Skip to main content

எட்டுத்தொகை இலக்கியம்

எண்நூல் பெயர்பொருள்பாடல்கள் எண்ணிக்கை, கடவுள் வாழ்த்துபுலவர்கள் எண்ணிக்கைதொகுப்பித்தவர்தொகுத்தவர்
1குறுந்தொகைஅகம்401, முருகன், பாரதம் பாடிய பெருந்தேவனார்205பெயர் அறியப்படவில்லைபூரிக்கோ
2நற்றிணைஅகம்400, திருமால், பாரதம் பாடிய பெருந்தேவனார்-பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதிபெயர் அறியப்படவில்லை
3அகநானூறுஅகம்400, சிவன், பாரதம் பாடிய பெருந்தேவனார்142பாண்டியன் உக்கிரப் பெருவழுதிமதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரஞ்சன்மர்
4ஐங்குறுநூறுஅகம்498, சிவன், பாரதம் பாடிய பெருந்தேவனார்5யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
5கலித்தொகைஅகம்149, சிவன், பாரதம் பாடிய பெருந்தேவனார்5பெயர் அறியப்படவில்லைநல்லந்துவனார்
6பதிற்றுப்பத்துபுறம்80, சிவன்8பெயர் அறியப்படவில்லைபெயர் அறியப்படவில்லை
7புறநானூறுபுறம்399, சிவன், பாரதம் பாடிய பெருந்தேவனார்157பெயர் அறியப்படவில்லைபெயர் அறியப்படவில்லை
8பரிபாடல்அகம் புறம்2213பெயர் அறியப்படவில்லைபெயர் அறியப்படவில்லை
  • மொத்தப்பாடல்களின் எண்ணிக்கை: 2381
  • பாடிய புலவர்களின் எண்ணிக்கை: 473

நூற்றுக்கு மேல் பாடிய புலவர்கள் ஐவர்

  1. கபிலர் - 235 பாடல்கள்
  2. அம்மூவன் - 127 பாடல்கள்
  3. ஓரம்போகியார் - 110 பாடல்கள்
  4. பேயனார் - 105 பாடல்கள்
  5. ஓதலாந்தையர் - 103 பாடல்கள்
note

இவர்கள் ஐவரும் ஐங்குறுநூற்றில் பாடிய ஆசிரியர்கள்.

மற்ற நூல்களில் அதிகமாகப் பாடியவர்கள்

  1. மாமூலனார் - 35 பாடல்கள்
  2. உலோச்சனார் - 37 பாடல்கள்
  3. நக்கீரர் - 40 பாடல்கள்
  4. நல்லந்துவனார் - 59 பாடல்கள்
  5. பரணர் - 86 பாடல்கள்
  • இவர்களுள் அதிகமான பாடல்களைப் பாடியவர்: கபிலர்.
  • ஒரேயொரு பாடலை மட்டும் பாடிய புலவர்கள்: 293 பேர்.

வரலாற்றுச் செய்திகளை அதிகளவில் பாடியவர் பரணர். அக இலக்கியத்தில் பிரிவு பற்றிய செய்திகளே அதிகமாகப் பாடப்பெற்றுள்ளன.

ஐங்குறுநூறு

  • பதிப்பித்தவர்: உ.வே.சா.
  • தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • தொகுப்பித்தவன்: யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை.
  • அடிவரையறை: சிற்றெல்லை - 3 அடி, பேரெல்லை - 6 அடி.

பாடல் எண்ணிக்கை

திணைக்கு நூறு பாடலாக 500 பாடல்களை உடையது. இதில் 129, 130 என்ற எண்ணுள்ள இரண்டு பாடல்கள் மட்டும் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்தாக, சிவன் பற்றி ஒரு பாடல் பாடப் பெற்றுள்ளது. ஒவ்வொரு திணையிலும் உள்ள 100 பாடல்களும் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் 'பத்து' என்னும் பெயரால் குறிக்கப் பெறுகின்றன. இப்பத்துகள் ஒவ்வொன்றும் கருப்பொருளாலும், சொல்லாட்சியாலும், பொருளமைப்பாலும் தலைப்புப் பெற்றுள்ளது.

திணை வரிசை முறை

மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முறையில் அமைந்துள்ளது.

பாடியவர்கள்

பாடிய புலவர்களின் எண்ணிக்கை 5.

  1. மருதம் - ஓரம்போகியார்
  2. நெய்தல் - அம்மூவனார்
  3. குறிஞ்சி - கபிலர்
  4. பாலை - ஓதலாந்தையார்
  5. முல்லை - பேயனார்

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பொ. வே. சோமசுந்தரனார், புலியூர்க் கேசிகன் போன்றோர் உரையெழுதியுள்ளனர்.

நற்றிணை

  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி.
  • தொகுத்தவர்: பெயர் தெரியவில்லை.

அடிவரையறை

சிற்றெல்லை - 9 அடி, பேரெல்லை - 12 அடி. 110, 379 எண்ணுள்ள இரண்டு பாடல்கள் மட்டும் 12 அடிக்கு மேலுள்ளன. இந்நூல் தொகுப்பித்த மன்னன் 97, 301 எண்ணுள்ள இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். கடவுள் வாழ்த்தாக, திருமால் பற்றி ஒரு பாடல் பாடப்பெற்றுள்ளது. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 400 உள்ளன.

பாடல் எண்ணிக்கை

  1. குறிஞ்சித்திணை - 132
  2. பாலைத்திணை - 104
  3. நெய்தல்திணை - 102
  4. மருதத்திணை - 32
  5. முல்லைத்திணை - 30

பிற நூல்களில் பாலைப்பாடல்கள் மிகுதியாக இருக்கும். இதில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் மிகுதியாக உள்ளன. பத்து, இருபது, முப்பது எனும் முறைபற்றி வரும் பாடல்கள் மருதத்திணைக்கு உரியனவாக அமைந்திருக்கின்றன (216 ஆம் பாடலைத் தவிர).

  • ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள்: 56
  • மொத்தப் புலவர்களின் எண்ணிக்கை: 175 புலவர்கள்.

சிறப்புத் தொடரால் பெயர் பெற்றவர்கள் (7 பேர்)

  1. வண்ணப்புறக் கந்தரத்தனார்
  2. மலையனார்
  3. தனிமகனார்
  4. விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனார்
  5. தும்பிசேர் கீரனார்
  6. தேய்புரி பழங்கயிற்றனார்
  7. மடல் பாடிய மாதங்கீரனார்

பெண்பாற் புலவர்கள் (9 பேர்)

  1. அஞ்சில் அஞ்சியார்
  2. ஒளவையார்
  3. கழார்க்கீரன் எயிற்றியார்
  4. குறமகள் குறியெயினி
  5. நக்கண்ணையார்
  6. நப்பசலையார்
  7. மாறோக்கத்து நப்பசலையார்
  8. வெள்ளி வீதியார்
  9. வெறிபாடிய காமக்கண்ணியார்

உரை

இந்நூலுக்குப் பழைய உரை எதுவும் எழுதப்படவில்லை. 1914-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பின்னத்தூர் நாராயணசாமி அவர்கள் உரை எழுதியுள்ளார். மேலும், பொ.வே. சோமசுந்தரனார், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, புலியூர்க் கேசிகன் முதலானோர் பின்னாளில் இந்நூலுக்கு உரை எழுதி உள்ளனர்.

குறுந்தொகை

  • பதிப்பித்தவர்: உ.வே.சா.
  • தொகுத்தவர்: பூரிக்கோ.
  • தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை.

அடிவரையறை

சிற்றெல்லை - 4 அடி, பேரெல்லை - 8 அடி. இரண்டு பாடல்கள் மட்டும் 9 அடிகள் பெற்று மிகைப் பாடலாக உள்ளன (307, 391).

பாடல் எண்ணிக்கை

கடவுள் வாழ்த்தாக முருகனைப் பற்றி ஒரு பாடல் பாடப்பெற்றுள்ளது. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 401.

  1. குறிஞ்சித்திணை - 145 பாடல்கள்
  2. பாலைத்திணை - 90 பாடல்கள்
  3. மருதத்திணை - 50 பாடல்கள்
  4. நெய்தல்திணை - 45 பாடல்கள்
  5. முல்லைத்திணை - 71 பாடல்கள்

இதில் 396 பாடல்கள் நேரிசை ஆசிரியப்பாவாலும், 5 பாடல்கள் (16, 18, 93, 113, 222) நிலைமண்டில ஆசிரியப்பாவாலும் காணப்படுகின்றன.

பாடலாசிரியர் எண்ணிக்கை

  • மொத்தப் புலவர்கள்: 205 பேர்.
  • ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள்: 10.

பெண்பாற் புலவர்கள் (13 பேர்)

  1. ஆதி மந்தி
  2. ஊண் பித்தை
  3. ஒக்கூர் மாசாத்தியார்
  4. ஔவையார்
  5. கழார்க்கீரன் எயிற்றியார்
  6. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
  7. நன்னாகையார்
  8. நெடும் பல்லியத்தை
  9. பூங்கணுத் திரையார்
  10. வருமுலையாரித்தி
  11. வெண்பூதியார்
  12. வெண்மணிப்பூதி
  13. வெள்ளி வீதியார்

சிறப்புத் தொடரால் பெயர் பெற்றவர்கள் (18 பேர்)

  1. கயமனார்
  2. செம்புலப் பெயனீரார்
  3. அணிலாடு முன்றிலார்
  4. நெடுவெண்ணிலவினார்
  5. மீனெறி தூண்டிலார்
  6. விட்ட குதிரையார்
  7. ஒரேருழவனார்
  8. கூவன் மைந்தன்
  9. காலெறி கடிகையார்
  10. ஓரிற்பிச்சையார்
  11. கல்பொரு சிறுநுரையார்
  12. கள்ளிலாத்திரையனார்
  13. குப்பைக் கோழியார்
  14. பதடி வைகலார்
  15. கவைமகன்
  16. வில்லக விரலினார்
  17. கங்குல் வெள்ளத்தார்
  18. குறியிறையார்

உரை

முதன் முதலில் குறுந்தொகைக்கு உரை எழுதி வெளியிட்ட பெருமை சௌரிப்பெருமாள் அரங்கசாமி ஐயங்காரைச் சாரும். இவர் 1915-இல் உரையெழுதித் திணைப் பெயரால் பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளார். முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும் கடைசி 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். க. நமச்சிவாய முதலியார், டி.என். சேஷாசல ஐயர், சோ. அருணாசல தேசிகர் போன்றோரும் இதற்கு உரை எழுதி உள்ளனர். டாக்டர் உ.வே.சா. அவர்கள் கூற்று வகையால் பாடல்களைப் பதிப்பித்துள்ளார். "கொங்குதேர் வாழ்க்கை" எனத் தொடங்கும் பாடலை இறைவனே இயற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நூலில் உள்ள பாடல்கள் அதிகமாக உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. சுமார் 29 உரையாசிரியர்கள் 236 பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

அகநானூறு

  • பதிப்பித்தவர்: இராசகோபால அய்யங்கார்.
  • தொகுத்தவர்: மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்.
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
  • அடிவரையறை: சிற்றெல்லை - 13 அடி, பேரெல்லை - 31 அடி.
  • வேறு பெயர்: நெடுந்தொகை நானூறு.

பாடல் அமைப்பு

400 செய்யுட்களை உடையது. மூன்று பிரிவுகளை உடையது:

  1. களிற்றியானை நிரை: 1-லிருந்து 120 வரை உள்ள பாடல்கள்.
  2. மணிமிடை பவளம்: 121-லிருந்து 300 வரையுள்ள பாடல்கள்.
  3. நித்திலக்கோவை: 301-லிருந்து 400 வரையுள்ள பாடல்கள்.

திணைக்குரிய பாடல் எண்

  • பாலைத்திணை: 1,3,5,7,9 என ஒற்றைப்படை எண்ணில் முடியும் 200 பாடல்கள்.
  • குறிஞ்சித் திணை: 2, 8 என முடியும் 80 பாடல்கள்.
  • முல்லைத்திணை: 4, 14 என முடியும் 40 பாடல்கள்.
  • மருதத் திணை: 6, 16 என முடியும் 40 பாடல்கள்.
  • நெய்தல் திணை: 10, 20 என முடியும் 40 பாடல்கள்.

400 பாடல்களும் முழுமையாகக் கிடைக்கின்றன.

கலித்தொகை

  • பதிப்பித்தவர்: சி.வை தாமோதரம்பிள்ளை.
  • தொகுத்தவர்: நல்லந்துவனார்.
  • சிறப்பு: "கற்றறிந்தோர் ஏத்தும் கலி". பாவகையால் பெயர் பெற்ற சங்க நூல்.
  • அடிவரையறை: சிற்றெல்லை - 11 அடி, பேரெல்லை - 80 அடி.

பாடல் எண்ணிக்கை

மொத்தப் பாடல் எண்ணிக்கை 149. கடவுள் வாழ்த்து (சிவன் பற்றி) பாடப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து - 150 பாடல்கள்.

பாடிய புலவர்கள் (5 பேர்)

  1. பாலைத் திணை - பெருங்கடுங்கோன்
  2. குறிஞ்சித் திணை - கபிலன்
  3. மருதத் திணை - மருதனிளநாகனார்
  4. முல்லைத் திணை - சோழன் நல்லுருத்திரனார்
  5. நெய்தல் திணை - நல்லந்துவனார்
note

இந்நூல் முழுமையும் நல்லந்துவனாரே பாடியிருக்க வேண்டும் என்பர். சி.வை. தாமோதரம்பிள்ளை இதனை 'நல்லந்துவனார் கலித்தொகை' என்றே தலைப்பிட்டுப் பதிப்பித்தார்.

திணை அமைப்பு

பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற வரிசை முறையில் அமைந்துள்ளது.

  • பாலைத் திணை: 35 பாடல்கள்
  • குறிஞ்சித் திணை: 29 பாடல்கள்
  • மருதத் திணை: 35 பாடல்கள்
  • முல்லைத் திணை: 17 பாடல்கள்
  • நெய்தல் திணை: 33 பாடல்கள்

கைக்கிளை, பெருந்திணை பற்றிய பாடல்கள் குறிஞ்சிக்கலியில் பாடப்பெற்றுள்ளன. மடலேறுதல், இழிந்தோர் சாதல் பற்றியும் பாடல்கள் உள்ளன. உரையாடல் போன்று பாடல்கள் மருதக்கலியில் வந்துள்ளன. கூனி, குறளன் காதல் உரையாடல் வேறு நூல்களில் காணப்பெறவில்லை. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய பழைய உரை ஒன்றும் உள்ளது. பாடல்கள் நாடகப்பாங்கில் அமைந்துள்ளன. பழமொழிப்பாங்கில் ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறுவதில் கலித்தொகை சிறப்புற்று விளங்குகிறது.

புறநானூறு

  • தொகுத்தவர், தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை.
  • அடிவரையறை: 4 அடி முதல் 40 அடி வரையிலும் பாடல்கள் காணப்படுகின்றன.

பாடல் எண்ணிக்கை

கடவுள் வாழ்த்துடன் 400 பாடல்கள். இரண்டு பாடல்கள் (267, 268) முழுமையாகக் கிடைக்கவில்லை.

  • பாடிய புலவர்கள்: 157
  • புலவர் பெயர் தெரியாதவை: 14 பாடல்கள்

தொடரால் பெயர் பெற்றவர்கள் (2 பேர்)

  1. இரும்பிடர்த் தலையார் (3 ஆவது பாடல்)
  2. தொடித்தலை விழுத்தண்டினார் (243 ஆவது பாடல்)

பெண்பாற் புலவர்கள் (15 பேர்)

  1. ஓக்கூர் மாசாத்தியார்
  2. ஔவையார்
  3. காக்கைபாடினியார் நச்செள்ளையார்
  4. காவற்பெண்டு
  5. குறமகள் இளவெயினி
  6. தாயங்கண்ணியார்
  7. நக்கண்ணையார்
  8. பாரிமகளிர்
  9. பூங்கணுத்திரையார்
  10. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
  11. பேய்மகள் இளவெயினி
  12. மாரிப்பித்தியார்
  13. மாறோக்கத்து நப்பசலையார்
  14. வெண்ணிக் குயத்தியார்
  15. வெறிபாடிய காமக்கண்ணியார்

வரலாற்றுச் செய்திகள்

பண்டைத் தமிழகத்தை ஆண்ட 15 பாண்டிய மன்னர்களையும், 18 சோழ வேந்தர்களையும், 18 சேர அரசர்களையும் சிறப்பித்துக் கூறுகிறது. பாரி, ஓரி, அதியமான், பேகன், ஆய், நள்ளி போன்ற கடையெழு வள்ளல்கள் பற்றியும், குமணன் போன்ற பிற்கால வள்ளல்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பேகன் மனைவி கண்ணகி, நக்கண்ணையார், பாரி - கபிலர் நட்பு, அதியன் - ஔவை நட்பு, கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு பற்றியும் அறிய முடிகிறது.

பதிற்றுப்பத்து

சேரமன்னர் பதின்மர் மீது பத்துப் புலவர்கள் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடிய, 100 பாடல்களின் தொகுப்பு பதிற்றுப்பத்தாகும்.

  • கடவுள் வாழ்த்து: "எரியள்ளுவன்ன நிறத்தன்" என்று தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் அகவற்பாவினால் அமையாமல் மருட்பாவினால் அமைந்துள்ளது. இப்பாடல் உ.வே.சா. அவர்கள் பதிப்பில் இடம் பெறவில்லை.
  • கிடைக்காதவை: இந்நூலின் முதற்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.
  • பதிகம்: ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒவ்வொரு பதிகம் அமைந்துள்ளது. இப்பதிகங்களைப் பாடியவர்கள் பெயர் தெரியவில்லை. பதிகம் ஆசிரியப்பாவாகத் தொடங்கி உரைநடை நடையாக முடிகின்றது.

கிடைத்தப் பதிற்றுப்பத்துகள்

பத்துபாட்டுடைத்தலைவன்பாடியோர்
2 ஆம் பத்துஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்குமட்டூர்க் கண்ணனார்
3 ஆம் பத்துபல்யானைச் செல்கெழுகுட்டுவன்பாலைக்கௌதமனார்
4 ஆம் பத்துகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்காப்பியாற்றுக் காப்பியனார்
5 ஆம் பத்துகடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்பரணர்
6 ஆம் பத்துஆடுகோட்பாட்டுச் சேரலாதன்காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
7 ஆம் பத்துசெல்வக் கடுங்கோ வாழியாதன்கபிலர்
8 ஆம் பத்துதகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறைஅரிசில்கிழார்
9 ஆம் பத்துஇளஞ்சேரல் இரும்பொறைபெருங்குன்றூர்க் கிழார்

பரிபாடல்

  • சிறப்பு: 'ஓங்கு பரிபாடல்'.
  • மொத்தப் பாடல்கள்: 70.
  • கிடைத்தவை: 22 பாடல்கள் (திருமால் - 6, செவ்வேள் - 8, வையை - 8).
  • பொருள்: திருமால், முருகன் பற்றிய 14 பாடல்கள் புறம் சார்ந்தவை. வையை பற்றிய 8 பாடல்கள் அகம் சார்ந்தவை.
  • அடிவரையறை: சிற்றெல்லை - 25 அடி, பேரெல்லை - 400 அடி.
  • புலவர்கள்: 13 பேர்.
  • இசை வகுத்தவர்கள்: 10 பேர்.
note

முதற்பாடலையும், இறுதிப்பாடலையும் பாடிய புலவர் பெயரும், இசை வகுத்தவர் பெயரும் தெரியவில்லை. ஒவ்வொரு பாடலுக்குக் கீழும் பாடியோர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பாடற்பண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.