வைணவம்
பன்னிரு ஆழ்வார்களைக் குறிக்கும் பாடல்:
பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்தன் பொருநால் வரும் குருகேசன் விட்டுசித்தன் துய்யருல சோன்றம் பாண நாதன் தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி வைய்யமெலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்து மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள்
- பொய்கையாழ்வார்: முதல் திருவந்தாதி - 100 பாசுரங்கள்
- பூதத்தாழ்வார்: இரண்டாம் திருவந்தாதி - 100 பாசுரங்கள்
- பேயாழ்வார்: மூன்றாம் திருவந்தாதி - 100 பாசுரங்கள்
- திருமழிசையாழ்வார்: நான்காம் திருவந்தாதி (திருச்சந்த விருத்தம்) - 120, நான்முகன் திருவந்தாதி - 96 (மொத்தம் 216 பாசுரங்கள்)
- நம்மாழ்வார்: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
- மதுரகவியாழ்வார்: கண்ணிநுண்சிறுத்தாம்பு
- பெரியாழ்வார்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
- ஆண்டாள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி
- திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
பொய்கையாழ்வார்
- பிறந்த இடம்: காஞ்சிபுரம், திருவெஃகா பொற்றாமரைப் பொய்கை.
- பிறந்த காலம்: ஐப்பசி மாதம், திருவோண நட்சத்திரம்.
- சிறப்பு: கச்சியம்பதியில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையார் எனப்பட்டார்.
- அம்சம்: திருமாலின் பாஞ்சசன்யம் (சங்கின்) அம்சம்.
இவர் தம் பாடல்களை 'சொல்மாலை' என்கின்றார்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்யக் கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று.