காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
- ஆசிரியர்: இளங்கோவடிகள்
- பா: ஆசிரியப்பா & வெண்பா
- அடி: 5001
- காலம்: கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
- காப்பியம்: தமிழில் கிடைத்த முதல் காப்பியம்.
- சமயம்: சமயச் சார்பற்றது (சமணக்காப்பியம்)
- அமைப்பு: 30 காதைகள், 3 காண்டம்
- புகார்க்காண்டம் / 10 காதைகள்
- மதுரைக்காண்டம் / 13 காதைகள்
- வஞ்சிக்காண்டம் / 7 காதைகள்
- சிறப்பு: இரட்டைக் காப்பியம் (சிலம்பு, மணிமேகலை), தனித்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம்.
- பெயர்க்காரணம்: கோவலனது அநீதியான கொலையும் கண்ணகியின் நீதி பற்றிய வெற்றியும் கதையின் முடிப்பாகும். இம்முடிப்பு காற்சிலம்பு ஒன்றினால் விளைகிறது. எனவே சிலம்பு அதிகாரம் என்ற பெயர் நயம்பெற அமைந்ததாகும்.
- பதிப்பு: 1892-இல் முதன் முதலில் உரையோடு உ.வே.சா. பதிப்பித்தார்.
- கதை மாந்தர்: கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை, மாடல மறையோன், கவுந்தி, மாதரி, கோசிகன், வயந்தமாலை மற்றும் பிறர்.
- உரை: பழைய அரும்பத உரை (ஆசிரியர் அறியப்படவில்லை), அடியார்க்கு நல்லார் உரை.
நயமிக்க வரிகள்
'காதலற் பிரியாமற் தீதறு கெனவேத்திச் சின்மலர் கொடுதுவி அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்'
"இன்துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்பூக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண்டிலமால்"
அறிஞர்கள்
'நெஞ்சை யள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' - பாரதியார்
'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகார மதை' - கவிமணி
'சிலப்பதிகாரத்தைச் சிறப்பதிகாரம் என்றால் தகும்' - உ.வே. சா.
மணிமேகலை
- ஆசிரியர்: சீத்தலைச் சாத்தனார் (இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப வளங்கெழு கூலவாணிகன் சாத்தன்...)
- பா: அகவற்பா
- அடி: 4759 (98 பதிக அடி நீங்கலாக)
- காலம்: கி.பி. 2 (கி.பி. 5-க்குப்பிறகு என வையாபுரிப்பிள்ளை கூறுவார்)
- சமயம்: பௌத்தம்
- அமைப்பு: 30 காதைகள்
- வேறுபெயர்: மணிமேகலைத் துறவு
- சிறப்பு: தனித்தமிழ்க் காப்பியம், பௌத்த காப்பியம், (சமய) சீர்திருத்தக் காப்பியம், பெண்ணின் பெருமை பேசும் காப்பியம், குடிமக்கள் கதைக்களஞ்சியக் காப்பியம், இயற்கை இகழ்ந்த காப்பியம்.
- கதைமாந்தர்: மணிமேகலை, மாதவி, மாசாத்துவான், மதுராபதி, துச்சயன், இராகுலன், உதயணன் முதலாக 89 பேர்.
- தன்மைகள்: எளிய நடை, கதை சொல்லும் திறன், சமய அறங்களைத் தெளிவாக எடுத்துக்கூறல்.
- கருத்துகள்: பிறப்பினால் மேல் கீழ் போக்கு எதிரானது. முதற்சமயக் காப்பியம். இந்திர விழாச் சிறப்பு, சிறைச்சீர்திருத்தம், பரத்தமை ஒழிப்பு, பசிப்பிணி அகற்றல், உடல் ஊனமுற்றோர்க்கு உதவுதல், மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு போன்ற சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்துவதால் சமுதாயச் சீர்திருத்தங்களின் களஞ்சியம்.
- கிளைக்கதைகள்: ஆபுத்திரன் கதை, முற்பிறப்புக்கதை, ஆதிரை வரலாறு என பல கிளைக்கதைகள் உள்ளன.
- தகுதி: பண்பாட்டு வரலாற்றுக் காப்பியம். குண்டலகேசி, நீலகேசி போன்ற சமயத்தருக்கக் காப்பியங்களுக்கு வழிகாட்டி.
அறிஞர்
சமய சம்பந்தமான பல சொற்களையும், தொடர்களையும் வேறுசிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் மொழிபெயர்த்து அமைத்திருத்தல் மிகப்பாராட்டிற்கு உரியதொன்றாம். - உ.வே.சா
நயமிக்க வரிகள்
"இளமை நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது"
"மாண்எழில் சிதைக்கும் பூண்அணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி"
"மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
கம்பராமாயணம்
- ஆசிரியர்: கம்பர்
- காலம்: கி.பி. 9, கி.பி. 12, அல்லது கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
- பா: 10,500 பாடல்கள், 6 காண்டம், 113 படலம்.
- கம்பர் இட்ட பெயர்: "ராமாவதாரம்" அல்லது "இராமகாதை"
- சிறப்புப் பெயர்கள்: கம்ப நாடகம்
- சிறப்புகள்:
- வ.வே.சு. ஐயர்: "கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்க நீக்கம், மகாபாரதம் போன்றவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமன்றி தனக்கு முதல் நூலான வால்மீகியையும் விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்."
- "கங்கைக் கரைச்சீதைக்குக் காவிரிச் சீலை உடுத்தி அழகு பார்த்திருக்கிறார் கம்பர்"
- "கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" - பாரதியார்
- "கல்வியிற் பெரியவர் கம்பர்"
- "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்"
- "கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே"
கம்பர்
ஏகம்பன் என்ற பெயர் முதல் குறைந்து 'கம்பன்' என்றாயிற்று. கம்பங்கொல்லை காத்ததால் கம்பர், காளிகோயில் கீழ்க் கண்டெடுத்ததால் கம்பர், அல்லது கவிபாடும் புலமையில் அறிவற்றுக் கம்பம்போல் நின்றதால் கம்பர் என்றாயிற்று எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பெரியபுராணம்
- ஆசிரியர்: குன்றத்தூர்ச் சேக்கிழார்.
- ஆதரித்தவன்: அநபாய சோழன் (குலோத்துங்கச் சோழன்)
- பொருள்: 63 சைவ அடியார் வரலாறு.
- குறிப்பு: ஒன்பது தொகை அடியார் பற்றிய செய்திகளும் அடங்கும்.
- மூலம்:
- சுந்தரர் - திருத்தொண்டத்தொகை
- நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி
- சருக்கம்:
- தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
- இலைமலிந்த சருக்கம்
- திருநின்ற சருக்கம்
- வம்பறா வரிவண்டும் சருக்கம்
- இயற்றிய முறை: ஒவ்வொரு சருக்கம் முடிவிலும் சுந்தரர் பற்றிய செய்யுள் உள்ளது. முந்து நூல்களைக் கற்று, தம்கால கோயில், சிற்பம், ஓவியம், படிமம் ஆகியவற்றை நேரில் சென்று பார்த்தவற்றைப் பதிவுசெய்துள்ளார்.
- காரணம்: சீவகசிந்தாமணி என்ற புறச்சமயக் காவியம் மக்களைக் கவர்ந்துவிடுதல் கூடாது என்று நினைத்துச் சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார்.
தேம்பாவணி
- ஆசிரியர்: வீரமாமுனிவர்.
- பாடல்: 3615 விருத்தம்
- பொருள்: "வாடாத பாமாலை"
- தன்மை: புறநிலைக் காப்பியம் என வீரமாமுனிவர் கூறியுள்ளார்.
- பதிப்புகள்:
- 1729, 1851 புதுச்சேரி சன்ம இராக்கினி மாதா அச்சக வெளியீடு
- 1961 - தமிழ் இலக்கியக் கழகம் முதல் காண்டம்
- 1964 - தமிழ் இலக்கியக் கழகம் - இரண்டாம் காண்டம்
- 1964 - தமிழ் இலக்கியக் கழகம் மூன்றாம் காண்டம்
இரட்சணிய யாத்திரிகம்
- ஆசிரியர்: ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப் பிள்ளை (H. A. கிருஷ்ணப்பிள்ளை)
- மூலம்: ஜான் பனியன் எழுதிய "The Pilgrim's Progress"
- காலம்: 14 ஆண்டுகள் எழுதினார்.
- பதிப்பு: 1894
- செய்யுள்: 3766
- பருவம்: 5 பருவங்கள்
- ஆதி பருவம்
- குமார பருவம்
- நிதான பருவம்
- ஆரணிய பருவம்
- இரட்சணிய பருவம்
- சுவை: பேரின்பச் சுவை
- தகுதி: சிறுகாப்பியம்
- ஆசிரியர் பிற நூல்கள்:
- இரட்சணிய சமய நிர்ணயம் (1893)
- இரட்சணிய மனோகரம் (1858)
- எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை கிறித்தவரான வரலாறு
- இரட்சணியக் குறள்
சீறாப் புராணம்
- ஆசிரியர்: உமறுப்புலவர்
- காலம்: கி.பி. 17
- ஆதரித்தவர்: சீதக்காதி
- சீறா: வரலாறு / வரலாற்றுப் புராணம்
- காண்டம்: 3
- விலாதத்துக் காண்டம்
- நுபுவ்வத்துக் காண்டம்
- ஹிஜ்ரத்துக் காண்டம்
- பா: 5027 விருத்தம்
- படலம்: 92
- கதாநாயகர்: நபிகள் நாயகம்
- தகுதி: சிறுகாப்பியம்