சொல்லும் பொருளும் அறிதல்
தமிழ் இலக்கியங்களையும், உரைநடைகளையும் பிழையின்றிப் புரிந்துகொள்ள, சொற்களின் சரியான பொருளை அறிவது இன்றியமையாதது. போட்டித் தேர்வுகளில், குறிப்பாக TNPSC பொதுத் தமிழ் பகுதியில், ‘சொல்லும் பொருளும்’ தலைப்பில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப்புத்தகங்களில் உள்ள முக்கியச் சொற்களும் அவற்றின் பொருள்களும் கீழே விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑
சொற்களும் பொருள்களும் (விரிவான பட்டியல்)
பகுதி 1
சொல் | பொருள் | சொல் | பொருள் |
---|---|---|---|
நிருமித்த | உருவாக்கிய | சமூகம் | மக்கள் குழு |
விளைவு | விளைச்சல் | அசதி | சோர்வு |
ஆழிப்பெருக்கு | கடல்கோள் | மேதினி | உலகம் |
ஊழி | நீண்டதொரு காலப்பகுதி | உள்ளப்பூட்டு | அறிய விரும்பாமை |
திங்கள் | நிலவு | கொங்கு | மகரந்தம் |
அலர் | மலர்தல் | திகிரி | ஆணைச் சக்கரம் |
பொற்கோட்டு | பொன்மயமான சிகரத்தில் | நாமநீர் | அச்சம் தரும் கடல் |
அலி | கருணை | கார் | மழை, மேகம் |
பார் | உலகம் | துன்று | அடர்ந்த |
ஆன்ற | உயர்ந்த | கலிங்கம் | ஆடை |
செஞ்ஞாயிறு | கதிரவன் | வையம் | உலகம் |
மல்லெடுத்த | வலிமை பெற்ற | கலன் | அணிகலன் |
சமர் | போர் | முற்றம் | வீட்டு முன் இடம் |
நல்கும் | தரும் | தடம் | அடையாளம் |
கழனி | வயல் | அகம்பாவம் | செருக்கு |
மறம் | வீரம் | பண் | இசை |
எக்களிப்பு | பெருமகிழ்ச்சி | கனகச்சுனை | பொன்வண்ண நீர்நிலை |
கலம் | கப்பல் | மதவேழம் | மதயானை |
ஆழி | கடல் | முரலும் | முழங்கும் |
புணரி | கடல் | பழவிறல் | முதிர்ந்த வலிமை |
தழை | செடி | கயம் | நீர்நிலை |
தார் | மாலை | புறவி | குதிரை |
பகுதி 2
சொல் | பொருள் | சொல் | பொருள் |
---|---|---|---|
நிரந்தரம் | காலம் முழுமையும் | வண்மொழி | வளமிக்க மொழி |
வைப்பு | நிலப்பகுதி | இசை | புகழ் |
சூழ்கலி | சூழ்ந்துள்ள அறியாமை இருள் | தொல்லை | பழமை, துன்பம் |
விசும்பு | வானம் | மரபு | வழக்கம் |
மயக்கம் | கலவை | திரிதல் | மாறுபடுதல் |
இருதிணை | உயர்திணை, அஃறிணை | செய்யுள் | பாட்டு |
வழாஅமை | தவறாமை | தழாஅல் | தழுவுதல் (பயன்படுத்துதல்) |
ஐம்பால் | ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் | தூண்டுதல் | ஆர்வம் கொள்ளுதல் |
பகுதி 3
சொல் | பொருள் | சொல் | பொருள் |
---|---|---|---|
பயிலுதல் | படித்தல் | ஈரம் | இரக்கம் |
நாணம் | வெட்கம் | முழவு | இசைக்கருவி |
செஞ்சொல் | திருந்திய சொல் | நன்செய் | நீர்வளம் மிக்க நிலம் |
புன்செய் | குறைந்த நீரால் பயிர் விளையும் நிலம் | வல்லைப்பாட்டு | நெல் குத்தும்போது பாடும் பாட்டு |
முகில் | மேகம் | கெடிகலங்கி | மிக வருந்தி |
சம்பிரமுடன் | முறையாக | சேகரம் | கூட்டம் |
காங்கேய நாடு | கொங்கு மண்டலத்தின் 24 நாடுகள் | விண்ணம் | சேதம் |
வாகு | சரியாக | காலன் | எமன் |
மெத்த | மிகவும் | தீர்வன் | நீக்குபவன் |
உவகை | மகிழ்ச்சி | விறல் | வலிமை |
பார் | உலகம் | களிறு | ஆண் யானை |
பிணி | நோய் | பிளிறு | யானை முழக்கம் |
ஓர்தல் | நல்லறிவு | கரவா | மறைக்காமல் |
பேணி | பாதுகாத்து | நிழல் | கருணை, அருள் |
பகுதி 4
சொல் | பொருள் | சொல் | பொருள் |
---|---|---|---|
கந்தம் | மணம் | மிசை | மேல் |
விசனம் | கவலை | எழில் | அழகு |
துயர் | துன்பம் | மா | வண்டு |
மது | தேன் | வாவி | பொய்கை |
வளர் முதல் | நெற்பயிர் | தரளம் | முத்து |
பணிலம் | சங்கு | வரம்பு | வரப்பு |
கழை | கரும்பு | கா | சோலை |
குழை | சிறு கிளை | அரும்பு | மலர் மொட்டு |
மாடு | பக்கம் | நெருங்கு வளை | நெருங்குகின்ற சங்குகள் |
கோடு | குளக்கரை | ஆடும் | நீராடும் |
மேதி | எருமை | துதைந்து எழும் | கலக்கி எழும் |
கன்னி வாளை | இளமையான வாளை மீன் | சூடு | நெல் அரிக்கட்டு |
சுரிவளை | சங்கு | வேரி | தேன் |
பகடு | எருமைக்கடா | பாண்டில் | வட்டம் |
சிமயம் | மலையுச்சி | நாழிகேரம் | தென்னை |
நரந்தம் | நாரத்தை | கோளி | அரசமரம் |
சாலம் | ஆச்சா மரம் | தமாலம் | பச்சிலை மரம் |
இரும்போந்து | பருத்த பனைமரம் | சந்து | சந்தன மரம் |
நாகம் | நாகமரம் | காஞ்சி | ஆற்றுப் பூவரசு |
யாக்கை | உடல் | புணரியோர் | தந்தவர் |
புன்புலம் | புல்லிய நிலம் | தாட்கு | முயற்சி, ஆளுமை |
தள்ளாதோர் | குறைவில்லாதவர் | நோன்மை | வலிமை |
கேண்மை | நட்பு | வேளாண்மை | உதவி செய்தல் |
பகுதி 5
சொல் | பொருள் | சொல் | பொருள் |
---|---|---|---|
கடறு | காடு | பொலி | தானியக்குவியல் |
உழை | ஒரு வகை மான் | வாய்வெரீஇ | சோர்வால் வாய் குழறுதல் |
குருளை | குட்டி | இனைந்து | துன்புறுதல் |
உயங்குதல் | வருந்துதல் | படிக்குஉற | நிலத்தில் விழ |
கோடு | கொம்பு | கல் | மலை |
முருகு | தேன், மணம், அழகு | மல்லல் | வளம் |
செறு | வயல் | கரிக்குருத்து | யானைத்தந்தம் |
போர் | வைக்கோற்போர் | புரைதப | குற்றமின்றி |
தும்பி | ஒருவகை வண்டு | துவரை | பவளம் |
மரை | தாமரை மலர் | மதியம் | நிலவு |
தீபம் | விளக்கு | சதிர் | நடனம் |
தாமம் | மாலை | ஊழ் | முறை |
தண்பெயல் | குளிர்ந்த மழை | பீடு | சிறப்பு |
ஈண்டி | செறிந்து திரண்டு | தார் | மாலை |
முடி | தலை | முனிவு | சினம் |
அகத்து உவகை | மனமகிழ்ச்சி | தமர் | உறவினர் |
நீபவனம் | கடம்பவனம் | மீனவன் | பாண்டிய மன்னன் |
நுவன்ற | சொல்லிய | என்னா | அசைச் சொல் |
பண்டி | வயிறு | அசும்பிய | ஒளிவீசுகிற |
அரைநாண் | இடையில் அணிவது | சுட்டி | நெற்றியில் அணிவது |
சூழி | தலையில் அணிவது | சுண்ணம் | நறுமணப்பொடி |
காருகர் | நெய்பவர் (சாலியர்) | தூசு | பட்டு |
துகிர் | பவளம் | வெறுக்கை | செல்வம் |
நோனாது | பொறுக்காமல் | தந்தீடு | தாருங்கள் |
ஓவா | ஓயாத | நசை | விருப்பம் |
பிசைந்து | கூட்டி | நல்கல் | அளித்தல் |
கசிந்து | இரங்கி | அண்டர் | தேவர் |