) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
- d) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
Show Answer / விடை
Answer: வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
Exam: Group 4 2022
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
Choices:
- a) சார்பு
- b) மருந்து
- c) கஃசு
- d) பசு
Show Answer / விடை
Answer: பசு
Exam: Group 4 2022
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Choices:
- a) மோனை
- b) எதுகை
- c) இசைவு
- d) இயைபு
Show Answer / விடை
Answer: இசைவு
Exam: Group 4 2022
பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
Choices:
- a) 1 3 4 2
- b) 3 4 1 2
- c) 2 3 4 1
- d) 4 1 2 3
Show Answer / விடை
Answer: 2 3 4 1
Exam: Group 4 2022
பொருத்துக.
(a) 876 1. ஙகூகூ
(b) 543 2. ஙஉக
(c) 321 3. ருசங
(d) 369 4. அஎசு
Choices:
- a) 2 4 1 3
- b) 4 1 3 2
- c) 4 3 2 1
- d) 3 2 1 4
Show Answer / விடை
Answer: 4 3 2 1
Exam: Group 4 2022
பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
Choices:
- a) ஆழ்வார்கள்
- b) சித்தர்கள்
- c) நாயன்மார்கள்
- d) புலவர்கள்
Show Answer / விடை
Answer: சித்தர்கள்
Exam: Group 4 2022
'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
Choices:
- a) தாலாட்டுப்பாட்டு
- b) கும்மிப் பாட்டு
- c) பள்ளுப்பாட்டு
- d) வில்லுப் பாட்டு
Show Answer / விடை
Answer: பள்ளுப்பாட்டு
Exam: Group 4 2022
'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
Choices:
- a) நல்லாதனார்
- b) ஒட்டக்கூத்தர்
- c) காளமேகப் புலவர்
- d) குமரகுருபரர்
Show Answer / விடை
Answer: காளமேகப் புலவர்
Exam: Group 4 2022
'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
Choices:
- a) பாரதிதாசன்
- b) அழகிய சொக்கநாதப் புலவர்
- c) காளமேகப்புலவர்
- d) புதுமைப்பித்தன்
Show Answer / விடை
Answer: அழகிய சொக்கநாதப் புலவர்
Exam: Group 4 2022
'நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
Choices:
- a) அர்ச்சுனன்
- b) தருமன்
- c) சகாதேவன்
- d) நகுலன்
Show Answer / விடை
Answer: அர்ச்சுனன்
Exam: Group 4 2022
“உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
Choices:
- a) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
- b) உ.வே.சாமிநாதனார்
- c) திரு.வி. கலியாண சுந்தரனார்
- d) ஆறுமுக நாவலர்
Show Answer / விடை
Answer: திரு.வி. கலியாண சுந்தரனார்
Exam: Group 4 2022
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) 'அடிகள் நீரே அருள்க' என்ற கூற்றுக்குரியவர்
(d) 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறியவர்
Choices:
- a) அனைத்தும் சரி
- b) (a), (b) சரி
- c) (a), (c), (d) சரி
- d) அனைத்தும் தவறு
Show Answer / விடை
Answer: அனைத்தும் சரி
Exam: Group 4 2022
கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
Choices:
- a) கூற்று 1 மட்டும் சரி
- b) கூற்று 2 மட்டும் சரி
- c) கூற்று இரண்டும் சரி
- d) கூற்று இரண்டும் தவறு
Show Answer / விடை
Answer: கூற்று இரண்டும் சரி
Exam: Group 4 2022
''வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்” - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
Choices:
- a) ஏற்றுமதி
- b) ஏமாற்றுதல்
- c) நேர்மை
- d) முயற்சியின்மை
Show Answer / விடை
Answer: நேர்மை
Exam: Group 4 2022
கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
Choices:
- a) கூற்று 1 மட்டும் சரி
- b) கூற்று 2 மட்டும் சரி
- c) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- d) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
Show Answer / விடை
Answer: கூற்று 2 மட்டும் சரி
Exam: Group 4 2022
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
Choices:
- a) வாணிதாசன்
- b) பாரதிதாசன்
- c) சுரதா
- d) பாரதியார்
Show Answer / விடை
Answer: பாரதியார்
Exam: Group 4 2022
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
Choices:
- a) ஆத்திச்சூடி
- b) கொன்றைவேந்தன்
- c) நல்வழி
- d) மூதுரை
Show Answer / விடை
Answer: மூதுரை
Exam: Group 4 2022
பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும்'
Choices:
- a) 3 4 2 1
- b) 2 4 1 3
- c) 2 3 1 4
- d) 1 2 3 4
Show Answer / விடை
Answer: 2 4 1 3
Exam: Group 4 2022
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
Choices:
- a) ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
- b) ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
- c) ஆகஸ்டு ஒன்றாம் நாள்.
- d) டிசம்பர் பதினைந்தாம் நாள்
Show Answer / விடை
Answer: ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
Exam: Group 4 2022
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு நூலாகும்.
Choices:
- a) இரட்டைமணிமாலை
- b) மும்மணிக்கோவை
- c) தெய்வமணிமாலை
- d) மனுமுறைகண்டவாசகம்
Show Answer / விடை
Answer: தெய்வமணிமாலை
Exam: Group 4 2022
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
Choices:
- a) சிங்கவல்லி
- b) கீழாநெல்லி
- c) குப்பைமேனி
- d) வல்லாரை
Show Answer / விடை
Answer: சிங்கவல்லி
Exam: Group 4 2022
முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்
Choices:
- a) தொல்காப்பியம்
- b) மதுரைக்காஞ்சி
- c) பட்டினப்பாலை
- d) பதிற்றுப்பத்து
Show Answer / விடை
Answer: தொல்காப்பியம்
Exam: Group 4 2022
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
Choices:
- a) பட்டினப்பாலை
- b) தொல்காப்பியம்
- c) குறிஞ்சிப்பாட்டு
- d) திருக்குறள்
Show Answer / விடை
Answer: பட்டினப்பாலை
Exam: Group 4 2022
ஆற்றூர் பேச்சு வழக்கில் என மருவியுள்ளது.
Choices:
- a) ஆம்பூர்
- b) அரூர்
- c) அரசூர்
- d) ஆத்தூர்
Show Answer / விடை
Answer: ஆத்தூர்
Exam: Group 4 2022
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
Choices:
- a) எம்.ஜி.இராமச்சந்திரன்
- b) மூதறிஞர் இராஜாஜி
- c) பெருந்தலைவர் காமராசர்
- d) கலைஞர் கருணாநிதி
Show Answer / விடை
Answer: பெருந்தலைவர் காமராசர்
Exam: Group 4 2022
தமிழ்ச்செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
Choices:
- a) வீரமாமுனிவர்
- b) கால்டுவெல்
- c) ஜி.யு. போப்
- d) தேவநேயப்பாவாணர்
Show Answer / விடை
Answer: ஜி.யு. போப்
Exam: Group 4 2022
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
Choices:
- a) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- b) தேவநேய பாவாணர்
- c) பரிதிமாற்கலைஞர்
- d) இளங்கோவடிகள்
Show Answer / விடை
Answer: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Exam: Group 4 2022
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
Choices:
- a) ரா.பி.சேதுப்பிள்ளை
- b) சோமசுந்தர பாரதியார்
- c) குன்றக்குடி அடிகளார்
- d) வீரமாமுனிவர்
Show Answer / விடை
Answer: வீரமாமுனிவர்
Exam: Group 4 2022
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
Choices:
- a) பல்லவர்கள்
- b) பாண்டியர்கள்
- c) சோழர்கள்
- d) நாயக்கர்கள்
Show Answer / விடை
Answer: பாண்டியர்கள்
Exam: Group 4 2022
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
Choices:
- a) ஓவிய எழினி
- b) சிற்பக்கலை
- c) மெய்க்கீர்த்தி
- d) பைஞ்சுதை
Show Answer / விடை
Answer: மெய்க்கீர்த்தி
Exam: Group 4 2022
பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா
(b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு 3. கி.வா.ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்
Choices:
- a) 3 1 4 2
- b) 4 3 2 1
- c) 4 2 1 3
- d) 2 1 4 3
Show Answer / விடை
Answer: 4 2 1 3
Exam: Group 4 2022
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் - பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் - தாரா பாரதி
Choices:
- a) 1ம் மற்றும் 2ம் சரி
- b) 2ம் மற்றும் 3ம் சரி
- c) 1ம் மற்றும் 3ம் சரி
- d) 2ம் மற்றும் 4ம் சரி
Show Answer / விடை
Answer: 1ம் மற்றும் 3ம் சரி
Exam: Group 4 2022
முடியரசன் இயற்றாத நூல் எது?
Choices:
- a) பூங்கொடி
- b) நீலமேகம்
- c) வீரகாவியம்
- d) காவியப்பாவை
Show Answer / விடை
Answer: நீலமேகம்
Exam: Group 4 2022
'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' - எனப் பாடியவர்
Choices:
- a) பாரதியார்
- b) பசுவய்யா
- c) பாரதிதாசன்
- d) நாமக்கல் கவிஞர்
Show Answer / விடை
Answer: பாரதிதாசன்
Exam: Group 4 2022
'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
Choices:
- a) நாமக்கல் கவிஞர்
- b) சுரதா
- c) பாரதிதாசன்
- d) பாரதியார்
Show Answer / விடை
Answer: பாரதிதாசன்
Exam: Group 4 2022
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
Choices:
- a) தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
- b) நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
- c) நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
- d) தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
Show Answer / விடை
Answer: நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
Exam: Group 4 2022
மோனைத் தொடை வகைப்படும்.
Choices:
- a) ஆறு
- b) எட்டு
- c) ஐந்து
- d) மூன்று
Show Answer / விடை
Answer: எட்டு
Exam: Group 4 2022
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
-இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
Choices:
- a) வாழ்வு, வேண்டில்
- b) புனிதமுற்று, புத்தகசாலை
- c) நாட்டில், யாண்டும்
- d) மக்கள், புதுவாழ்வு
Show Answer / விடை
Answer: புனிதமுற்று, புத்தகசாலை
Exam: Group 4 2022
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
Choices:
- a) உடன்பாட்டு வாக்கியம்
- b) எதிர்மறை வாக்கியம்
- c) பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
- d) கலவை வாக்கியம்
Show Answer / விடை
Answer: பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
Exam: Group 4 2022
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
Choices:
- a) அண்ணனோடு போ
- b) கூடு கட்டு
- c) தமிழ்படி
- d) அரசு ஆணை பிறப்பித்தது
Show Answer / விடை
Answer: அரசு ஆணை பிறப்பித்தது
Exam: Group 4 2022
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
Choices:
- a) எத்தனை மாடுகள் மேய்ந்தன?
- b) எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
- c) மாடுகள் மேய்ந்தனவா?
- d) ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
Show Answer / விடை
Answer: எத்தனை மாடுகள் மேய்ந்தன?
Exam: Group 4 2022
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
Choices:
- a) நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
- b) நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
- c) இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
- d) இங்கு நகரப்பேருந்து வருமா?
Show Answer / விடை
Answer: இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
Exam: Group 4 2022
சரியான தொடரைக் கண்டறிக.
Choices:
- a) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
- b) தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
- c) தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
- d) உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
Show Answer / விடை
Answer: தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
Exam: Group 4 2022
சரியான தொடரைக் கண்டறிக.
Choices:
- a) தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
- b) என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
- c) நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
- d) 'தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்
Show Answer / விடை
Answer: 'தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்
Exam: Group 4 2022
சரியான அகரவரிசையைத் தேர்க.
Choices:
- a) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
- b) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
- c) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
- d) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
Show Answer / விடை
Answer: கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
Exam: Group 4 2022
பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
Choices:
- a) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
- b) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
- c) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
- d) ஆசிரியர், கிளி, தேனீ, தையல்,பழம்,மான்,ஓணான்
Show Answer / விடை
Answer: ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
Exam: Group 4 2022
'தேடு' - வினைமுற்று சொல்
Choices:
- a) தேடிய
- b) தேடினார்
- c) தேடி
- d) தேடுதல்
Show Answer / விடை
Answer: தேடினார்
Exam: Group 4 2022
பொருத்துக.
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை
Choices:
- a) 3 1 2 4
- b) 4 3 2 1
- c) 2 4 1 3
- d) 3 4 1 2
Show Answer / விடை
Answer: 3 4 1 2
Exam: Group 4 2022
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
'கோல்டு பிஸ்கட்'
Choices:
- a) வைரக்கட்டி
- b) அலுமினியக்கட்டி
- c) தங்கக்கட்டி
- d) தாமிரக்கட்டி
Show Answer / விடை
Answer: தங்கக்கட்டி
Exam: Group 4 2022
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel 1. மெய்யெழுத்து
(b) Consonant 2. ஒரு மொழி
(c) Homograph 3. உயிரெழுத்து
(d) Monolingual 4. ஒப்பெழுத்து
Choices:
- a) 1 3 2 4
- b) 3 4 1 2
- c) 2 4 3 1
- d) 3 1 4 2
Show Answer / விடை
Answer: 3 1 4 2
Exam: Group 4 2022
'நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற 'நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
Choices:
- a) அகன்ற உலகம்
- b) மேலான உலகம்
- c) சிறிய உலகம்
- d) கீழான உலகம்
Show Answer / விடை
Answer: சிறிய உலகம்
Exam: Group 4 2022
எடுப்பு - எதிர்ச்சொல் தருக.
Choices:
- a) தொடங்குதல்
- b) முடித்தல்
- c) நிற்றல்
- d) ஏற்றல்
Show Answer / விடை
Answer: முடித்தல்
Exam: Group 4 2022
தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
Choices:
- a) தண் + அளிர் + பதம்
- b) தன்மை + தளிர் + பதம்
- c) தண்மை + தளிர் + பதம்
- d) தண்டளிர் + பதம்
Show Answer / விடை
Answer: தண்மை + தளிர் + பதம்
Exam: Group 4 2022
கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Choices:
- a) கலம் + அகம்
- b) கலம் + பகம்
- c) கலம்பு + அகம்
- d) கல் + அம்பகம்
Show Answer / விடை
Answer: கலம் + பகம்
Exam: Group 4 2022
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்
Choices:
- a) கலித்தொகை
- b) பரிபாடல்
- c) அகநானூறு
- d) புறநானூறு
Show Answer / விடை
Answer: அகநானூறு
Exam: Group 4 2022
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Choices:
- a) நெடுந்தொகை
- b) திருக்குறள்
- c) முத்தொள்ளாயிரம்
- d) கம்பராமாயணம்
Show Answer / விடை
Answer: நெடுந்தொகை
Exam: Group 4 2022
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்.
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
Choices:
- a) I, III, IV மட்டும் சரி
- b) I, II மட்டும் சரி
- c) I, II, III மட்டும் சரி
- d) அனைத்தும் சரி
Show Answer / விடை
Answer: அனைத்தும் சரி
Exam: Group 4 2022
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
Choices:
- a) கம்பர்
- b) குலசேகரர்
- c) ஆண்டாள்
- d) பெரியாழ்வார்
Show Answer / விடை
Answer: குலசேகரர்
Exam: Group 4 2022
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும்,, பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
Choices:
- a) சுந்தரர்
- b) திருஞானசம்பந்தர்
- c) அப்பர்
- d) மாணிக்கவாசகர்
Show Answer / விடை
Answer: திருஞானசம்பந்தர்
Exam: Group 4 2022
தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
Choices:
- a) தேவர்கள்
- b) அரசர்கள்
- c) சித்தர்கள்
- d) புலவர்கள்
Show Answer / விடை
Answer: சித்தர்கள்
Exam: Group 4 2022
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
Choices:
- a) தூது
- b) பள்ளு
- c) கலம்பகம்
- d) குறவஞ்சி
Show Answer / விடை
Answer: தூது
Exam: Group 4 2022
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
Choices:
- a) பத்து
- b) ஆறு
- c) ஏழு
- d) ஐந்து
Show Answer / விடை
Answer: ஏழு
Exam: Group 4 2022
உழவர் உழத்தியரது. வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
Choices:
- a) கலம்பகம்
- b) பள்ளு
- c) குறவஞ்சி
- d) உலா
Show Answer / விடை
Answer: பள்ளு
Exam: Group 4 2022
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
Choices:
- a) இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- b) மதி பெற்ற மைனர்
- c) முப்பெண்மணிகள் வரலாறு
- d) நான் கண்ட பாரதம்
Show Answer / விடை
Answer: நான் கண்ட பாரதம்
Exam: Group 4 2022
பெரிய புராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
Choices:
- a) சேர நாடு
- b) சோழ நாடு
- c) பாண்டிய நாடு
- d) கலிங்க நாடு
Show Answer / விடை
Answer: சோழ நாடு
Exam: Group 4 2022
"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
Choices:
- a) கரிசலாங்கண்ணி
- b) தூதுவளை
- c) குப்பைமேனி
- d) சோற்றுக்கற்றாழை
Show Answer / விடை
Answer: சோற்றுக்கற்றாழை
Exam: Group 4 2022
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
Choices:
- a) உ.வே.சா.
- b) ஜி.யு. போப்
- c) சீகன் பால்கு ஐயர்
- d) வீரமாமுனிவர்
Show Answer / விடை
Answer: உ.வே.சா.
Exam: Group 4 2022
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Choices:
- a) குறுந்தொகை
- b) ஐங்குறுநூறு
- c) அகநானூறு
- d) நற்றிணை
Show Answer / விடை
Answer: ஐங்குறுநூறு
Exam: Group 4 2022
சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை தாமரை மலர்
(b) மரை பவளம்
(c) விசும்பு வானம்
(d) மதியம் நிலவு
Choices:
- a) (a) மற்றும் (b) சரி
- b) (b) மற்றும் (c) சரி
- c) (c) மற்றும் (d) சரி
- d) (d) மற்றும் (a) சரி
Show Answer / விடை
Answer: (c) மற்றும் (d) சரி
Exam: Group 4 2022
பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
Choices:
- a) 3 4 1 2
- b) 3 1 4 2
- c) 2 3 1 4
- d) 4 1 2 3
Show Answer / விடை
Answer: 3 4 1 2
Exam: Group 4 2022
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
Choices:
- a) பாரதியார்
- b) சுரதா
- c) பாரதிதாசன்
- d) வாணிதாசன்
Show Answer / விடை
Answer: பாரதிதாசன்
Exam: Group 4 2022
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
Choices:
- a) 1832
- b) 1812
- c) 1842
- d) 1852
Show Answer / விடை
Answer: 1812
Exam: Group 4 2022
திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
Choices:
- a) கம்பர், இளங்கோ
- b) கம்பர், திருவள்ளுவர்
- c) திருவள்ளுவர், இளங்கோ
- d) இளங்கோ, பாரதியார்
Show Answer / விடை
Answer: கம்பர், திருவள்ளுவர்
Exam: Group 4 2022
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
Choices:
- a) சாரதா அம்மாள்
- b) மூவலூர் இராமாமிர்தம்
- c) முத்துலெட்சுமி
- d) பண்டித ரமாபாய்
Show Answer / விடை
Answer: மூவலூர் இராமாமிர்தம்
Exam: Group 4 2022
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
Choices:
- a) கி.பி. 1730
- b) கி.பி. 1880
- c) கி.பி. 1865
- d) கி.பி. 1800
Show Answer / விடை
Answer: கி.பி. 1730
Exam: Group 4 2022
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
Choices:
- a) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
- b) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- c) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- d) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
Show Answer / விடை
Answer: உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
Exam: Group 4 2022
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
Choices:
- a) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
- b) மொரிசியசு, இலங்கை,கனடா
- c) பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
- d) கனடா, அந்தமான், மலேசியா
Show Answer / விடை
Answer: இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
Exam: Group 4 2022
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Choices:
- a) ஆழ்வார்திருநகர்
- b) ஆழ்வார்திருநகரி
- c) ஆழ்வார்பேட்டை
- d) திருநகரம்
Show Answer / விடை
Answer: ஆழ்வார்திருநகரி
Exam: Group 4 2022
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்.
Choices:
- a) மெய்யப்பர்
- b) உ.வே. சாமிநாதனார்
- c) இலக்குவனார்
- d) மீனாட்சி சுந்தரனார்.
Show Answer / விடை
Answer: உ.வே. சாமிநாதனார்
Exam: Group 4 2022
டாக்டர்.ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
Choices:
- a) உரைநடைக்கோவை
- b) தமிழிலக்கிய வரலாறு
- c) கதையும் கற்பனையும்
- d) ஊரும் பேரும்
Show Answer / விடை
Answer: ஊரும் பேரும்
Exam: Group 4 2022
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
Choices:
- a) மறைமலையடிகள்
- b) சங்கரதாசு சுவாமிகள்
- c) பரிதிமாற் கலைஞர்
- d) பம்மல் சம்பந்தனார்
Show Answer / விடை
Answer: பரிதிமாற் கலைஞர்
Exam: Group 4 2022
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
Choices:
- a) மதுரை
- b) கரூர்
- c) தூத்துக்குடி
- d) கன்னியாக்குமரி
Show Answer / விடை
Answer: தூத்துக்குடி
Exam: Group 4 2022
ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
Choices:
- a) 1929 நவம்பர் 18- சென்னை, 27.06.1980 - அமெரிக்க பாராளுமன்றம்
- b) 1943 செப்டம்பர் 5- சென்னை, 30.06.1970 - ரசியா செனட் சபை
- c) 1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970- யுனெஸ்கோ மன்றம்
- d) 1928 டிசம்பர் 3 - சென்னை, 30.06.1975 - இங்கிலாந்து பாராளுமன்றம்
Show Answer / விடை
Answer: 1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970- யுனெஸ்கோ மன்றம்
Exam: Group 4 2022
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
Choices:
- a) பாலசரஸ்வதி
- b) வைஜெயந்திமாலா
- c) தஞ்சை கிட்டப்பா
- d) நர்த்தகி நடராஜ்
Show Answer / விடை
Answer: நர்த்தகி நடராஜ்
Exam: Group 4 2022
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
Choices:
- a) தினத்தந்தி
- b) காஞ்சி
- c) முரசொலி
- d) தினமணி
Show Answer / விடை
Answer: காஞ்சி
Exam: Group 4 2022
கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
Choices:
- a) கண்ணீர்ப்பூக்கள்
- b) ஊர்வலம்
- c) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
- d) சோழநிலா
Show Answer / விடை
Answer: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
Exam: Group 4 2022