Skip to main content

வைணவம்

பன்னிரு ஆழ்வார்களைக் குறிக்கும் பாடல்:

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்தன் பொருநால் வரும் குருகேசன் விட்டுசித்தன் துய்யருல சோன்றம் பாண நாதன் தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி வய்யமெலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்து மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!

பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள்

  • பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - 100 பாசுரங்கள்
  • பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - 100 பாசுரங்கள்
  • பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - 100 பாசுரங்கள்
  • திருமழிசையாழ்வார் - நான்காம் திருவந்தாதி (திருச்சந்த விருத்தம்) - 216 பாசுரங்கள்
  • நம்மாழ்வார் - திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி
  • மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுதாம்பு
  • பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
  • ஆண்டாள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
  • திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்

பொய்கையாழ்வார்

  • ஊர்: காஞ்சிபுரம்
  • மாதம்/நட்சத்திரம்: ஐப்பசி, திருவோணம்
  • பிறப்பு: திருவெஃகாவில் பொற்றாமரைப் பொய்கையில் பிறந்தார். பொய்கையில் தோன்றியதால் பொய்கையார் எனப்பட்டார்.
  • அம்சம்: திருமாலின் பாஞ்சசன்யம் (சங்கின்) அம்சம்.

இவர் தம் பாடல்களை 'சொல்மாலை' என்கின்றார். வினை, பாவம் ஆகியவற்றிலிருந்து நீங்கி உய்வடைய இறைவனிடம் சரணடைவதைப் பாடுகிறார். இப்பாடல்கள் அந்தாதித் தொடையாய் அமைந்தவையாகும்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்யக் கதிரோன் விளக்காகச் செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று.

பூதத்தாழ்வார்

  • ஊர்: திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்)
  • மாதம்/நட்சத்திரம்: ஐப்பசி, அவிட்டம்
  • அம்சம்: திருமாலின் கதாயுதத்தின் (கதை) அம்சம்.

திருமாலை இவர் 'மதம்' என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதால் பூதம் என்று அழைக்கப்படுகிறார். திருமால் படைத்தலைவர், 'சேனைமுதலியார்' எனப்படுகிறார். திருமாலின் பத்து அவதாரங்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இவர் பாடிய தளங்கள் திருவேங்கடம், தஞ்சை, திருவரங்கம், திருக்கோவிலூர். இவர் பாடல்களை 'ஞானத்தமிழ்' என்கிறார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்.

பேயாழ்வார்

  • ஊர்: மயிலாப்பூர் (தொண்டை நாடு)
  • மாதம்/நட்சத்திரம்: ஐப்பசி, சதயம்
  • அம்சம்: திருமாலின் நந்தகம் (வாளின்) அம்சம்.

பக்திப் பெருக்கால் பேய்போல் ஆடியதால் இப்பெயர் பெற்றார். இவர் பாடல்களில் சமரச ஞானம் காணப்படுகிறது. தவம் வேண்டாம், தூய மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பதன் மூலமே தீவினை அகலும் என்கிறார்.

பொறுப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா - விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய்க் கைதொழுதால் அஃகே தீவினைகள் ஆய்ந்து.

குறிப்பு

முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் காலத்தவர் (கி.பி. 640-668) எனக் கருதப்படுகிறது. மூவரும் திருக்கோவலூரில் சந்தித்து இறைவனைக் கண்டனர்.

திருமழிசை ஆழ்வார்

  • ஊர்: சென்னை அடுத்த திருமழிசை
  • மாதம்/நட்சத்திரம்: தை, மகம்
  • அம்சம்: திருமாலின் சுதர்சனம் (சக்கரத்தின்) அம்சம்.
  • பெற்றோர் / வளர்ப்பு: பார்க்கவ முனிவர் மற்றும் கனகாங்கிக்கு மகனாகப் பிறந்து, திருவாளன் என்ற வேடர் குலத்தவரால் வளர்க்கப்பட்டார்.

இவர் பாடல்களில் சங்கப்பாடல்களின் சாயல் உள்ளது. சைவ, சமண, பௌத்த மதங்களை வெளிப்படையாகவே கண்டிக்கிறார். திருமாலே முழுமுதல் தெய்வம் என்கிறார். அன்பே இறைவனை அடையும் வழி என்பது இவர் நெறி. இவர் பாடல்களில் உயர்வு நவிர்ச்சி இல்லை; வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பாடியுள்ளார். இவருடைய நண்பர் கணிகண்ணன்.

அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன்பாவை கேள்வா! கினார் ஒளிஎன கேசவனே! கேடின்றி ஆள்வாய்க்கு அடியேனே நான் ஆள்.