Skip to main content

Energy Sector and Development (ஆற்றல் துறை மற்றும் மேம்பாடு)

Timeline of India's Energy Sector Development
குறிப்பு

பின்வரும் சில நலத்திட்டங்கள் மூல உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன:

  • இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம்
  • ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
  • இலவச சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்பு
  • 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம்

ஆற்றல் மூலங்கள் (Energy Sources)

அலையாற்றல் (Tidal Energy)

இந்தியாவில் 4000 MW அளவு அலை ஆற்றல் உற்பத்தி செய்ய இயலும். கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் அலை ஆற்றல் உற்பத்தி செய்யும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மற்றோர் அமைப்பு, அந்தமான் தீவுகளில் அமைந்துள்ளது.

நீராற்றல் (Hydro Power)

நீர்ஆற்றல் கூடங்கள் விழுகின்ற நீரின் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. நீர் மின்னாற்றலை உற்பத்தி செய்வதற்காகப் பெரிய நீர்த் தேக்கங்களில் நீரை சேகரிப்பதால் நீரோட்டத்தைத் தடை செய்யவும் ஆற்றின் மீது மிக உயரமான அணைகள் கட்டப்படுகின்றன. இதனால் நீர் மட்டம் உயர்கிறது. மேலும் இச்செயல் முறையில் பாயும் நீரின் இயக்க ஆற்றல் நிலை ஆற்றலாக மாற்றப்படுகிறது.

கழிவுகளிலிருந்து ஆற்றல் (Waste to Energy)

முதல் தர நகரங்களிலிருந்து 30 மில்லியன் டன் நகரத் திடக் கழிவுகள் வெளியாகின்றன. இது தவிர தொழிற்சாலைகள் மூலமும் (சர்க்கரை ஆலை, காகித ஆலை) கழிவுகள் வெளியேறுகின்றன. இதிலிருந்து பெறப்படும் மொத்த ஆற்றல் 2700 MW ஆக இருக்கும் என கணக்கிடப் படுகிறது.

பெருங்கடல் வெப்ப ஆற்றல் (Ocean Thermal Energy Conversion - OTEC)

கடல் அல்லது பெருங்கடலின் ஆழ்பகுதியில் நீர் குளிர்ச்சியாய் இருக்கின்ற பொழுது மேற்பரப்பில் உள்ள நீர் சூரியனால் வெப்பப்படுத்தப்படுகிறது. வெப்பநிலையில் உள்ள இவ்வேறுபாடு பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றக் கலனில் ஆற்றலைப் பெறப் பயன்படுத்தப் படுகிறது. 2 கி.மீ ஆழத்தில் உள்ள நீருக்கும் மேற்பரப்பில் உள்ள நீருக்கும் இடையிலான வேறுபாடு 293 K (20°C) அல்லது அதிகமாக இருந்தால், இத்தகைய திட்டம் செயல்பட முடியும்.

மேற்பரப்பில் வெப்பமான நீர் அம்மோனியா போன்ற ஆவியாகும் திரவங்களை கொதிக்க வைக்க உபயோகிக்கப்படுகிறது. திரவத்தின் ஆவி மின்னியற்றியின் விசையாழியை இயக்க உபயோகிக்கப் படுகிறது. மாக்கடலின் ஆழத்தில் உள்ள குளிர்ந்த நீர் மேலே கொண்டு வரப்பட்டு ஆவி மீண்டும் திரவமாக குளிர்விக்கப்படுகிறது. கடலில் இருந்து கிடைக்கின்ற ஆற்றல் மிக அதிகமாக இருக்கிறது, ஆனால் திறன்மிகு வர்த்தக பயன்பாட்டில் கடினமாக இருக்கிறது. 5000 MW அளவிற்கு இந்தியாவில் OTEC மூலம் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் OTEC உலை தமிழ்நாடு கடற்கரையோரத்தில் நிறுவுவதற்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் திறன் 100 MW ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆற்றல் மேம்பாடு (Energy Development)

இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். எனவே ஆற்றலுக்கான தேவைகளும் நாள்தோறும் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மின் உற்பத்தி என்பது 1887 ஆம் ஆண்டிற்கு பின்னர்தான் தொடங்கியது.

  • 1887: டார்ஜிலிங்கில் நீர் மின்சக்தி நிலையம் ஒன்று துவங்கப்பட்டது.
  • 1902: சிவசமுத்திரம் (கர்நாடக மாநிலம்) நீர்வீழ்ச்சியில் நீர் மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்டது.
  • 1954: அணு ஆற்றல் நிறுவனம் டிராம்பேயில் துவங்கப்பட்டது. பின்னர் 1967-ல் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1962: முதல் கனநீர் அணு உலை நங்கல் எனுமிடத்தில் துவங்கப்பட்டது. மற்ற கனநீர் அணு உலைகள் இருக்கும் இடங்களாவன: வதோரா, தூத்துக்குடி, கோடா, தால், ஹாசிரா, மங்களுர்.
  • 1975: தேசிய நீர்மின்நிலையம் (NHPC) (மினிரத்னா நிறுவனம்) தொடங்கப்பட்டது.
  • 1975: தேசிய அனல் மின் கழகம் (NTPC) அனல் மின் சக்தியை உருவாக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தற்போது NTPC-ன் கீழ் நிலக்கரி சார்ந்த சூப்பர் அனல் மின் திட்டங்கள் 15-ம், வாயு/நீர்ம அடிப்படை கொண்ட கூட்டு சுழற்சி திட்டங்கள் 7-ம் செயல்படுகின்றன.
  • 1982: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை தொடங்கப்பட்டது.
  • 1987: இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு ஆணையம் (IREDA) ஆரம்பமானது. 1992-ஆம் ஆண்டு இவ்வாணையம் மரபு சாரா ஆற்றல் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மின்சாரநிதி கழகம் (Power Finance Corporation)

மின்சாரநிதி கழகம் (Power Finance Corporation) அட்டவணை "அ"-ன் கீழ் வரும் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஜூலை 16, 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது வங்கி சாரா நிதியுதவி அளிக்கும் நிறுவனமாகும். நவரத்னா அந்தஸ்து பெற்றது. இந்திய மின்சக்தி துறையை மேம்படுத்தும் பொருட்டு நிதி சார்ந்த மற்றும் நிதி சாரா உதவியை இக்கழகம் வழங்குகிறது.

பவர் கிரிட் கழகம் (Power Grid Corporation)

இந்திய அரசு நிறுவனமாக அக்டோபர் 23, 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது. பகுதிகள்/மாநிலங்களுக்கிடையே மின்சாரத்தை, பாதுகாப்பாகவும், குறைவான செலவிலும், நம்பகத்தன்மை உடையதாகவும் கொண்டு செல்ல பவர் கிரிட் கழகம் தேவையான வழித் தடங்களைக் கட்டமைக்கிறது.

திட்டங்கள் மற்றும் இலக்குகள் (Schemes and Targets)

பதினோராவது ஐந்தாண்டு திட்ட இலக்கு (Eleventh Five-Year Plan Target)

11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) மின் உற்பத்திக்கான இலக்கு 78,700 MW (Mega Watt) என நிர்ணயிக்கப்பட்டது. எனினும் திட்ட முடிவில் 54,964 MW என்ற இலக்கே எட்டப்பட்டது. இந்த உற்பத்தி, 10 வது ஐந்தாண்டு திட்டத்தின் போதான உற்பத்தியை விட இரண்டரை மடங்கு அதிகம்.

மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority - CEA)

மத்திய மின்சார ஆணையம் (CEA) 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மின்சாரச் சட்டம் 2003, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வு போன்றவற்றில் 100% அந்நிய முதலீட்டிற்கு (Automatic Approval) அனுமதி வழங்கியுள்ளது.

தீவிர மெகா சக்தி திட்டம் (Ultra Mega Power Projects - UMPP)

12 வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 தீவிர மெகா சக்தி திட்டங்களுக்கு (Ultra Mega Power Project) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவையாவன:

  • சாசன் (மத்தியப் பிரதேசம்)
  • முந்த்ரா (குஜராத்)
  • கிருஷ்ணாம்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்)
  • தில்லையா (ஜார்கண்ட்)
  • சட்டீஸ்கர்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

ராஜீவ் காந்தி கிராமின் வித்யூகரன் திட்டம் (Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana)

கிராமப் பகுதியில் உள்ள குடியிருப்பு களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டமாகும். இது மார்ச் 2005-இல் தொடங்கப்பட்டது. ஊரக மின்சார கழகம் (நவரத்னா நிறுவனம்) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


நிதிக் குழு (Finance Commission)

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 280வது ஷரத்து நிதிக்குழு பற்றிக் குறிப்பிடுகிறது. நிதிக்குழு பகுதியளவு அதிகாரம் கொண்ட நீதி அமைப்பு போன்று செயல்படுகிறது. குடியரசுத் தலைவரால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதிக்குழு அமைக்கப்டுகிறது.