கல்வி, எழுத்தறிவு மற்றும் தொடர்புடைய திட்டங்கள் (Education, Literacy, and Related Schemes)
கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு
யுனெஸ்கோ நிறுவனத்தின் வரையறைப் படி, அன்றாட வாழ்வில் பயன்படும் சிறிய வாக்கியங்களை எழுதவும், வாசிக்கவும் தெரிந்த தன்மை எழுத்தறிவு எனப்படும். கணக்கெடுப்பின் போதைய நடைமுறையில் எழுத்தறிவின் வரையறையானது, "எந்த மொழியிலும் எழுத மற்றும் வாசிக்க தெரிந்த 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர்."
எழுத்தறிவின்மைக்கான காரணங்கள்
- பரவலாகியுள்ள வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை.
- மிக விரைவான மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வளப் பற்றாக்குறை.
- கல்விக்காகும் அதிகபட்ச செலவு.
- ஏற்கனவே படித்த மக்களுக்கு வேலையில்லா நிலை.
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு.
- கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகை போன்றவை கிராமப் பகுதிகளை சென்றடைவதில்லை.
- பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் ஏற்படும் தடைகள்.
கல்வி கற்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு விதிகள்
- அடிப்படை உரிமை: 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாய மற்றும் இலவசக் கல்வியைப் பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இவ்விதி 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 2002-ன் படி சேர்க்கப்பட்டது.
- விதி 45 (அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்): 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல் அரசின் கடமையாகும். இதுவும் 86வது சட்டத்திருத்தப்படி (2002) சேர்க்கப்பட்டது.
- விதி 51 A(K) (அடிப்படை கடமை): 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி கற்பதற்கான வாய்ப்பினை வழங்குவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனான பெற்றோர் மற்றும் காப்பாளரின் கடமையாகும். இதுவும் 86வது சட்டத்திருத்தம் (2002)-ன் படி சேர்க்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள்
தேசிய கல்விக் கொள்கை (1986)
- இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வருதல்.
- மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான பங்களிப்பின் மூலம், குறிக்கோளை நிறைவேற்றுதல்.
- கல்வியைப் பரவலாக்குவதற்கும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் கரும்பலகைத் திட்டம் (1992), மதிய உணவுத் திட்டம் (1995), சர்வ சிக்ஷா அபியான் (2002) போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (1978)
- தொடக்கம்: அக்டோபர் 2, 1978.
- நோக்கம்: 15 முதல் 35 வயதிற்குட்பட்ட எழுத்தறிவற்ற மக்களின் எழுத்தறிவை மேம்படுத்துதல். மக்களிடம், அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விளக்குதல். பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்றோரின் கல்வித் தரத்தை அதிகரித்தல்.
ஊரக (கல்வி) எழுத்தறிவு செயல் திட்டம் (1986)
- தொடக்கம்: மே 1986.
- செயல்பாடு: நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மூலம் "ஒவ்வொருவரும் ஒருவருக்கு கற்றுத் தருதல்" என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
- தோல்விக்கான காரணங்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கட்டமைப்புக் குறைபாடு, ஊழல், அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியமை போன்ற காரணங்களால் இத்திட்டம் தோல்வியடைந்து இறுதியில் 1995-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
மாதிரிப் பள்ளிகள்
மத்திய அரசின் உதவியுடன் 6000 உயர்தர மாதிரிப் பள்ளிகளை நிறுவ 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
தேசிய எழுத்தறிவுத் திட்டம் (1988)
- தொடக்கம்: மே 1988.
- நோக்கம்: 15 முதல் 35 வயதிற்குட்பட்டோருக்கான எழுத்தறிவு செயல் திட்டத்தை கொண்டு வந்தது.
- கூறுகள்:
- மொத்த எழுத்தறிவு செயல்பாடு (Total Literacy Campaign)
- பின் எழுத்தறிவு செயல்பாடு (Post Literacy Campaign)
ஜன் சிகஷன் சன்ஸ்தான் (Jan Shikshan Sansthan - JSS)
இவை முறைசாரா தொழிற்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஆகும். வயது வந்தோருக்குக் கல்வி மற்றும் தொழிற்கல்வியை தருவதே இதன் நோக்கமாகும்.
சாக்ஷர் பாரத் திட்டம் (Sakshar Bharat Mission - SBM)
மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் இந்திய அரசு இணைந்து செப்டம்பர் 8, 2009 அன்று (உலக எழுத்தறிவு நாள்) தொடங்கப்பட்டது. முறையான கல்வியைப் பெறாத வயது வந்தோரின் எழுத்தறிவை மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது.
சர்வ சிக்ஷா அபியான் (SSA)
- நோக்கம்: தொடக்கக் கல்வியை அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் பொருட்டு கொண்டு வரப்பட்டது. 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயனுள்ள தொடக்க கல்வியை 2010க்குள் கிடைக்கச் செய்வது.
- செயல்பாடு: மத்திய, மாநில, மற்றும் பஞ்சாயத்து அரசுகளின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது.
- குறிக்கோள்கள்:
- 2007-ம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளும் 5-ஆம் வகுப்பு வரை கல்வி பயிலச் செய்தல்.
- 2010-ம் ஆண்டிற்குள் எட்டாம் வகுப்பு வரை கல்வி தருதல்.
ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA)
- தொடக்கம்: மார்ச் 2009.
- நோக்கம்: இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் மற்றும் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தல். 10 ஆம் வகுப்பு வரையிலான கல்விக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
- நிதிப் பங்கீடு: மத்திய மற்றும் மாநில அரசின் செலவு முறையே 75:25 (வடகிழக்கு மாநிலங்களில் 90:10).
- குறிக்கோள்கள்:
- குடியிருப்புப் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவிற்குள் இடைநிலைக் கல்வி நிலையத்தையும், 7 முதல் 10 கி.மீ தொலைவிற்குள் மேல்நிலைக் கல்வி நிலையத்தையும் அமைத்தல்.
- இடைநிலைக் கல்வியானது, 2017-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கிடைக்கும் படிச் செய்தல்.
- அனைவரும் (இடைநிலைக் கல்வி) கற்றறிந்த நிலையை 2020-க்குள் ஏற்படுத்துதல்.
கல்வி கற்கும் உரிமைச் சட்டம் (2009)
- அம்சம்: இந்தியக் கல்வி முறையை வலுவாக்க கொண்டு வரப்பட்ட இச்சட்டம் ஒரு மைல்கல் ஆகும். இதன்மூலம் கல்வி ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமையாகிறது.
- விதிகள்:
- அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
- தனியார் பள்ளிகளில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீத பேருக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்.
- தொடக்கக் கல்வியை (எட்டாம் வகுப்பு) முடிக்கும் வரை எந்தக் குழந்தையையும், பள்ளியை விட்டு வெளியேற்றுவதோ அல்லது தேர்வுகளில் தோல்வியடையச் செய்வதோ கூடாது.
- 3 வருடங்களுக்குள், அனைத்துப் பள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளை பெறுதல் வேண்டும்.
- ஐந்து வருடங்களுக்குள் கற்பிக்கத் தேவையான கல்வித் தகுதியை அனைத்து ஆசிரியர்களும் பெற்றிருத்தல் வேண்டும்.
தேசிய அறிவுசார் குழு (National Knowledge Commission - NKC)
- அமைப்பு: ஜூன் 13, 2005.
- தலைவர்: சாம் பிட்ரோடா.
அறிக்கை - I (ஜனவரி 12, 2007)
- செயல்பாடுகள்:
- அனைத்து மக்களுக்கும் அறிவு கிடைக்கப்பெறச் செய்தல்.
- இளைஞர்களின் திறமைகள் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக் கொணர்தல்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அறிவினை வளர்த்தல்.
- பரிந்துரைகள்:
- 2015-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 1500 ஆக உயர்த்துதல்.
- 50 தேசியப் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல்.
- உயர்கல்வியை ஒழுங்குபடுத்த, ஒரு சுதந்திரமான அமைப்பை நிறுவுதல்.
- ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை பாட அமைப்பை மாற்றுதல்.
- ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மொழியை கற்பிக்க வேண்டும்.
- மேற்கூறியவற்றை நடைமுறைப்படுத்த, தேசிய மொழிபெயர்ப்பு திட்டம் (National Translation Mission) ஒன்றையும் வலைத்தளத்தையும் உருவாக்குதல்.
அறிக்கை - II (ஜனவரி 21, 2008)
- சாம் பிட்ரோடா தலைமையிலான தேசிய அறிவுசார் குழுவின் இரண்டாவது ஆண்டு அறிக்கை.
- இரண்டு அறிக்கைகளிலும், மொத்தமாக 20 தலைப்புகளில், 160 செயல்பாட்டுப் பொருட்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- தேசிய அறிவுசார் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும், பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான நிதி ஒதுக்கப்பட்டது.
கல்விக் குழுக்கள்
குழு | ஆண்டு | தலைமை/பரிந்துரை |
---|---|---|
பல்கலைக்கழக மானியக் குழு | 1948 | டாக்டர் ராதா கிருஷ்ணன் |
இடைநிலைக் கல்விக் குழு | 1953 | டாக்டர். இலட்சுமண முதலியார் |
தேசிய கல்விக் குழு | 1968 | டி. எஸ் கோத்தாரி (10+2 கல்வி முறையை பரிந்துரைத்தது) |
தேசிய கல்விக் கொள்கை | 1986 | - |
குறைந்தப் பட்ச கற்றல் திட்டம் | 1991 | - |
கரும்பலகைத் திட்டம் | 1992 | - |
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள்
- சென்னை மருத்துவப் பள்ளி: 1835 (பின்னர் கல்லூரி)
- சென்னை மாநிலப் பள்ளி: 1836 (பின்னர் கல்லூரி)
- சென்னை கிறிஸ்துவ பள்ளி: 1840 (பின்னர் கல்லூரி)
- சென்னை பச்சையப்பன் பள்ளி: 1841 (பின்னர் கல்லூரி)
- சென்னை ஓவியக் கல்லூரி: 1835
- சென்னை மாநிலக் கல்லூரி: 1851
- பொறியியல் கல்லூரி, கிண்டி: 1857
- சட்டக் கல்லூரி, சென்னை: 1891
தமிழக பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகம் | இடம் | ஆண்டு |
---|---|---|
சென்னை பல்கலைக்கழகம் | சென்னை | 1857 |
அண்ணாமலை பல்கலைக்கழகம் | சிதம்பரம் | 1929 |
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் | மதுரை | 1966 |
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | 1971 |
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் | திண்டுக்கல் | 1976 |
அண்ணா பல்கலைக்கழகம் | சென்னை | 1978 |
தமிழ் பல்கலைக்கழகம் | தஞ்சாவூர் | 1981 |
பாரதியார் பல்கலைக் கழகம் | கோயம்புத்தூர் | 1982 |
பாரதிதாசன் பல்கலைக் கழகம் | திருச்சி | 1982 |
அன்னைதெரசா மகளிர் பல்கலைக் கழகம் | கொடைக்கானல் | 1984 |
அழகப்பா பல்கலைக்கழகம் | காரைக்குடி | 1985 |
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் | சென்னை | 1987 |
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் | திருநெல்வேலி | 1990 |
தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் | சென்னை | 1997 |
பெரியார் பல்கலைக்கழகம் | சேலம் | 1997 |
திருவள்ளுவர் பல்கலைக் கழகம் | வேலூர் | 2001 |
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் | சென்னை | 2002 |
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் | சென்னை | 2005 |
மத்திய பல்கலைக் கழகம் | திருவாரூர் | 2009 |
மத்திய அரசு நிறுவனங்கள்
- தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT): திருச்சி (1964)
- இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT): சென்னை (1959)
- மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI): சென்னை (1940)
- தேசிய காச நோய் ஆராய்ச்சி நிலையம்: சென்னை (1956)
- மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம்: சென்னை (1947)
- தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம்: சென்னை (1993)
- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI): காரைக்குடி
- இந்திய மேலாண்மைக் கழகம் (IIM): திருச்சி (2011)
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி காலக்கோடு
- 1953: குலக்கல்வி திட்டம் (ராஜாஜி காலம்)
- 1956: மதிய உணவுத் திட்டம் அறிமுகம் (காமராசர்)
- 1964: உயர்நிலைக் கல்வி (10-ஆம் வகுப்பு) வரை இலவச கல்வி
- 1965: மும்மொழித் திட்டம் அறிமுகம்
- 1978: மேல்நிலைப்பள்ளி கல்வி முறை (+2) அறிமுகம்
- 1982: சத்துணவுத் திட்டம் அறிமுகம் (எம்.ஜி.ஆர்)
- 2001: மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் தொடக்கம்
- 2010: சமச்சீர் கல்வி முறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி அமைப்பு
முத்துகுமரன் கமிட்டி பரிந்துரையின் பேரில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
எழுத்தறிவு புள்ளிவிவரங்கள் (2011 கணக்கெடுப்பு)
இந்தியா
- மொத்த எழுத்தறிவு விகிதம்: 74.04%
- ஆண்கள் எழுத்தறிவு: 82.14%
- பெண்கள் எழுத்தறிவு: 65.64%
- அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலம்: கேரளா
தமிழ்நாடு
- மொத்த எழுத்தறிவு விகிதம்: 80.33%
- ஆண்கள் எழுத்தறிவு: 86.81%
- பெண்கள் எழுத்தறிவு: 73.86%
எழுத்தறிவு அதிகமுள்ள 5 மாவட்டங்கள்
- கன்னியாகுமரி - 92.1%
- சென்னை - 90.3%
- தூத்துக்குடி - 86.5%
- நீலகிரி - 85.7%
- காஞ்சிபுரம் - 85.2%
எழுத்தறிவு குறைவான 5 மாவட்டங்கள்
- தர்மபுரி
- அரியலூர்
- விழுப்புரம்
- கிருஷ்ணகிரி