Skip to main content

நீதி நூல்கள்

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைத் தொகுத்துச் சொல்லும் நூல் நீதிநூலாகும்.

நூல்கள் பட்டியல்

  1. திருக்குறள் - 1330
  2. நாலடி - 400
  3. நான்மணிக்கடிகை - 104
  4. இன்னா நாற்பது - 40
  5. இனியவை நாற்பது - 40
  6. ஆசாரக்கோவை - 100
  7. பழமொழி - 400
  8. சிறுபஞ்சமூலம் - 400
  9. ஏலாதி - 82
  10. முதுமொழிக்காஞ்சி - 100
  11. திரிகடுகம் - 100
  12. ஆத்திசூடி - 108
  13. கொன்றைவேந்தன் - 91
  14. வெற்றிவேற்கை
  15. உலகநீதி
  16. மூதுரை
  17. நல்வழி
  18. நன்னெறி
  19. நீதிவெண்பா
  20. நீதிநெறி விளக்கம்
  21. அறநெறிச்சாரம்
  22. அருங்கலச்செப்பு
  23. புதிய ஆத்திசூடி
  24. பாரதிதாசன் ஆத்திசூடி

முக்கிய நூல்கள் விளக்கம்

1. திருக்குறள் - திருவள்ளுவர்

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுப்பங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் ஆகியன திருவள்ளுவரின் வேறுபெயர்கள். இது முப்பால் (அறம், பொருள், இன்பம்) கொண்டது.

  • 1330 குறள், 133 அதிகாரம். அதிகாரத்திற்கு 10 குறள்.
  • அறம்: இல்லறவியல், துறவறவியல், ஊழியல் - 3 இயல்கள், 38 அதிகாரம்.
  • பொருள்: அரசியல், அங்கவியல், ஒழிபியல் - 3 இயல்கள், 70 அதிகாரம்.
  • இன்பம்: கற்பியல், களவியல் - 2 இயல்கள், 25 அதிகாரம்.
  • குறள் வெண்பாவால் ஆன முதல் நூல்.
  • 12,000 தமிழ்ச்சொற்கள், 50 வடசொற்கள் உள்ளன.
  • வேறு பெயர்கள்: முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், திருவள்ளுவம்.
  • இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரே தலைப்பு - குறிப்பறிதல்.
  • புறப்பாட்டு "அறம்" என்று இதனைக் குறிக்கிறது.

உரையாசிரியர்கள்

  • பதின்மர் உரை: தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்.
  • பிறர் உரை: ராமானுஜகவிராயர், சரவண பெருமாள் ஐயர், தண்டபாணி, அரசஞ் சண்முகனார், திரு. வி. க, நாமக்கல் ராமலிங்கம், புலவர் பாரதிதாசன்.

2. நாலடியார்

தொகுத்தவர் பதுமனார். அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகள் உடையது.

  • அமைப்பு: அறத்துப்பால் - 13 அதிகாரம், பொருட்பால் - 26 அதிகாரம், காமத்துப்பால் - 1 அதிகாரம். மொத்தம் 40 அதிகாரம், ஒவ்வோர் அதிகாரமும் 10 பாடல்கள் உடையது.
  • யாப்பு: வெண்பா.
  • பெயர்க்காரணம்: வெண்பா அனைத்தும் 4 அடிகளால் அமைந்ததால் 'நாலடி' என்றும், சிறப்பு கருதி 'ஆர்' விகுதி சேர்த்து 'நாலடியார்' என்றும், 400 பாடல்கள் உடையதால் 'நாலடி நானூறு' என்றும் அழைக்கப்படும்.
  • சமணப் புலவர்கள் எழுதியது.
  • குறள் சொற்கள் மற்றும் வடசொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • முத்தரையர் பற்றி 200, 296-ஆம் பாடல்கள் கூறுகின்றன.
  • காலம்: கி.பி. 7-ஆம் நூற்றாண்டு (3 முதல் 750 வரை).

சிறப்பு

  • குறளோடு இணைந்துப் பார்க்கப்படும்: 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்'.
  • பரிமேலழகர், நச்சர், அடியார் போன்றோர் மேற்கோள்களாக ஆண்டுள்ளனர்.
  • ஜி.யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • உவமையழகு உடையது.
  • 'வேளாண் வேதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

நூல் அமைப்பு

  • அறத்துப்பால்: செல்வம், இளமை, யாக்கை நிலையாமை, அறன் வலியுறுத்தல், தூயதன்மை, துறவு, சினமின்மை, பொறையுடைமை, பிறர்மனை நயவாமை, ஈகை, பழவினை, மெய்ம்மை, தீவினையச்சம்.
  • பொருட்பால்: கல்வி, குடிப்பிறப்பு, மேன்மக்கள், பெரியாரைப் பிழையாமை, நல்லினம் சேர்தல், பெருமை, தாளாண்மை, சுற்றம் தழால், நட்பாராய்தல், நட்பில் பிழை பொறுத்தல், கூடாநட்பு, அறிவுடைமை, அறிவின்மை, நன்றி இல் செல்வம், ஈயாமை, இன்மை, மானம், இரவச்சம், அவையறிதல், புல்லறிவாண்மை, பேதைமை, கீழ்மை, கயமை, பன்னெறி, பொதுமகளிர், கற்புடை மகளிர்.
  • காமத்துப்பால்: காமநுதலியல்.

3. நான்மணிக்கடிகை - 104

  • ஆசிரியர்: விளம்பிநாகனார்.
  • ஒரு பாடலுக்கு நான்கு கருத்துக்கள் உடையது.
  • 104 வெண்பாக்களைக் கொண்டது.
  • திருமாலைப் பற்றி 2 கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன.
  • பெயர்க்காரணம்: கடிகை என்றால் துண்டு. நான்மணிகளின் துண்டுகள் இணைந்த மாலை போல, ஒரு பாடலில் 4 கருத்துக்கள் அமைந்திருக்கும்.
  • வடமொழிச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.
  • முக்கிய கருத்துக்கள்: எல்லாம் பொருளில் பிறந்துவிடும்; வெல்வது வேண்டின் அறம் செய்க; இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக; வேண்டின் வெருளிவிடல்; மனைக்கு விளக்கம் மடவாள்.

4. இன்னா நாற்பது

  • ஆசிரியர்: கபிலர் (கபிலதேவர்).
  • கடவுள் வாழ்த்து தவிர 40 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு, 164 இன்னாத செயல்களைக் கூறுகிறது.
  • குறள் கருத்துக்களும், சங்கநூற் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
  • முக்கிய கருத்துக்கள்: மணியில்லா யானை மீது மன்னன் செல்லுதல் துன்பம் தரும் (14); மதுவும் மாமிசமும் வெறுக்கப்பட்டன; அந்தணர் வீட்டில் கோழியும் நாயும் புகுதல் கூடாது.

5. இனியவை நாற்பது

  • ஆசிரியர்: மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.
  • கடவுள் வாழ்த்து 1 வெண்பா மற்றும் 40 இனிய உண்மைகளைக் கூறும் பாடல்கள் (மொத்தம் 126 உண்மைகள்).
  • ஒவ்வொரு வெண்பாவும் 3 அல்லது 4 இனிய உண்மைகளைக் கூறும்.
  • சிறப்பு பெற்ற அடி: "ஊனினைத் தின்று ஊனைப் பெருக்காமை".
  • கடன்படா வாழ்வு, வருவாய்க்கேற்ற செலவு போன்ற கருத்துக்களைக் கூறுகிறது.
  • இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது ஆகியவற்றின் கருத்து ஒற்றுமையால் இரண்டும் ஒருவரால் செய்யப்பட்டவை என்று கருத இடமுண்டு.
  • குறளின் கருத்தும், சொல்லும் பயின்று வருகிறது. பிரமன் வழிபாடு இக்காலத்தில் இருந்ததைக் காட்டுகிறது.

6. திரிகடுகம்

  • ஆசிரியர்: நல்லாதனார் (வைணவர்).
  • பெயர்க்காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருட்களைப் போல, ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துக்களைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.
  • கடவுள் வாழ்த்து (திருமால்) 1 பாடல், 100 வெண்பாக்கள். ஒவ்வொரு பாடலும் 3 செய்திகளைக் கூறும்; நான்காவது அடி அம்மூன்றின் ஒற்றுமையை விளக்கும்.
  • இல்லற வாழ்வைப் பற்றி 35 பாடல்களும், நன்மை தருபவை பற்றி 66 பாடல்களும், தீமை தருபவை பற்றி 34 பாடல்களும் உள்ளன.

7. ஆசாரக்கோவை

  • ஆசிரியர்: கயத்தூர் பெருவாயின் முள்ளியார்.
  • 100 வெண்பாக்களைக் கொண்டது.
  • வடமொழி நூலான 'சக்ரஸ்மிருதி'யை அடியொற்றி ஆசாரத்தைக் கூறுகிறது.
  • பாண்டவர்க்கு உபதேசித்ததை ஓட்டியது. மூலம் - ஆரிடம் எனும் வடமொழி நூல்.
  • பெயர்க்காரணம்: ஆசாரம் - ஒழுக்கம், கோவை - அடுக்கிக்கூறல். உள்ளும் புறமும் தூய்மையுடன் வாழும் நெறிகளை உணர்த்துவது.

8. பழமொழி

  • ஆசிரியர்: முன்றுறையரையனார் (சமணர்).
  • பெயர்க்காரணம்: 400 பழமொழிகளைக் கூறுவதால் 'பழமொழி நானூறு' எனப்பட்டது.
  • ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் ஒரு பழமொழி இடம்பெறும். 400 வெண்பாக்களைக் கொண்டது.
  • கரிகாலன், பொற்கைப்பாண்டியன், பாரி, பேகன், மனுநீதிச் சோழன் போன்றோரின் வரலாற்றுச் செய்திகள் உள்ளன.
  • முதல் இரண்டு அடிகள் கூறக்கருதிய பொருளையும், மூன்றாமடி விளியையும், நான்காமடி பழமொழியையும் கொண்டிருக்கும்.
  • நாடோடிப் பழமொழிகள் அல்லாது, இலக்கியப் பழமொழிகளாக உள்ளன.
  • குறள், நாலடியார் கருத்துக்களைக் காணலாம். பழமொழியைக் கூறும் பழமையான நூல் இது.

9. சிறுபஞ்சமூலம்

  • ஆசிரியர்: காரியாசான் (கணிமேதாவியாரின் ஒருசாலை மாணாக்கர், சைனர்).
  • காலம்: கி.பி. 7-க்குப்பின் இயற்றப்பட்டது.
  • பெயர்க்காரணம்: கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து வேர்களைப் போல, ஒவ்வொரு பாடலிலும் ஐந்து செய்திகள் கூறப்படுகின்றன.
  • கடவுள் வாழ்த்து உட்பட 402 வெண்பாக்கள் உள்ளன.
  • முக்கிய கருத்துக்கள்: "தோற்கன்றைக் காட்டி பால்கறத்தல்", "ஞானத்தாலே தான் வீடுபேறு".

10. ஏலாதி

  • ஆசிரியர்: கணிமேதாவியார் (திணைமாலை 50 பாடியவர், வடமொழிப் புலமைமிக்கவர், சமணர்).
  • சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப்பாயிரம் உட்பட 82 பாடல்கள் உள்ளன.
  • பெயர்க்காரணம்: ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 6 மருந்துப் பொருட்களைப் போல, ஒரு பாடலில் 6 கருத்துக்கள் இடம்பெறும்.
  • பிள்ளைகளின் வகைகள் 30, 31 ஆம் பாடல்களில் உள்ளன.
  • கொல்லாமையை வலியுறுத்துகிறது.

11. முதுமொழிக்காஞ்சி

  • ஆசிரியர்: மதுரைக் கூடலூர்க் கிழார்.
  • 100 பாடல்களைக் கொண்டது.
  • பத்துப் பத்துப் பாடல்களை உடைய பத்துப் பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் "ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்" எனத் தொடங்கும்.
  • பாடல் இறுதியில் பயின்று வரும் சொற்களைக் கொண்டு "சிறந்த பத்து", "அறிவுப் பத்து" எனத் தலைப்பு பெறுகிறது.
  • முக்கிய கருத்துக்கள்: கல்வியினும் ஒழுக்கமே உயர்ந்தது; கொடையைவிட வாய்மையே சிறந்தது; உணர்விலார்க்கு வாழ்வும் சாவே.

12. ஆத்திசூடி

  • ஆசிரியர்: ஒளவையார்.
  • பெயர்க்காரணம்: "ஆத்திப்பூமாலையை அணிந்த சிவன்" (ஆத்திசூடி) என்ற கடவுள் வாழ்த்தால் இப்பெயர் வந்தது.
  • கடவுள் வாழ்த்து 1 பாடல், 108 ஓரடிச் செய்யுள்கள் ("அறம்செய்ய விரும்பு" முதல் "ஓரம் சொல்லேல்" வரை).

13. கொன்றைவேந்தன்

  • ஆசிரியர்: ஒளவையார்.
  • பெயர்க்காரணம்: "கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" என்ற கடவுள் வாழ்த்து முதலடியால் பெயர்பெற்றது.
  • கடவுள் வாழ்த்து 1 பாடல், 91 ஓரடிச் செய்யுள்கள் ("அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" முதல் "ஓதாதார்க்கு இல்லை ஒழுக்கம்" வரை).

14. நறுந்தொகை (வெற்றிவேற்கை)

  • ஆசிரியர்: அதிவீரராமபாண்டியர் (16-ஆம் நூற்றாண்டு).
  • கொற்கையை ஆண்டவர். தென்காசியிலிருந்து அரசாண்டார் என்றும் கூறுவர்.
  • இவர் தமிழ், வடமொழிப் புலமையாளர்.
  • வேறுபெயர்: வெற்றிவேற்கை. "நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை" என்பதால் இப்பெயர் பெற்றது.
  • பிற நூல்கள்: நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயுசங்கிதை, திருக்கருவை அந்தாதி போன்றவை.
  • அமைப்பு: கடவுள் வாழ்த்து, நூற்பயன், வாழ்த்து நீங்க 82 செய்யுள்கள். ஓரடி முதல் ஆறடி வரை பாடல்கள் உள்ளன.

15. மூதுரை

  • ஆசிரியர்: ஒளவையார்.
  • வேறுபெயர்: வாக்குண்டாம்.
  • கடவுள் வாழ்த்தோடு 30 வெண்பாக்களைக் கொண்டது.
  • உரையாசிரியர்கள்: சரவணப்பெருமாள் ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார்.