Skip to main content

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொல்லின் வகையறிதல், முக்கியமான பொதுத் தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டித் தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளைப் படித்துப் பயன்பெற வாழ்த்துகிறோம்.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑
  1. பெயர்ச்சொல்: பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும்.

  2. வினைச்சொல்: வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல் எனப்படும்.

  3. இடைச்சொல்: பெயர்ச்சொல், வினைச்சொற்களை இடமாகக் கொண்டு வருவதையே இடைச்சொல் என்றழைக்கிறோம். வேற்றுமை உருபுகள், உவம உருபுகள், சுட்டு எழுத்துக்கள், வினா எழுத்துக்கள் மற்றும் ஏகாரம், உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.

    எடுத்துக்காட்டு:

    • நூலைப் படித்தான் - (வேற்றுமை உருபு)
    • மக்கள் மகிழ்ந்தனர் - அர் (விகுதி)
    • தேன் போன்ற மொழி - போன்ற (உவமஉருபு)
    • அவ்வீடு இது - அ, இ (சுட்டெழுத்துகள்)
    • உணவும் உடையும் - உம் (உம்மை)
    • படித்தாயா? - ஆ (வினா எழுத்து)
    • கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) - கழி
  4. உரிச்சொல்: பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.

    எடுத்துக்காட்டு:

    • மாநகர், மாமன்னர்
    • சாலப் பெரிது (மிகப்பெரிது) - சால
    • உறு பொருள் (மிகுந்த பொருள்) - உறு
    • தவச்சிறிது (மிகவும் சிறிது) - தவ
    • நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) - நனி
    • இடும்பை கூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) - கூர்
    • கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) - கழி

    மேற்கண்ட சொற்றொடர்களில் உள்ள சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் சொற்கள் "மிகுதி” என்னும் குணத்தை உணர்த்திய பெயர், வினைகளுக்கு உரிமை பூண்டு வந்துள்ளன. எனவே இவை உரிச்சொல்கள் எனப்படுகின்றன. சால, உறு, தவ, நனி, கூர், கழி என்பன "மிகுதி" என்னும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன. எனவே இவை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் ஆகும்.

உரிச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகள்

  • கடிநிகர் - காவல் உடைய நகரம்

  • கடிவேல் - கூர்மையான வேல்

  • கடிமுரசு - ஆர்க்கும் முரசு

  • கடி காற்று - மிகுதியான காற்று

  • கடி மலர் - மணம் உள்ள மலர்

  • மாநகர் - உரிச்சொற்றொடர்

  • தடந்தேள் - உரிச்சொற்றொடர்

  • மாபத்தினி - உரிச்சொற்றொடர்

  • கடுமா - உரிச்சொற்றொடர்

  • மல்லல் நெடுமதில் - உரிச்சொற்றொடர்

  • இரு நிலம் - உரிச்சொற்றொடர்

  • தடக்கை - உரிச்சொற்றொடர்

  • நனி விதைத்து - உரிச்சொற்றொடர்

  • உறுவேனில் - உரிச்சொற்றொடர்

  • மல்லல் அம் குருத்து - உரிச்சொற்றொடர்

  • நனிகடிது - உரிச்சொல் தொடர்கள்

  • நளிர்கடல் - உரிச்சொல் தொடர்கள்

  • நனி மனம் - பெயர் உரிச்சொல்

  • மல்லல் - 'வளப்பம்’ என்னும் பொருளைத் தரும் உரிச்சொல்

  • விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்

  • வயமா - உரிச்சொற்றொடர்

  • தடங்கண் - உரிச்சொற்றொடர்

  • கடிநிறை - உரிச்சொற்றொடர்

  • தடம் தோள் - உரிச்சொல்

பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்

ஒரு தொடரில் 'கடி' என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, விளைவு, மிகுதி, மணம் என்னும் பல பொருள்களை உணர்த்தியுள்ளது. எனவே 'கடி' என்பது பலகுணம் தழுவிய ஒரு உரிச்சொல்லாகும்.

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!