Skip to main content

மனிதவள மேம்பாடு மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (Human Development & TN Welfare Schemes)

Human development in Tamil Nadu builds upon a rich tradition of social reform movements and educational initiatives that evolved from ancient educational systems through colonial educational policies to modern constitutional commitments to education and welfare. These welfare schemes complement broader economic development strategies and sectoral initiatives in agriculture and energy development.

Human Development and Tamil Nadu Welfare Schemes

மனிதவள மேம்பாடு (Human Resource Development)

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் "மனிதவள மேம்பாடு" என்ற சொல்லானது வெவ்வேறு பொருள்படுமாறு பயன்படுத்தப்படுகிறது. F.H. ஹர்பிசன் (F.H. Harbison) என்பவரின் கூற்றுப்படி 'மனித வளங்கள் என்பது மக்களிடமுள்ள ஆற்றல்கள், திறன்கள், அறிவு ஆகிய மறைந்துள்ள சக்திகளை பண்டங்களின் உற்பத்தியிலும் அல்லது பயனுள்ள பணிகளை ஆற்றுவதிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அடங்கியுள்ளது" என்கிறார். மனித வள மேலாண்மையில் (Human Resource Management) மனிதவள மேம்பாடு என்பது கற்றலின் செயல்களை ஒழுங்கு படுத்தி, ஒரு நிர்வாக அமைப்பில் அதை வரிசைப்படுத்துவதன் மூலம் செயல்பாடுகளை முன்னேற்றம் அடையச் செய்து ஒரு நபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் பணிகளை முன்னேற்றுவதாகும்.

மனித வள மேம்பாட்டினை சுட்டிக் காட்டும் பொதுவான காரணிகள் இரு பிரிவுகளாகும். அவை ஒரு நாட்டின் மனித முதலீட்டின் இருப்பை அளவிடுதல். இந்த இருப்போடு, இன்னும் மனித மூலதன ஆக்கத்தின் அளவை அளவிடுதல். இதுவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மனித மூலதன ஆக்கத்தின் அளவாகும். இந்த மனித மூலதன இருப்பானது அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு நிலையை காட்டுவதாகும்.

மனித மூலதனம் (Human Capital)

மனித மூலதனத்தை பற்றி குறிப்பிடும் போது ஒரு நபர் கீழ்கண்ட வகைகளில் தனது திறன்களை வளர்த்துக்கொள்ள முதலீடு செய்தலைக் குறிக்கின்றோம். அவையாவன:

  • சுகாதார வசதிகள் மற்றும் பணிகள்
  • பணிக்கான பயிற்சி
  • முறையான கல்வி
  • முதியோர் கல்வி மற்றும் விவசாய விரிவாக்கத் திட்டங்கள் (எ.கா. முறைசாரா கல்வி)
  • தனிநபர் மற்றும் குடும்பங்கள் வேலைவாய்ப்பைத் தேடி இடம் பெயர்தல்.

மனித மூலதனத்தை அதிகரிக்கும் அனைத்து காரணிகளுக்குள்ளும் கல்வி மிக முக்கியம் ஆனதாக கருதப்பட்டது. 1960 ஆம் ஆண்டு ஸ்கல்ட்ஸ் (Schultz) என்ற அறிஞர் தனது மனித மூலதன கோட்பாட்டில் இதை அறிவித்துள்ளார். இன்றைய நாட்களில் கல்வி என்பது 'நுகர்வும் முதலீடும்" என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொருளாதார நிபுணர்கள் அதிகபட்சம் கல்வியை மனிதவள முதலீடாகவே கருதுகின்றனர். ஹர்பிசன் (Harbison) மற்றும் மேயர்ஸ் (Meyers) ஆகியோர் மனிதவள குறியீடுகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்:

  • பத்தாயிரம் மக்களுக்கு உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை (முதல் மற்றும் 2 ஆம் நிலைகளில்).
  • 10,000 மக்களுக்கு உள்ள பொறியாளர் மற்றும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை.
  • 10,000 மக்களுக்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் எண்ணிக்கை.
  • 5 முதல் 14 வயது வரம்புக்குட்பட்ட தொடக்கக் கல்வி சேர்க்கப்பட்ட மாணவர்களின் சதவீதம்.
  • சமன் செய்யப்பட்ட தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலை கல்வி பள்ளியின் சேர்க்கை வீதம்.
  • 2-ம் நிலையாகிய 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களின் சேர்க்கை வீதம்.

மனித மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index - HDI)

மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது வாழ்க்கை மட்டத்தின் ஒரு முழு அளவாகும். 1977-ம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கையில் மனித வளர்ச்சிக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. 'மனிதத் தெரிவுகளை விரிவாக்குதும், மனித நலன்களை உயர்த்துவதும் மனித வளர்ச்சியின் மைய பொருளாகும்". மனிதனுக்கு மூன்று அத்தியாவசிய தெரிவுகள் உள்ளன:

  1. நீண்ட கால சுகவாழ்வு.
  2. அறிவுத் திறனைப் பெற்றுக் கொள்ளுதல்.
  3. வாழ்க்கை தரத்தை பெற்றுக் கொள்ள அவசியமான வளங்களை அடைதல்.

முதல் மனித மேம்பாடு அறிக்கையானது 1990 ஆம் ஆண்டு UNDP நிறுவனத்தால், பாகிஸ்தான் பொருளியலறிஞர் மஹ்பூப்-உல்-ஹக் (Mahbub-ul-Haq) வழிகாட்டுதலின்படி வெளியிடப்பட்டது.

மனித மேம்பாட்டுக் குறியீடு கீழ்காணும் மூன்று அளவுகோள்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது:

  • வாழ்நாள் எதிர்பார்ப்பு: பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம்.
  • கல்வி அடைவு நிலை: வயது வந்தோர் கல்வி (2/3 நிறை) மற்றும் தொடக்க, இடைநிலை, மேல் நிலைக் கல்வி ஆகிய நிலைகளில் மாணவர் சேர்க்கை வீதம் (1/3 நிறை) ஆகியவற்றின் மூலமும்.
  • வாழ்க்கைத் தரம்: உண்மையான தனி மனித வீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) (வாங்கும் சக்தி சமநிலை டாலர்களில் - PPP).

மனித மேம்பாட்டுக் குறியீடு அனைத்து நாடுகளையும் 3 பிரிவுகளாக பிரிக்கிறது:

  • குறைந்த மனித மேம்பாடு (0.0 to 0.499)
  • நடுத்தர மனித மேம்பாடு (0.50 to 0.799)
  • உயர்தர மனித மேம்பாடு (0.80 to 1.00)

2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மனிதவள குறியீட்டில் இந்தியா 135வது இடம் வகிக்கிறது. 0.586 மதிப்பினை பெற்ற இந்தியா, நடுத்தர மனித மேம்பாடு என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா 130வது இடத்தை பெற்றது.

பாலின வளர்ச்சி குறியீடு (Gender Development Index - GDI)

இக்குறியீட்டின் மிகப்பெரிய நன்மை யாதெனில் இது ஆண்-பெண் இடையேயான ஏற்றத் தாழ்வுகளை பிரதிபலிக்கிறது. இதில் 3 அளவீடுகள் சம்பந்தப்படுகின்றன:

  • பெண்ணின் எதிர்பார்க்கப்பட்ட வாழ்வு காலம்.
  • பெண்ணின் வயது வந்த கல்வி நிலை மற்றும் மொத்த சேர்க்கை சதவீதம்.
  • பெண்ணின் தலா வருமானம்.

மனித ஏழ்மை குறியீடு (Human Poverty Index - HPI)

1997ம் ஆண்டு மனித வள மேம்பாட்டு குறியீடு மனித ஏழ்மைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது. இது ஆயுட்காலத்தை இழக்கச் செய்தலையும், அறிவையும் மற்றும் நல்ல வாழ்க்கைத் தரத்தின் இழப்பினையும் அளவிடுகிறது. மனித ஏழ்மைக் குறியீடு (HPI) அதிகமாக இருக்கும் நாடு "ஏழை நாடு” என்ற இடத்தைப் பெறும். நாற்பது வயதுக்கு முன் இறத்தல், மோசமான சுகாதார சேவைகள், பாதுகாப்பற்ற தண்ணீர் வசதி, 5 வயதிற்கு கீழுள்ள குழுந்தைகளுக்கு குறைந்த சத்துள்ள உணவு முதலியன அதிகமான HPIக்கு காரணமாகும்.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் (Tamil Nadu Government Welfare Schemes)

1947-ம் ஆண்டு மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்த மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1952-ல் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. 1954ல் தமிழக அரசு, மாநில சமூக நல வாரியத்தை அமைத்தது.

பெண்கள் நலத் திட்டங்கள் (Women's Welfare Schemes)

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்

  • நோக்கம்: ஏழை பெண்களின் கல்வி நிலையை உயர்த்தும் பொருட்டும், ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் திருமணத்தை நடத்திடும் பொருட்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • தொடங்கப்பட்ட ஆண்டு: ஜூன் 1989
  • உதவி:
    • 10ம் வகுப்பு வரை முடித்த பெண்களுக்கு - ரூபாய் 25,000 மற்றும் 4 கிராம் தங்க நாணயம்.
    • பட்டயப்படிப்பு முதல் இளங்கலை பட்டம் வரை முடித்த பெண்களுக்கு - ரூபாய் 50,000 மற்றும் 4 கிராம் தங்க நாணயம்.
  • தகுதி: பெற்றோர் ஆண்டு வருமானம் ₹72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பெண்களின் வயது 18 முதல் 30 வரை. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டுமே.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்

  • தொடங்கப்பட்ட ஆண்டு: 1989
  • விவரம்: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு (மகப்பேறு) உதவியாக ரூபாய் 12,000 வழங்கப்படுகிறது.

அன்னை தெரசா நினைவு அனாதைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் (1984-85)

  • நோக்கம்: அனாதைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டம்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்

  • நோக்கம்: விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு, விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் நிதி வழங்கும் திட்டம்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்

  • நோக்கம்: ஜாதி, மத பேதங்களை ஒழிக்கும் வகையில் நடைபெறும் கலப்பு திருமணங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்.

மகளீர் திட்டம் (சுய உதவிக் குழுக்கள்)

  • நோக்கம்: சுய உதவிக் குழுக்கள் அமைப்பின் மூலம், சமூக பொருளாதார அதிகாரமளித்தலை பெண்களுக்கு கிடைக்கச் செய்தல்.
  • தொடங்கப்பட்ட ஆண்டு: 1997
  • செயல்படுத்துபவர்: தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றக் கழகம்.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

  • நோக்கம்: ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டும், சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

குழந்தைகள் நலத் திட்டங்கள் (Child Welfare Schemes)

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

(முன்னர்: சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்)

  • நோக்கம்: குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவித்தல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்தல்.
  • உதவித் தொகை: ஒரு பெண் குழந்தை எனில் ரூ. 50,000, 2 பெண் குழந்தையெனில் தலா ரூ. 25,000. ஆண் குழந்தை இருப்பின் இத்திட்டம் அக்குடும்பத்தில் பொருந்தாது.

தொட்டில் குழந்தை திட்டம் (1992)

  • விவரம்: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அனாதை விடுதிகளில் "அரசுத் தொட்டில்கள்" ஏற்படுத்தப்பட்டன. சமூக பொருளாதார நிலை காரணமாக பெற்றோர்களால் கைவிடப்பட்ட பல பெண் குழந்தைகள் அரசுச் தொட்டிலில் சேர்க்கப்பட்டனர்.

சத்யா அம்மையார் நினைவு அரசு அநாதைகள் திட்டம்

  • நோக்கம்: ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல். இலவச உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவ வசதி வழங்கல்.

பெரியார் ஈ. வே. ரா. நாகம்மை திட்டம்

  • தொடங்கப்பட்ட ஆண்டு: 1989
  • நோக்கம்: சாதி, பிரிவு என்ற பாகுபாடின்றி அனைத்து பெண் குழந்தைகளுக்குமான இலவச கல்வி வழங்கும் திட்டம். பெண் கல்வியை ஊக்குவித்தல், பள்ளி இடைநிற்றலை குறைத்தல், இளங்கலை பட்டபடிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்குதல்.

புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் சத்துணவு திட்டம் (1982)

  • நோக்கம்: பள்ளி குழந்தைகளுக்கு (5 முதல் 15 வயதிற்குட்பட்டோர்) சத்துணவு வழங்குதல், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மன நல மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தருதல், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல் மற்றும் எழுத்தறிவு விகிதத்தை அதிகரித்தல். வாரம் 3 முறை முட்டை வழங்கப்படுகிறது.

சமூக நீதி திட்டங்கள் (Social Justice Schemes)

பெரியார் நினைவு சமத்துவபுரம்

  • நோக்கம்: சமூக நீதியை வளர்க்கும் பொருட்டும், தந்தை பெரியாரின் கருத்துகளான சமதர்ம சமூகத்தை உருவாக்கும் பொருட்டும் மாதிரி வீடுகளை உருவாக்கி மக்களுக்கு அளித்தல்.
  • தொடங்கப்பட்ட ஆண்டு: 1997. முதல் சமத்துவபுரம் 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் நாள் மதுரையில் உள்ள மேலக்கோட்டை கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
  • வீடுகள் ஒதுக்கீடு: SC - 40%, MBC - 25%, BC - 25%, மற்றவர்கள் - 10%.

தாட்கோ (TAHDCO)

  • விவரம்: ஆதி திராவிடர் வீட்டு வசதிக் கழகம், 1974ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.

ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் (Rural and Urban Development Schemes)

உழவர் சந்தை திட்டம்

  • நோக்கம்: விளைகின்ற காய்கறிகளை இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
  • துவக்கம்: முதல் உழவர் சந்தை 1999ம் ஆண்டு மதுரையில் துவங்கப்பட்டது.

வருமுன் காப்போம் திட்டம்

  • தொடங்கப்பட்ட ஆண்டு: 1996
  • நோக்கம்: நோய்களை முன்னரே கண்டறிந்து தடுத்தல் என்னும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

புது வாழ்வு திட்டம்

  • நோக்கம்: வாழ்க்கைத் தரம் உயர்த்துதல், பொருளாதார அதிகாரமளித்தல், வறுமையை அழித்தல்.
  • துவக்கம்: நவம்பர் 2005-ல் உலக வங்கியின் நிதியுதவியோடு தொடங்கப்பட்டது.
  • பயனாளிகள்: ஏழைகள், ஊனமுற்றோர், பாதிக்கப்பட்ட மக்கள்.

தன்னிறைவுத் திட்டம்

  • அறிமுகம்: 1997-1998
  • நோக்கம்: சுய உதவி மற்றும் தற்சார்பு கருத்துகளை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம் ஊரக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். மூன்றில் ஒரு பங்கு மக்கள் பங்களிப்பாகவும், இரண்டு பங்கு அரசிடமிருந்தும் நிதி பெறப்படுகிறது.
  • பெயர் மாற்றம்:
    • 2001-2006: தன்னிறைவுத் திட்டம்
    • 2006-2011: நமக்கு நாமே திட்டம்
    • 2011 முதல்: தன்னிறைவுத் திட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

  • தொடங்கப்பட்ட ஆண்டு: 2006
  • நோக்கம்: கிராமங்களில், தேவைப்படும் நிதி வளங்களை சிறிது சிறிதாக மேம்படுத்துதல். ஊரகப் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்குதல்.

கலைஞர் வீட்டு வசதி திட்டம்

  • அறிவிப்பு: ஜனவரி 6, 2010
  • நோக்கம்: தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசைகள் அனைத்தையும் 6 ஆண்டுகளில் நிலையான கான்கிரீட் வீடுகளாக மாற்றுவது.

முதலமைச்சரின் சூரிய ஆற்றல் பசுமை வீடுகள் திட்டம்

  • அறிமுகம்: 2011
  • நோக்கம்: ஊரகப் பகுதியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு சூரிய ஆற்றல் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டித் தருதல்.

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (THAI)

  • தொடங்கப்பட்ட ஆண்டு: 2011-2012
  • நோக்கம்: குக்கிராமங்களில் குறைந்த பட்ச வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்.

Educational and Human Development Context

Historical Context of Social Reform

Economic Development Framework

Financial and Administrative Systems

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!