சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் (Social and Economic Issues)
Social and Economic Issues in India
Digital Locker
The beta version of Digital Locker was launched on February 10, 2015. It allows Indian citizens to store all their certificates in a digital format.
சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் நலன் பாதிப்பு, சமூக பாதுகாப்பற்ற நிலை, சட்டங்களை மீறிய செயல்பாடுகள் சமூகப் பிரச்சினைகள் எனப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இவை முக்கிய தடைகளாக செயல்படுகின்றன.
முக்கிய பிரச்சினைகள் (Major Issues)
சமூகப் பிரச்சினைகள் (Social Issues)
- உணவு பற்றாக்குறை
- குடியிருக்க இடவசதியின்மை
- கல்வியறிவின்மை
- வேலையின்மை
- வறுமை
பொருளாதாரப் பிரச்சினைகள் (Economic Issues)
- வேலையின்மை அதிகரிப்பு
- தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானம் குறைவு
- பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்
சுற்றுச்சூழல் பிரச்சினை (Environmental Issues)
- சுற்றுசூழல் மாசடைதல்
- சுகாதாரக்கேடு ஏற்படுதல்
- தொற்றுநோய்கள் எளிதில் பரவுதல்
கட்டுபடுத்த தீர்வுகள் (Control Measures and Solutions)
- மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும்.
- கருத்தடை சாதனங்கள் மற்றும் மக்கள் தொகை வெடிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- அரசு ஊழியர், அரசியலில் பங்கேற்போர் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.
- சுகாதார வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
- பொது நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசியல் அமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் (Constitutional Safeguards)
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை, அடிப்படை உரிமைகள், அரசுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் போன்றவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் நலம் (Women's Welfare)
- ஷரத்து - 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சம சட்ட பாதுகாப்பு.
- ஷரத்து - 15(3): மகளிருக்கான சிறப்புச் சட்டங்கள் இயற்ற வழிவகை செய்கிறது.
- ஷரத்து - 16: பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
- ஷரத்து - 23: மனித சுரண்டலைத் தடுத்தல்.
- ஷரத்து - 39A: இலவச சட்ட உதவி.
- ஷரத்து - 42: பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மகப்பேறு விடுப்பளித்தல்.
- ஷரத்து - 51(A)(e): இந்திய மக்கள் எல்லோரிடத்திலும் பொதுவான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். பெண்களுக்கு இழிவு உண்டாக்கும் செயல்களை அறவே கைவிட வேண்டும்.
- ஷரத்து - 326: வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுதல்.
குழந்தைகள் நலன் (Child Welfare)
- ஷரத்து - 24: 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அபாயகரமான பணிகளில் அமர்த்தாமை.
- ஷரத்து - 45: 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நலனை பாதுகாத்தல் மற்றும் கல்வி அளித்தல்.
- ஷரத்து - 51(A)(K): 6-14 வயது குழந்தைகள் யாவருக்கும் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.
இளைஞர்கள் நலம் (Youth Welfare)
- ஷரத்து - 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சம சட்டப் பாதுகாப்பு.
- ஷரத்து - 15: மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைத் தவிர்த்தல்.
- ஷரத்து - 16: பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
- ஷரத்து - 23: மனித சுரண்டலைத் தடுத்தல்.
- ஷரத்து - 47: பொதுமக்களின் ஊட்டச்சத்து மற்றும் உயர்ந்த பட்ச வாழ்க்கை முறை மற்றும் பொது நலனை அதிகரிப்பது மாநில அரசின் கடமையாகும்.
தொழிலாளர் நலம் (Labour Welfare)
- ஷரத்து - 39: சமமான வேலைக்கு ஆண், பெண்ணுக்கு சமமான ஊதியம் மற்றும் மூல வளங்களை பகிர்ந்தளித்தல்.
- ஷரத்து - 41: முதுமையில், நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்தல்.
- ஷரத்து - 42: பெண்களுக்கு பேறுகால விடுப்பு மற்றும் சலுகைகளை அளிக்கிறது.
- ஷரத்து - 43: கிராமப்புறங்களில் சுயதொழில், குடிசைத் தொழில் மற்றும் கூட்டுறவு முறையில் தொழிற் பயிற்சிகளை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது.
- ஷரத்து - 43(A): தொழிற்சாலையின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கெடுத்தல்.
முக்கிய சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் (Key Social Security Acts)
- வரதட்சணை தடுப்புச் சட்டம் - 1961
- பேறுகால ஓய்வூதிய சட்டம் - 1961
- குடும்ப வன்முறை தடைச் சட்டம் - 2005
- தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் - 1990
- குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் - 1986
- குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்கும் சட்டம் - 2005
- கொத்தடிமை தடைச்சட்டம் - 1976
- சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1955
- தொழிற்சாலை சட்டம் - 1948
- குறைந்தபட்ச ஊதியச் சட்டம் - 1948
- தீண்டாமை ஒழிப்புச் சட்டம் - 1955
- வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989
- மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993
சிறுபான்மையினர் நலன் (Minority Welfare)
- தேசிய சிறுபான்மையினர் ஆணையம் - 1992-ல் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டது.
Related Articles
Core Economic and Social Issues
- Economic Growth Development National Income - Social factors affecting economic growth
- Poverty Alleviation Programs India - Targeted interventions for social issues
- Population Policies Census - Demographic challenges and social policy
Employment and Labour Welfare
- Unemployment Employment Schemes - Employment as solution to social issues
- Industrial Policy India - Industrial development and labour welfare
- Public Sector Undertakings Capital Formation - PSU role in social development
Welfare and Development Schemes
- Welfare Schemes Poverty Alleviation - Government welfare interventions
- Public Health Welfare Schemes - Health as social and economic issue
- Education Literacy Schemes - Education for social transformation
Planning and Policy
- Indian Economy Planning - Social objectives in economic planning
- NITI Aayog Other Schemes - Modern approach to social and economic issues