Skip to main content

சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் (Social and Economic Issues)

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

Social and Economic Issues in India

Digital Locker

The beta version of Digital Locker was launched on February 10, 2015. It allows Indian citizens to store all their certificates in a digital format.

சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் நலன் பாதிப்பு, சமூக பாதுகாப்பற்ற நிலை, சட்டங்களை மீறிய செயல்பாடுகள் சமூகப் பிரச்சினைகள் எனப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இவை முக்கிய தடைகளாக செயல்படுகின்றன.

முக்கிய பிரச்சினைகள் (Major Issues)​

சமூகப் பிரச்சினைகள் (Social Issues)​

பொருளாதாரப் பிரச்சினைகள் (Economic Issues)​

  • வேலையின்மை அதிகரிப்பு
  • தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானம் குறைவு
  • பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்

சுற்றுச்சூழல் பிரச்சினை (Environmental Issues)​

  • சுற்றுசூழல் மாசடைதல்
  • சுகாதாரக்கேடு ஏற்படுதல்
  • தொற்றுநோய்கள் எளிதில் பரவுதல்

கட்டுபடுத்த தீர்வுகள் (Control Measures and Solutions)​

  • மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும்.
  • கருத்தடை சாதனங்கள் மற்றும் மக்கள் தொகை வெடிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • அரசு ஊழியர், அரசியலில் பங்கேற்போர் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.
  • சுகாதார வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
  • பொது நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அரசியல் அமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் (Constitutional Safeguards)​

இந்திய அரசியலமைப்பின் முன்னுரை, அடிப்படை உரிமைகள், அரசுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் போன்றவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் நலம் (Women's Welfare)​

  • ஷரத்து - 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சம சட்ட பாதுகாப்பு.
  • ஷரத்து - 15(3): மகளிருக்கான சிறப்புச் சட்டங்கள் இயற்ற வழிவகை செய்கிறது.
  • ஷரத்து - 16: பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
  • ஷரத்து - 23: மனித சுரண்டலைத் தடுத்தல்.
  • ஷரத்து - 39A: இலவச சட்ட உதவி.
  • ஷரத்து - 42: பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மகப்பேறு விடுப்பளித்தல்.
  • ஷரத்து - 51(A)(e): இந்திய மக்கள் எல்லோரிடத்திலும் பொதுவான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். பெண்களுக்கு இழிவு உண்டாக்கும் செயல்களை அறவே கைவிட வேண்டும்.
  • ஷரத்து - 326: வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுதல்.

குழந்தைகள் நலன் (Child Welfare)​

  • ஷரத்து - 24: 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அபாயகரமான பணிகளில் அமர்த்தாமை.
  • ஷரத்து - 45: 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நலனை பாதுகாத்தல் மற்றும் கல்வி அளித்தல்.
  • ஷரத்து - 51(A)(K): 6-14 வயது குழந்தைகள் யாவருக்கும் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.

இளைஞர்கள் நலம் (Youth Welfare)​

  • ஷரத்து - 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சம சட்டப் பாதுகாப்பு.
  • ஷரத்து - 15: மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைத் தவிர்த்தல்.
  • ஷரத்து - 16: பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
  • ஷரத்து - 23: மனித சுரண்டலைத் தடுத்தல்.
  • ஷரத்து - 47: பொதுமக்களின் ஊட்டச்சத்து மற்றும் உயர்ந்த பட்ச வாழ்க்கை முறை மற்றும் பொது நலனை அதிகரிப்பது மாநில அரசின் கடமையாகும்.

தொழிலாளர் நலம் (Labour Welfare)​

  • ஷரத்து - 39: சமமான வேலைக்கு ஆண், பெண்ணுக்கு சமமான ஊதியம் மற்றும் மூல வளங்களை பகிர்ந்தளித்தல்.
  • ஷரத்து - 41: முதுமையில், நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்தல்.
  • ஷரத்து - 42: பெண்களுக்கு பேறுகால விடுப்பு மற்றும் சலுகைகளை அளிக்கிறது.
  • ஷரத்து - 43: கிராமப்புறங்களில் சுயதொழில், குடிசைத் தொழில் மற்றும் கூட்டுறவு முறையில் தொழிற் பயிற்சிகளை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது.
  • ஷரத்து - 43(A): தொழிற்சாலையின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கெடுத்தல்.

முக்கிய சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் (Key Social Security Acts)​

  • வரதட்சணை தடுப்புச் சட்டம் - 1961
  • பேறுகால ஓய்வூதிய சட்டம் - 1961
  • குடும்ப வன்முறை தடைச் சட்டம் - 2005
  • தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் - 1990
  • குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் - 1986
  • குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்கும் சட்டம் - 2005
  • கொத்தடிமை தடைச்சட்டம் - 1976
  • சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1955
  • தொழிற்சாலை சட்டம் - 1948
  • குறைந்தபட்ச ஊதியச் சட்டம் - 1948
  • தீண்டாமை ஒழிப்புச் சட்டம் - 1955
  • வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989
  • மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993

சிறுபான்மையினர் நலன் (Minority Welfare)​

  • தேசிய சிறுபான்மையினர் ஆணையம் - 1992-ல் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டது.

Core Economic and Social Issues​

Employment and Labour Welfare​

Welfare and Development Schemes​

Planning and Policy​

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!

© 2026 AspirantSync