Skip to main content

ஓரெழுத்து ஒரு மொழி

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகளில் ஒன்று, ஓர் எழுத்தே தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவது. இவ்வாறு ஓர் எழுத்து, ஒரு சொல்லாகப் பொருள் தருவதே ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும்.

நன்னூல் என்னும் இலக்கண நூலின்படி, தமிழ் மொழியில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன. அவற்றுள் நொ, து ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே குறில்; மற்ற 40 எழுத்துகளும் நெடில் ஆகும்.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

ஓரெழுத்து ஒரு மொழிகள் (42)​

கீழே 42 ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

எழுத்துபொருள்எழுத்துபொருள்
ஆபசுதாகொடு
ஈகொடு, பறக்கும் பூச்சிதீநெருப்பு
ஊஇறைச்சி, உணவுதூதூய்மை
ஏஅம்புதேகடவுள்
ஐதலைவன், அழகுதைதைத்தல், தமிழ் மாதம்
ஓமதகுநீர் தாங்கும் பலகைநாநாக்கு
காசோலை, காப்பாற்றுநீமுன்னிலை ஒருமை
கூபூமி, கூவுதல்நேஅன்பு
கைஉறுப்பு, ஒழுக்கம்நைஇகழ்ச்சி
கோஅரசன், தலைவன்நோநோய், வறுமை
சாஇறந்துபோ, சாதல்பாபாட்டு, பாடல்
சீஇகழ்ச்சி, சீத்தல்பூமலர்
சேஉயர்வு, எருதுபேமேகம், நுரை
சோமதில்பைபை, பசுமை
மாமாமரம், பெரியபோசெல்
மீவான், மேலேவாஅழைத்தல்
மூமூப்பு, மூன்றுவீமலர், அழிவு
மேஅன்பு, மேன்மைவைபுல், வைத்தல்
மைஅஞ்சனம், கருமைவௌகௌவுதல், கைப்பற்றுதல்
மோமுகர்தல்யாஒரு வகை மரம், அகலம்
நொநோய், துன்பம்துஉண், பருகு

தேர்வு நோக்கில் முக்கியத்துவம்​

போட்டித் தேர்வுகளில், குறிப்பாக TNPSC தேர்வுகளின் பொதுத் தமிழ் பகுதியில், ‘ஓரெழுத்து ஒரு மொழி’ தலைப்பு மிக முக்கியமானது. இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் நேரடியாகப் இடம்பெறுவது வழக்கம். எனவே, இந்த 42 சொற்களையும் அவற்றின் பொருள்களையும் மனனம் செய்வது, தேர்வில் எளிதாக மதிப்பெண்களைப் பெற உதவும்.

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!