அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
note
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள், முக்கியமான பொதுத் தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும்.
- அகத்தியர்: குறுமுனி
- இளம்பூரணர்: உரையாசிரியர், உரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
- நாச்சினார்க்கினியர்: உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்
- கபிலர்: புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்
- திருவள்ளுவர்: முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்
- திருஞானசம்பந்தர்: தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை
- திருநாவுக்கரசர்: அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்
- சுந்தரர்: வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்
- மாணிக்கவாசகர்: அழுது அடியடைந்த அன்பர்
- சேக்கிழார்: அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார்
- பெரியாழ்வார்: பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்
- ஆண்டாள்: சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை
- நம்மாழ்வார்: சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன்
- குலசேகராழ்வார்: கூடலர்கோன், கொல்லிகூவலன்
- திருமங்கையாழ்வார்: பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்
- திருமழிசையாழ்வார்: திராவிட ஆச்சாரியார்
- தொண்டரடிப் பொடியாழ்வார்: விப்பிரநாராயணன்
- நம்பியாண்டார் நம்பி: தமிழ் வியாசர்
- ஔவையார்: தமிழ் மூதாட்டி
- திருமூலர்: முதல் சித்தர்
- கம்பர்: கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
- சீத்தலைச் சாத்தனார்: தண்டமிழாசான் சாத்தன், நன்னூற் புலவன்
- திருத்தக்கத் தேவர்: தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
- புகழேந்தி: வெண்பாவிற் புகழேந்தி
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை: மகாவித்வான்
- திரிகூட ராசப்பக் கவிராயர்: திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை: நீதியரசர்
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்: அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
- இராமலிங்க அடிகளார்: வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள், சன்மார்க்கக்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை
- பாரதிதாசன்: புரட்சிக் கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர்
- உ.வே. சாமிநாதய்யர்: தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய
- பாரதியார்: மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, விடுதலைக் கவி, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை
- சிவப்பிரகாசர்: கற்பனைக் களஞ்சியம்
- வெ. ராமலிங்கம் பிள்ளை: நாமக்கல் கவிஞர்
- பெருஞ்சித்திரனார்: பாவலரேறு
- அழ. வள்ளியப்பா: குழந்தைக் கவிஞர்
- திரு.வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க.): தமிழ்த்தென்றல்
- புதுமைப்பித்தன்: சிறுகதை மன்னன்
- சோமசுந்தர பாரதியார்: நாவலர்
- இராபர்ட்-டி-நொபிலி: தத்துவ போதகர்
- வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி: பரிதிமாற் கலைஞர்
- வால்டர் ஸ்காட்: உலகச் சிறுகதையின் தந்தை
- இராசா. அண்ணாமலைச் செட்டியார்: தனித்தமிழ் இசைக் காவலர்
- டி.கே.சி.: ரசிகமணி
- தேவநேயப் பாவாணர்: மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர் (174 சிறப்புப் பெயர்கள்)
- உடுமலை நாராயண கவி: பகுத்தறிவுக் கவிராயர்
- அஞ்சலையம்மாள்: தென்நாட்டின் ஜான்சிராணி
- அம்புஜத்தம்மாள்: காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
- கந்தசாமி: நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
- சங்கரதாசு சுவாமிகள்: நாடகத் தமிழ் உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
- வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்: பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி
- பரிதிமாற்கலைஞர்: திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்
- பம்மல் சம்பந்தனார்: தமிழ் நாடகத் தந்தை
- ஜெயகாந்தன்: தமிழ்நாட்டின் மாப்பசான்
- வாணிதாசன்: தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி
- அநுத்தமா: தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
- கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை: முத்தமிழ்க் காவலர்
- டி.கே. சண்முகம் சகோதரர்கள்: தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை
- இரா.பி. சேதுப்பிள்ளை: சொல்லின் செல்வர்
- வ.உ. சிதம்பரனார்: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
- ஈ.வெ.ரா. ராமசாமி: பெரியார், பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர்
- இராஜாஜி: மூதறிஞர்
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்: காந்தியக்கவிஞர்
- காமராஜர்: பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்
- அருணகிரிநாதர்: சந்தக்கவி
- பொ.வே. சோமசுந்தரனார்: பெருமழைப்புலவர்
- மு. கதிரேசச் செட்டியார்: மகோமகோபாத்தியாய, பண்டிதமணி
- கருமுத்து தியாகராசச்செட்டியார்: கலைத்தந்தை
- ஆறுமுக நாவலர்: பதிப்புச் செம்மல்
- சி.பா. ஆதித்தனார்: தமிழர் தந்தை
- கா. அப்பாத்துரையார்: பன்மொழிப்புலவர்
- பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்: பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
- ம.பொ. சிவஞானம்: சிலம்புச் செல்வர்
- சுந்தர ராமசாமி: பசுவய்யா
- மாதவய்யர்: கோணக் கோபாலன்
- வேங்கடரமணி: தென்னாட்டுத் தாகூர்
- சுரதா: உவமைக் கவிஞர்
- கண்ணதாசன்: காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி, ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்
- கல்கி: தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
- சுஜாதா: தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
- கி.வா. ஜெகநாதன்: தமிழறிஞர்
- அண்ணாதுரை: பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா
- வி. முனுசாமி: திருக்குறளார்
- பாலசுப்ரமணியம்: சிற்பி
- நா. காமராசன்: வானம்பாடிக் கவிஞர்
- ஸ்ரீவேணுகோபாலன்: புஷ்பா தங்கதுரை
- ஆத்மாநாம்: எஸ்.கே. மதுசூதன்
- என். எஸ். கிருஷ்ணன்: கலைவாணர்
- எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்): மக்கள் திலகம், புரட்சி நடிகர், இதயக்கனி
- மு. கருணாநிதி: கலைஞர்
- எம்.ஆர். ராதா: நடிகவேள்
- எம்.எஸ். சுப்புலட்சுமி: இசைக்குயில்
- செய்குத்தம்பி பாவலர்: கற்பனைக் களஞ்சியம்
- வேதரத்தினம் பிள்ளை: சர்தார்
- அண்ணாமலை ரெட்டியார்: அண்ணாமலை கவிராஜன்
- திரு.வி.க.: தமிழ் உரைநடையின் தந்தை
- வைரமுத்து: கவிப்பேரரசு
- வா.செ. குழந்தைசாமி: குலோத்துங்கன்
- அப்துல் ரகுமான்: கவிக்கோ