Skip to main content

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும். நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.

பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் யாவை

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  11. முப்பால் (திருக்குறள்)
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

3 வகைகள்

  • அறநூல்கள் - 11
  • அகநூல்கள் - 6
  • புறநூல் - 1

அறநூல்கள்

எண்நூல்கள்ஆசிரியர்கள்
1நாலடியார்சமணமுனிவர்கள்
2நான்மணிக்கடிகைவிளம்பிநாகனார்
3இன்னா நாற்பதுகபிலர்
4இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்
5திரிகடுகம்நல்லாதனார்
6ஆசாரக்கோவைபெருவாயின்முள்ளியார்
7பழமொழிமுன்றுரை அரையனார்
8சிறுபஞ்சமூலம்காரியாசன்
9ஏலாதிகணிமேதாவியர்
10திருக்குறள்திருவள்ளுவர்
11முதுமொழிக்காஞ்சிகூடலூர் கிழார்

அகநூல்கள்

எண்நூல்கள்ஆசிரியர்கள்
1ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார்
2ஐந்திணை எழுபதுமூவாதையார்
3திணைமொழி ஐம்பதுகண்ணன் சேந்தனார்
4கார் நாற்பதுகண்ணன் கூத்தனார்
5திணைமாலை நூற்றைம்பதுகணிமேதாவியார்
6ஐந்திணை அறுபது (அ) கைந்நிலைபுல்லங்காடனார்

புறநூல்

எண்நூல்ஆசிரியர்
1களவழி நாற்பதுபொய்கையார்