Skip to main content

Human Rights (மனித உரிமைகள்)

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் மனித உரிமைகளின் நடைமுறைப் பயன்பாடு, குறிப்பாக பெண்கள் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றுள்ளது.

  • புதுமையான நிதிச் சேவைகள், காப்பீடு, கடன் மற்றும் சமூக உதவிகளை அணுக பெண்களுக்கு சம வாய்ப்பை வழங்கியுள்ளது.
  • மைக்ரோசாப்ட், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (NSDC) இணைந்து, இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பின்தங்கிய பெண்களுக்கு டிஜிட்டல் திறன்களை வழங்கும் முயற்சியை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், குறிப்பாக முதல் முறை வேலை தேடுபவர்கள் மற்றும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு, நேரடி பயிற்சி அமர்வுகள் மற்றும் டிஜிட்டல் திறன் இயக்கங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆசாத் அறக்கட்டளையின் 'வுமன் ஆன் வீல்ஸ்' (Woman on Wheels) திட்டம், அனைத்து பெண்களையும் கொண்ட ஒரு வண்டி நிறுவனத்தை உருவாக்கி, வறிய பெண்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தையும், துன்புறுத்தல் குறித்த அச்சமின்றி பயணிக்க பாதுகாப்பான சூழலையும் வழங்குகிறது.

Defining Human Rights (மனித உரிமைகள் வரையறை)

மானுடக் குடும்பத்தில், ஒவ்வொரு மனித உயிரும் சமமான உறுப்பினர் என்பதை நிறுவும்படியான மதிப்புயர்ந்த மானுட இருப்பின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி வரையறுக்கப்பட்டவையே நடைமுறையில் 'மனித உரிமைகள்' ஆகும். மானுட மாண்பு என்பது மனித உரிமைகளின் சாரம் ஆகும். இந்த அம்சத்தைப் பற்றிய பரந்த புரிதலும், ஒரு தனி நபரின் மதிப்புயர் தன்மையின் எல்லையை மதித்து அங்கீகரித்தலுமே மனித உரிமைகளின் உண்மையான வாய்ப்பை வரையறுப்பவையாக அமைகின்றன.

Features of Human Rights (மனித உரிமைகளின் அம்சங்கள்)

  • மக்கள் மனிதர்களாக இருக்கிற காரணத்தினாலேயே உரிமைகளைப் பெற்றிருப்பவர்களாகின்றனர்.
  • அனைத்து மக்களும் ஒரு மதிப்புயர்ந்த மானுட வாழ்க்கையை நடத்திச் செல்லுவதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
  • மேலும் எல்லா மக்களுக்கும் இந்த உரிமைகள், சாதி, நிறம், மதம் மற்றும் பாலின அடிப்படையில் மறுக்கப்படக் கூடாதவையாகும்.

Universal (உலக முழுவதற்குமானவை)

தேசம், இனம், பால் அல்லது நிறம் ஆகிய எதையும் மனித உரிமைகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எல்லா நாடுகளையும் சேர்ந்த அனைத்து நிறத்தவர், இனத்தவர், மதத்தவர் அனைவரும் ஒரே விதமான உரிமைகளைப் பெற்றிருப்பவர்களே. உலகின் எல்லாக் கண்டங்களிலும் உள்ள வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே வித உரிமைகளைக் கட்டாயம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

Equal for All (அனைத்து மக்களையும் சமமானவர்களாக நடத்துபவை)

"எல்லா மனித உயிர்களும் உரிமைகளிலும் கௌரவத்திலும் சுதந்திரமாகவும், சமமாகவுமே பிறக்கின்றன" என்ற கருத்தாக்கத்தை இது பின்பற்றுகிறது. ஆகவே அவர்களுடைய வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள், அரசியல் ஈடுபாடுகள், பாலியல், சமூக அடித்தளம், அந்தஸ்து, பிற போன்றவற்றை மதிக்கிற அதே சம காலத்தில் ஒரே விதமான வாய்ப்புகளுக்கும் தகுதி படைத்தவையுமாகும். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கங்கள் கட்டாயம் பணியாற்றியாக வேண்டும். மேலும் சமுதாயத்திலுள்ள சில மக்கள் பிரிவுகளுக்கு, உதாரணமாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மேற்கண்டவாறு ஒரே விதமான வாய்ப்புகளை வழங்குவது என்பது கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் கொண்டிருக்கக்கூடும்.

Individual-Centric (தனிநபர்களைச் சேர்ந்தவையே)

இதனுடைய பொருள், அரசுக்கும், ஒரு தனிநபருக்குமிடையே நிலவுகிற உறவைப் பொறுத்தே இவை தொடர்புடையனவாகின்றன என்பதே. இதன் விளைவாக ஒவ்வொரு தனிநபரும் அவன் அல்லது அவளுடைய உரிமைகளை முழுமையாக அனுபவிக்கவும், சுதந்திரமாகச் செயல்படுத்தவும் முடிகிற ஒரு சமுதாயத்தை உருவாக்கித் தர வேண்டிய கடமையும் அரசுக்கே உரியதாகிறது.

Fundamental Principles of Humanity (மனித நேயத்தின் அடிப்படைக் கொள்கைகள்)

  • மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் மனித கௌரவத்தின் பொருட்டும் இவ்வுரிமைகள் அடிப்படையானவை என்று கருதப்படுகின்றன.
  • இத்தகைய உரிமைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள், வாழ்க்கைக்கான உரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை மற்றும் சித்திரவதையிலிருந்து விடுதலை போன்றவைகளாகும்.

Beyond National Borders (தேசிய எல்லைகளுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல)

மனித உரிமைகளின் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு என்பது தேசிய எல்லைகளுக்குட்பட்டது மட்டுமே என்பதல்ல, மாறாக உலக முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில இலட்சியங்களை அவை வலியுறுத்துகின்றன. இந்த மனித உரிமைகளுக்கான மரியாதை, மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களை நிறைவு செய்து தர வேண்டிய கடமை நாடுகளுக்கு உண்டு என்பதை மனித உரிமைகள் கொண்டுள்ளன.

Key Milestones in Human Rights (மனித உரிமைகளுக்கான முக்கிய மைல்கற்கள்)

  • 1215 - மகாசாசனம் (Magna Carta)
  • 1776 - அமெரிக்க பிரகடனம் மற்றும் உரிமைகள் மசோதா (American Declaration and Bill of Rights)
  • 1787 - ஐக்கிய நாடுகளின் அமைப்புச் சட்டம் (United States Constitution)
  • 1789 - மனிதனின் உரிமைகள் மீதான பிரெஞ்சு பிரகடனம் (French Declaration of the Rights of Man)
  • 1946 - மனித உரிமைகள் மீதான ஐ.நா. ஆணையம் (UN Commission on Human Rights)
  • 1948 - மனித உரிமைகளின் சர்வதேசப் பிரகடனம் (Universal Declaration of Human Rights)
  • 1950 - மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களின் பாதுகாப்பிற்கான ஐரோப்பிய மாநாடு (European Convention for the Protection of Human Rights and Fundamental Freedoms)
  • 1961 - ஐரோப்பிய சமூக சாசனம் (European Social Charter)
  • 1966 - பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாடு (ICESCR); குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாடு (ICCPR)
  • 1993 - மனித உரிமைகள் மீதான உலக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் திட்டம் மற்றும் வியன்னா பிரகடனம் (Vienna Declaration and Programme of Action)

Human Rights in the Indian Constitution (இந்திய அரசியல் சட்டத்தில் மனித உரிமைகள்)

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை முறைப்படி அங்கீகரித்துள்ளது.

Part III: Fundamental Rights (பகுதி III: அடிப்படை உரிமைகள்)

அரசியலமைப்பின் பகுதி III-ல் சில அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சமத்துவ உரிமை, மத சுதந்திரத்திற்கான உரிமை, கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள், மற்றும் அரசியல் சட்டரீதியான தீர்வுகளுக்கான உரிமை போன்றவை உள்ளடங்கியுள்ளன. இந்த அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் மூல நீதிப் பரப்பெல்லை என்ற வடிவத்தில், அரசியல் சட்ட ரீதியான தீர்வுக்கான உரிமையை விதி 32 அறிவித்துள்ளது. இது தங்களின் மனித உரிமைகளின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக தனிநபர்களைப் பாதுகாப்பதற்கானதாகும்.

Part IV: Directive Principles of State Policy (பகுதி IV: அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டி நெறிகள்)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதி, அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டி நெறிகளைக் (DPSP) கொண்டுள்ளது. இவை அரசு தன்னுடைய கொள்கைகளின் உருவாக்கத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய, அடிப்படையில் அரசாங்க நிர்வாகத்திற்கான நெறிகளாகும். இவற்றுள் அரசின் பின்வரும் கடமைகள் உள்ளடங்கியுள்ளன:

  • மக்களுடைய நலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது.
  • சமூக நீதி, வேலைக்கான உரிமை, கல்வி மற்றும் மனிதத்தன்மை மிக்க சூழல்களுக்கான ஏற்பாடு.
  • பலவீனமான மக்கள் பகுதிகளின் நலன்களை முன்னெடுப்பது.
  • வாழ்க்கைத் தரங்களின் மட்டங்களையும் ஊட்டச்சத்துமிக்க உணவுத் தரத்தையும் உயர்த்துவதற்கான கடமை, மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது.
  • சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது மற்றும் வன விலங்குகளின் வாழ்வைப் பாதுகாத்து மேம்படுத்துவது.