பொதுத்துறை நிறுவனங்கள், முதலீடு மற்றும் மூலதன உருவாக்கம் (Public Sector Undertakings, Investment, and Capital Formation)
PSU Policy and Capital Formation in India
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் (Indian Public Sector Undertakings)
நிறுவனங்களில் 51%க்கும் மேல் அல்லது அதற்கு மேல் அரசு பங்கு வகிக்கும் நிறுவனங்களே பொதுத்துறை நிறுவனங்கள் எனப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது மத்திய அரசோ அல்லது மாநில அரசாகவோ இருக்கலாம். 1947க்கு முன்னர் பொதுத்துறை நிறுவனங்கள் என்பன இந்தியப் பொருளாதாரத்தில் இல்லவே இல்லை. ஒரு சில அரசு நிர்வகித்த நிறுவனங்களே இருந்தன. அவை இரயில்வே, தபால் மற்றும் தந்தி துறைமுகப் பொறுப்புக் கழகம், வளமான உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்கள் ஆகும்.
1956 ஆம் ஆண்டு தொழிற் கொள்கை தீர்மானம் மற்றும் சமத்துவ பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டது. பாதுகாப்பு, உயர் தொழில் நுட்பம் தேவையான உள்கட்டமைப்பு, அரசுத்துறை முதலீடு, அட்டவணைக்கு மறுபார்வை போன்ற காரணங்களால் பொதுத் துறைக்கு பெரும் விரிவாக்கம் ஏற்பட்டது. மறுபரிசீலனையில் பொது துறைக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது என்பது உணரப்பட்டது. தொடர்ந்து நொடிந்த நிலையில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை, தொழில் மற்றும் நிதி மறு சீரமைப்பு குழு (Board for Industrial and Financial Reconstruction - BIFR) முடிவுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
அரசுத் துறை நிறுவனக் குழுவுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் நிபுணத்துவ மேலாண்மை அளிக்க அரசு வாக்களித்துள்ளது.
மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா (Maharatna, Navratna, and Miniratna)
மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா தகுதி நிலையானது பொதுத்துறை நிறுவனங்களின் அரசுத் துறையால் (Department of Public Enterprises) அளிக்கப்படுகிறது. இந்த மதிப்பு மிக்க பட்டமானது அந்நிறுவனங்களுக்கு அதிகப் பட்ச தன்னாட்சியையும், உலகச் சந்தையில் போட்டியிடவும் உதவுகின்றது.
மகாரத்னா (Maharatna)
ஒரு நிறுவனம் மகாரத்னா நிலையைப் பெற செபியின் (SEBI) முறைப்படுத்தல்களுக்கு உட்பட்டு இந்தியப் பங்கு மாற்று சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும்.
- கடந்த மூன்றாண்டுகளில் சராசரி வருட வருமானம் ரூ.25,000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும்.
- கடந்த மூன்றாண்டுகளில் வரிக்குப் பின்பான சராசரி இலாபம் ரூ.5,000 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- நிறுவனத்தின் சராசரி நிகர மதிப்பு ரூ.15,000 கோடியாக இருக்க வேண்டும்.
- மகாரத்னா நிலையானது அந்நிறுவனங்கள் உலக சந்தையில் பெருநிறுவனமாக உயர உதவுகிறது.
உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் (Manufacturing and Service Enterprises)
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் (2006) (MSMED சட்டம் 2006) இதனை இரண்டாவது வகைப்படுத்துகிறது. இந்தியாவின் தொழில் கொள்கையில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
உற்பத்தி நிறுவனங்கள் (Manufacturing enterprises)
தொழிற்சாலைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1951ன் கீழ் முதல் பட்டியலில் உள்ள பொருட்களை தயாரிப்பு அல்லது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் எனப்படும். இவை தொழிற்கூடங்கள் மற்றும் இயந்திரங்களுக்கான முதலீட்டின் அளவைப் பொறுத்து வரையறுக்கப்படுகின்றன.
சேவை நிறுவனங்கள் (Service enterprises)
சேவை அளிக்கும் நிறுவனங்கள் சேவை நிறுவனங்கள் எனப்படும். இவை இயந்திரங்களுக்கான முதலீட்டின் படியே வரையறுக்கப்படுகின்றன.
அரசுடமை நிறுவனங்களின் வகைப்பாடு (Classification of Public Sector Enterprises)
- அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Enterprises)
- மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் (Central Public Sector Enterprises, CPSE)
- பொதுத்துறை வங்கிகள் (Public Sector Bank, PSB)
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE), முக்கியத்துவம் மற்றும் முக்கியம் குறைவான நிறுவனங்களாக இருவகைப்படுத்துகிறது.
முக்கிய நிறுவனங்கள்
- இராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள், உப கருவிகள், போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள்.
- அணுசக்தி (அணுசக்தி நிலையங்கள் நிர்வகிப்பது), கதிர்வீச்சின் பயன்பாடுகள், விவசாயம் மற்றும் மருத்துவத்தில் பயன்படும் ரேடியோ ஐசோடோப்புகள் ஆகியவை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- இரயில் போக்குவரத்து.
நிறுவனங்கள் சட்டம் 1956, பிரிவு 25யின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களில் கலை, அறிவியல், மதம், சேவை மற்றும் பிற பயனுள்ள வழிகளில் லாபம் நோக்கம் இன்றி செயல்படும் நிறுவனங்கள் லாபம் நோக்கம் அற்ற நிறுவனங்கள் (Non-Profit Companies) என்று அழைக்கப்படுகிறது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் (Objectives of Central Public Sector Enterprises)
இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளில், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவையாவன:
- உள்கட்டமைப்பை உருவாக்க மற்றும் மேம்படுத்த.
- வலிமையானத் தொழிற்சாலை கட்டமைப்பை ஏற்படுத்த (Industrial Base).
- பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான வளங்களை ஏற்படுத்துதல், அளவு ஒதுக்கீடு செய்தல்.
- நடுநிலையான பிராந்திய வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வைக் குறைத்தல்.
நலிவடைந்த நிறுவனங்கள் சட்டம் 1985 (SICA) (Sick Industrial Companies Act 1985)
நலிவடைந்த நிறுவனங்கள் எனப்படுபவை (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள்) ஏதாவது ஒரு நிதி ஆண்டின் இறுதியில் மொத்தம் அல்லது நிகர நஷ்டம் அந்நிறுவனத்தின் மொத்த முதலீடு மதிப்பை விட அதிகமாக இருக்கும் நிறுவனங்கள் ஆகும். மேலும், இவை ஏதாவது ஒரு நிதி ஆண்டின் இறுதியில் மொத்த நஷ்டம், அவற்றின் மொத்த மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் போது, அடுத்தடுத்த 4 நிதி ஆண்டுகளின் கடன் பெற்றவர்களிடம் திருப்பி கடன் செலுத்தாத நிலையில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.
SICA வின் நோக்கம்
நலிவடைந்த நிறுவனங்களை காலத்தே கண்டறிய வேண்டும். சிறந்த நிர்வாக குழுவை அமைத்து நலிவடைந்த நிறுவனங்களை விரைவாகக் காத்தல், மறுசீரமைப்புச் செய்தல் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப முடிவு செய்தல்.
- தொழிற்சாலைகள் மற்றும் நிதி மறுசீரமைப்பு அமைப்பு (BIFR): இச்சட்டப்படி நிதி அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் நிதி மறுசீரமைப்புக் குழு (Board for industrial and Financial Reconstruction - BIFR) - உயர்மட்டக் குழுவை ஏற்படுத்தி தொழிற்சாலையில் நலிவை சரி செய்கிறது.
- தொழிற்சாலைகள் மற்றும் நிதி மறுசீரமைப்பு மேல்முறையீட்டு அமைப்பு (AAIFR): தொழிற்சாலை மற்றும் நிதி மறுசீரமைப்பு மேல்முறையீடு ஆணையம் (Appellate Authority for industrial and Financial Reconstruction - AAIFR) - BIFRன் நடவடிக்கைகளை மேல்முறையீடு செய்யும் அமைப்பு ஆகும்.
திரு. பாலகிருஷ்ணா இராடி குழு 2001 (Sri Balakrishna Eradi Panel 2001)
1999ல் உயர்மட்ட குழு வி.பாலகிருஷ்ணா இராடி தலைமையில் உருவாக்கப்பட்டது. நலிவடைந்த நிறுவனங்களை மூடுவதற்கான தற்போதைய சட்டங்களை இக்குழு ஆய்வு செய்யும்.
முக்கிய பரிந்துரைகள்
- SICA வை திரும்பப் பெற வேண்டும்.
- தேசிய நிறுவனங்களுக்கான சட்டத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். இது நலிவடைந்த நிறுவனங்களின் சீரமைப்பு அமைப்பின் பணிகளையும் செய்ய வேண்டும்.
- நிறுவனங்களைக் கலைக்க நிறுவனங்களின் சட்டக் குழு (Company Law Board) உயர்நீதிமன்றங்களாக செயல்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனைக் கொள்கை (Disinvestment Policy)
தேசிய வளங்களை முறையான வழிகளில் பயன்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்கிடவும் பொதுத்துறை அரசின் முதலீடு குறைப்பு உதவுகிறது.
Disinvestment சிறப்பியல்புகள்
- பொதுத்துறை நிறுவனங்களை நவீனப் படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்.
- புதிய சொத்துக்களை உருவாக்குதல்.
- வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
- பொதுமக்களின் கடன்களை பெருக்காமல் இருத்தல்.
ரெங்கராஜன் குழு அறிக்கை (1993)
அறிக்கையானது அதிக அளவில் அரசின் பங்களிப்பை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. 49 சதவிகிதம் வரை மட்டுமே அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சில நேரங்களில் 74 சதவிகிதம் வரையும் சில நிலைகளில் 100 சதவிகிதம் வரையும் அரசின் பங்களிப்பை குறைக்க வேண்டும்.
6 அட்டவணை நிறுவனங்களில் மட்டுமே 51% அல்லது அதற்குமேல் அரசின் பங்களிப்பு இருக்கவேண்டும். அவையாவன:
- நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
- கனிம எண்ணெய்
- ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள்
- அணுசக்தி
- கதிர் இயக்க கனிமங்கள்
- இரயில்வே
பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை ஆணையம் (Disinvestment Commission)
1996-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1999 ஆண்டு 58 பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பை இக்குழு பரிந்துரைத்தது. இப்பரிந்துரையானது, பொது விற்பனையிலிருந்து வணிக விற்பனையாக, நிர்வாகத்தை மாற்றம் செய்யவும் பரிந்துரைத்தது.
தேசிய முதலீட்டு நிதி (National Investment Fund - NIF)
2005 ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அரசின் முதலீடானது தொழில் நுட்ப வல்லுநர்களால் நிர்வகிக்கப்படும். இது நிதியினை அழித்து விடாமல் பாதுகாக்கும். இது ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய நிதிக்கு (Consolidated Fund of India) வெளியில் வைத்து நிர்வகிக்கப்படும்.
தேசிய உற்பத்தி கொள்கை 2011 (National Manufacturing Policy - 2011)
நோக்கங்கள்
- உற்பத்தி துறையின் பங்களிப்பை 2022-ம் ஆண்டு 25 சதவிகிதமாக உயர்த்துவது.
- 2022-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் வேலை வாய்ப்பை உருவாக்குவது.
- உலக அளவில் போட்டியை சமாளிப்பது, உள்நாட்டில் மதிப்பு கூட்டுதல், தொழில்நுட்பம் வளர்த்தல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வளர்ச்சியை அடைதல்.
மூலதன உருவாக்கம் (Capital Formation)
ஒரு நாட்டில் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தையும் நுகர்விற்கு பயன்படுத்தாமல் நீர்பாசனங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை உள்ளிட்ட முதலீடு உருவாக்கும் துறைகளில் நெறிப்படுத்துதல் மூலதன உருவாக்கம் எனப்படும்.
மூலதன உருவாக்கும் மூலங்கள்
- நிறுவனங்கள்: வங்கிகள் (SBI, ICICI, IDBI), சீட்டு நிறுவனங்கள் (ஸ்ரீராம் சிட்பண்ட்), காப்பீடு நிறுவனங்கள் (LIC, GIC), கூட்டுறவு வங்கிகள்.
- தனிநபர் சேமிப்பு: சமூகத்தில் நிலக்கிழார், மருத்துவர்கள், வழக்கறிஞர் போன்றோர் சேமிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
- அரசுத் துறை (ம) பொதுத் துறை நிறுவனங்கள்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT), தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO).
குறைவான மூல தன உருவாக்க காரணங்கள்
- வறுமை நச்சு சூழல் மற்றும் வேலையின்மை
- குறைவான உற்பத்தித்திறன்
- வளங்கள் சரியாகப் பயன்படுத்தாமை
- அடிப்படைக் கட்டமைப்பு குறைவு
- மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் வரிச்சுமை
- தலாவருமானம் / நாட்டு வருமானம் குறைவு
- சேமிப்புக் குறைவு மற்றும் சேமிப்பு நிறுவனங்களின் பற்றாக்குறை
- எழுத்தறிவின்மை, தொழில் முனைவோர் இன்மை, தொழில்நுட்ப அறிவின்மை
1991 ஆம் ஆண்டின் புதிய தொழில் கொள்கை (New Industrial Policy of 1991)
1991 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட புதிய தொழில் கொள்கையின் முக்கிய நோக்கம் தொழில் துறையில் போட்டியை ஊக்குவித்தலின் மூலம் தனியார் நிறுவனங்களை அதிக அளவு உற்பத்தியில் ஈடுபடுத்துவதாகும். இது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (LPG) ஆகியவற்றை உள்ளடக்கியது.
சிறப்பு சீர்திருத்தங்கள்
- பொதுத் துறைக்கென தொழில்துறையில் ஒதுக்கப்பட்ட பகுதிகள் 17ல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டது. தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் போன்ற துறைகள் தனியாருக்கு திறந்து விடப்பட்டன.
- பங்கு விலக்கல் மூலம் பொதுத்துறை வளங்களைப் பெருக்குவதுடன், பொதுத் துறை நிறுவனங்களில் தனியார் பங்கேற்பையும் ஊக்குவித்தல்.
- நலிந்த தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், மறுசீரமைக்கவும் தொழில் மற்றும் நிதி மறு கட்டமைப்புக் குழுவிற்கு (BIFR) பரிந்துரை செய்தல்.
- திறன் பெற்ற பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் புதுப்பித்து புதிய சட்டதிட்டங்கள் மூலம் அதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல்.
- பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு முதலீடுகளை திரும்பப் பெறுவதன் காரணம், அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதே ஆகும்.
- நன்றாக செயல்படக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்றவைகளை மூடிவிடுவது.
- 1998-99 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் அகற்றப்பட்டன. மூன்று துறைகள் மட்டுமே (அணுசக்தி, அணுசக்தி கனிமங்கள், ரயில்வே) பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்டு மற்ற அனைத்தும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கு ஒதுக்கப்பட்டது.
- முதலீடு கலைப்பு துறை (Disinvestment) பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதே ஆகும்.
Related Articles
Industrial Development and Policy
- Industrial Policy India - Industrial policies and PSU development framework
- Economic Growth Development National Income - PSU contribution to economic growth
- Indian Economy Planning - Role of PSUs in five year plans
Investment and Capital Formation
- Finance Planning Development Bodies - Financial institutions supporting PSUs
- Energy Sector Development - PSU role in energy sector
- Economic Growth Development National Income - Capital formation and investment patterns
Employment and Social Development
- Unemployment Employment Schemes - PSU contribution to employment generation
- Social Economic Issues - PSU role in addressing social challenges
- Public Health Welfare Schemes - PSU involvement in welfare delivery
Modern Economic Framework
- NITI Aayog Other Schemes - Modern planning and PSU reforms
- Goods Services Tax - Tax reforms affecting PSUs