ஓரெழுத்து ஒரு மொழி
தமிழ் மொழியின் தனிச்சிறப்புகளில் ஒன்று, ஓர் எழுத்தே தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவது. இவ்வாறு ஓர் எழுத்து, ஒரு சொல்லாகப் பொருள் தருவதே ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும்.
நன்னூல் என்னும் இலக்கண நூலின்படி, தமிழ் மொழியில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன. அவற்றுள் நொ
, து
ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே குறில்; மற்ற 40 எழுத்துகளும் நெடில் ஆகும்.
ஓரெழுத்து ஒரு மொழிகள் (42)
கீழே 42 ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
எழுத்து | பொருள் | எழுத்து | பொருள் |
---|---|---|---|
ஆ | பசு | தா | கொடு |
ஈ | கொடு, பறக்கும் பூச்சி | தீ | நெருப்பு |
ஊ | இறைச்சி, உணவு | தூ | தூய்மை |
ஏ | அம்பு | தே | கடவுள் |
ஐ | தலைவன், அழகு | தை | தைத்தல், தமிழ் மாதம் |
ஓ | மதகுநீர் தாங்கும் பலகை | நா | நாக்கு |
கா | சோலை, காப்பாற்று | நீ | முன்னிலை ஒருமை |
கூ | பூமி, கூவுதல் | நே | அன்பு |
கை | உறுப்பு, ஒழுக்கம் | நை | இகழ்ச்சி |
கோ | அரசன், தலைவன் | நோ | நோய், வறுமை |
சா | இறந்துபோ, சாதல் | பா | பாட்டு, பாடல் |
சீ | இகழ்ச்சி, சீத்தல் | பூ | மலர் |
சே | உயர்வு, எருது | பே | மேகம், நுரை |
சோ | மதில் | பை | பை, பசுமை |
மா | மாமரம், பெரிய | போ | செல் |
மீ | வான், மேலே | வா | அழைத்தல் |
மூ | மூப்பு, மூன்று | வீ | மலர், அழிவு |
மே | அன்பு, மேன்மை | வை | புல், வைத்தல் |
மை | அஞ்சனம், கருமை | வௌ | கௌவுதல், கைப்பற்றுதல் |
மோ | முகர்தல் | யா | ஒரு வகை மரம், அகலம் |
நொ | நோய், துன்பம் | து | உண், பருகு |
தேர்வு நோக்கில் முக்கியத்துவம்
போட்டித் தேர்வுகளில், குறிப்பாக TNPSC தேர்வுகளின் பொதுத் தமிழ் பகுதியில், ‘ஓரெழுத்து ஒரு மொழி’ தலைப்பு மிக முக்கியமானது. இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் நேரடியாகப் இடம்பெறுவது வழக்கம். எனவே, இந்த 42 சொற்களையும் அவற்றின் பொருள்களையும் மனனம் செய்வது, தேர்வில் எளிதாக மதிப்பெண்களைப் பெற உதவும்.